நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என். ரவியின் மகளுக்கு நாளை திருமணம் நடக்கிறது.
ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட. திருமணத்தை எளிமையாகவும், அமைதியாகவும் நடத்த திட்டமிட்டு அதற்கான இயற்கை எழில் சூழ்ந்த ஊட்டியைத் தேர்வு செய்தார் ஆளுநரின் மற்றொரு நிர்வாகம் நடக்கும் ராஜ் பவன் உள்ளது. அதன்படி ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவனில்
நாளை பிப்ரவரி 21 ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதிகளில் திருமண நிகழ்வுகள் நடக்கின்றன. அதற்காக ஆளுநர் ரவி ஏழு நாட்கள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோயமுத்தூர் வந்து, அங்கிருந்து கார் மூலம் அவர் நீலகிரிக்குச் சென்றார்.அவருடன் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினர் வந்துள்ளனர்.
ஊட்டி ராஜ்பவனில் தங்கி உள்ளனர். பிப்ரவரி 24 ஆம் தேதி வரை ஆளுநர் ஊட்டியிலேயே தங்க உள்ளார்.
திருமணத்திற்கு ராஜ்பவன் மாளிகை முழுவதும் வர்ணம் பூசி பொலிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர மாளிகை முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடந்தது.
கொரோனா காலம் என்பதால் ஆளுநரின் மகள் திருமணம் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் நடக்கிறது. இந்த திருமணத்தில் யார்? யார்? கலந்து கொள்கிறார்கள். எத்தனை பேர் பங்கேற்கிறார்கள்? என்ற எந்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
திருமண நிகழ்வில் ஆளுநர் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
திருமண நிகழ்வில் பங்கேற்கும் உறவினர்களுக்காக ஊட்டியிலுள்ள மூன்று தனியார் ஹோட்டல்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தில் பங்கேற்பதற்காக ஆளுநரின் உறவினர்கள் அனைவரும் இன்று ஊட்டிக்கு வந்தனர். அவர்கள் ஹோட்டல்களில் தங்கி இருந்து திருமணத்தில் பங்கேற்கின்றனர்.
திருமணத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் ராஜ்பவன் மாளிகையில் மும்முரமாக நடக்கிறது. இந்தப் பணிகளை ஆளுநர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு ராஜ்பவன் மாளிகை, தாவரவியல் பூங்கா, உறவினர்கள் தங்க உள்ள தனியார் ஹோட்டல்கள் என ஊட்டி முழுவதும் காவல்துறையினர் தீவிரமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநர் ரவி, தன் மகளின் திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி ஊட்டியிலிருந்து மீண்டும் சென்னை திரும்புகிறார்.
கருத்துகள்