வாழ்க்கை முறையில் ஆயுஷ் ஒருங்கிணைப்பு
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:ஆயுஷ் அடிப்படையிலான உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஆயுஷ் அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது மற்றும் ஊட்டச்சத்து மிக்க இந்தியா என்ற இலக்கை அடைய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுகிறது.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடம் ஊட்டச்சத்தை மேம்படுத்த, ‘ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆயுஷ் உணவு ஆலோசனை ’ என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட ஊட்டசத்து தரநிலைகளை மாற்றியமைப்பதில் உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு தேவையான ஆலோசனைகளை ஆயுஷ் அமைச்சகம் வழங்குகிறது.
ஆயுஷ் மருந்துகளை ஊக்குவிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலம் தேசிய ஆயுஷ் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் அமல்படுத்துகிறது.
தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் ஆயுஷ் சுகாதார நல மையங்களை செயல்படுத்தி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய ஆயுர்வேத திட்டத்தின் ஆயுர்வித்யா பிரிவின் கீழ் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த ஆயுஷ் உணவு கல்வியை ஊக்குவிக்கும் வழிமுறை உள்ளது.
தேசிய ஆயுர்வேத திட்டத்தின், கிராம ஆயுஷ் பிரிவின் கீழ், ஆயுஷ் அடிப்படையிலான வாழ்க்கை முறை ஊக்குவிக்கப்படுகிறது. கிராமத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு, உள்ளூர் மூலிகைகளின் பயன்பாடு குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கருத்துகள்