‘டிஜிட்டல் பல்கலைக்கழகம்: உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு
அணுகலை விரிவுபடுத்துதல், தரமான கல்வியை மேம்படுத்துதல், திறனை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் கல்வி சூழலை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கல்வி மற்றும் திறன் வளர்த்தல் துறைக்காக மத்திய பட்ஜெட் 2022-ல் செய்யப்பட்ட அறிவிப்புகள் கவனம் செலுத்துகின்றன.
மத்திய பட்ஜெட் 2022-ல் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும், டிஜிட்டல் கல்வி மற்றும் ஆற்றல்மிக்க திறன் என்ற அமிர்த மந்திரத்தின் வாயிலாக தற்சார்பு பற்றிய வலையரங்கிற்கு கல்வி அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தன. .
வலையரங்கின் கீழ், ‘டிஜிட்டல் பல்கலைக்கழகம்: உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுதல்’ என்ற தலைப்பிலான அமர்வு பிப்ரவரி 21, 2022 அன்று நடைபெற்றது.
பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வலையரங்கில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். ‘டிஜிட்டல் பல்கலைக்கழகம்: உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வுக்கு திரு கே சஞ்சய் மூர்த்தி, உயர்கல்வி செயலாளர்; மற்றும் திரு கே ராஜாராமன், செயலாளர், தொலைத்தொடர்பு துறை தலைமை வகித்தனர்.
பிரமல் குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஸ்வாதி பிரமல், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் எம் ஜெகதேஷ் குமார் ஆகியோர் அமர்வின் உறுப்பினர்களாக இருந்தனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே இந்த அமர்வை நெறிப்படுத்தினார்.
அரசு தனியார் கூட்டு முறையில் விரிவான கல்வித் தொழில்நுட்ப சூழலியலை உருவாக்குதல், டிஜிட்டல் தளம், உள்ளடக்க உருவாக்கம், பயனுள்ள டிஜிட்டல் கற்பித்தல், ஒரே நேரத்தில் மற்றும் வலுவான ஆசிரியப் பயிற்சி, மெய்நிகர் ஆய்வகங்கள் மற்றும் டிஜிட்டல் கற்பித்தல்-கற்றல் மதிப்பீடு உள்ளிட்ட டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான பரந்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
பன்மொழிகளுடன் கூடிய எளிதில் கிடைக்கக்கூடிய கற்றல் மேலாண்மை அமைப்பு, ஈர்க்கக்கூடிய ஆழ்ந்த கற்றல் அனுபவங்களை உருவாக்குதல், வலுவான கற்றல் சமூகங்களை உருவாக்க சக மாணவர்களை இணைத்தல் மற்றும் ஆன்லைன் கல்வியை நேரடி முறையுடன் (ஃபி-ஜிடல்) கலந்து செயல்படுதல் குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தினர்தொலைதூரங்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வியை கொண்டு சேர்க்க ஒரு வகுப்பு- ஒரு சேனல் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கு
கல்வித்துறையில் மத்திய பட்ஜெட் 2022 அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு கல்வி அமைச்சகம் பிப்ரவரி 21-ந் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
தொலைதூரங்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வியை கொண்டு சேர்க்க ஒரு வகுப்பு- ஒரு சேனல் திட்டத்தை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.
இது குறித்த அமர்வு, புதுதில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நாகேஸ்வரராவ் தலைமையில் நடைபெற்றது. தாய்மொழியில் மின்னணு அம்சங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். 2020-ம் ஆண்டு பிரதமரின் இ-வித்யா திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வகுப்பு, ஒரு சேனல் முன்முயற்சி அனைத்து 12 வகுப்புகளுக்கும் 2020 செப்டம்பர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது.
பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் அரசு மற்றும் அரசு அல்லாத அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். கருத்தரங்கின் கடைசி அமர்வுக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் தலைமை வகித்தார். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்
கருத்துகள்