விவசாயத்தில் ரசாயனமற்ற உரங்களின் பயன்பாடு
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு பகவந்த் குபா கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
உள்ளீட்டு கணக்கெடுப்பு 2016-17-ன் தரவுகளின்படி, அனைத்து பயிர்களின் பரப்பளவு 192439588 ஹெக்டேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 147283856 ஹெக்டேர் பரப்பளவு அதாவது 76.53 சதவீதம் ஒன்றுக்கு மேற்பட்ட ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டது ஆகும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பயிர்களின் நுகர்வு பற்றிய தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை.
இயற்கை மற்றும் உயிரி உரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை மதிப்பு சங்கிலி மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்களை 2015-16-ம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தி வருகிறது.
உயிரி மற்றும் இயற்கை உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இயற்கை வேளாண்மைத் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா கீழ் ஹெக்டேருக்கு ரூ 31,000 மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை மதிப்பு சங்கிலி மேம்பாட்டின் கீழ் ஹெக்டேருக்கு ரூ 32,000 வழங்கப்படுகிறது.
மண் சுகாதார மேலாண்மை திட்டங்களின் கீழ், புதிய உயிரி உர அலகை (200 மெட்ரிக் டன்/50000 லிட்டர் கொள்ளளவு) நிறுவ ரூ 160.00 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் கீழ் இதுவரை 15 உயிர் உர உற்பத்தி அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.
கருத்துகள்