முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தாக்கல் செய்த 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சாராம்சம்


தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று று தாக்கல் செய்தார்.


தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021 ஆம் ஆண்டு முந்தைய எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக ஆட்சி முதல் பகுதி நிதிநிலை அறிக்கை தாக்கலைத் தொடர்ந்து பிந்தைய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ததையடுத்து தற்போது முதல்வர் மு.க. ஸடாலின் தலைமையிலான திமுக அரசு முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அதையொட்டி சட்ட மன்றப் பேரவை வெள்ளிக்கிழமை  சபாநாயகர் அப்பாவு தலைமையில்  கூடியது பேச வாய்ப்பளிக்குமாறு எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி  கே.பழனிசாமி கோரினார்.ஆனால், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு அது குறித்து பரிசீலிப்பதாக சட்டமன்றப் பேரவையில் சபாநாயகர் கூறியதையடுத்து அவையிலிருந்த அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக கூச்சலிட்ட.


அமளிக்கு மத்தியில் நிதிநிலை அறிக்கை அம்சங்களை விளக்கி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசத் தொடங்கினார். காகிதமில்லா  நிதிநிலை அறிக்கை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.


தமிழர் மரபு, பண்பாட்டைக் கருத்தில் கொண்டு, முன்னோர்களை, திராவிடத் தலைவர்களை வணங்கித்  தொடங்குவதாக நிதி அமைச்சர் பேசத் தொடங்கினார்.தமிழக  2022 - 2023 நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்:-


மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. விவசாயத்துக்கான நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது.


திருக்குறளை மேற்கோள் காட்டி உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் எதிர்கால சந்ததியின் நலனைக் கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று பேசினார் அப்போது 


நிதிநிலை அறிக்கை உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், வெளிநடப்புச் செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை குறைகிறது - 


முதல்வரின் தனிப்பட்ட முகவரி குறைதீர் திட்டத்தின் கீழ் 10,01,883 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது - 

தமிழ்நாடு அரசின் நிதிநிலை வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.


அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு.

 ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள நேரிடும்

தமிழ் மொழியின் தொன்மை, செம்மையை நிலைநாட்டிட நடவடிக்கை

 அகர முதலி உருவாக்கும் திட்டத்திற்கு ரூபாய் .2 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழர்களின் தொன்மையை பறைசாற்ற கீழடி, சிவகலை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது

தந்தை பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் அச்சிடப்படும்.

 பெரியார் ஈ.வே.ரா எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிலங்களில் நில அளவைப் பணிகளை எளிதாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மற்றும்

 நவீன முறையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதீ துறைக்கு ரூபாய் .7,400 கோடி ஒதுக்கீடு

  பேரிடரை முன்கூட்டியே அறிந்து சொல்ல புதிய தொழில்நுட்பங்களுக்கு ரூபாய் .10 கோடி ஒதுக்கீடு

 சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய். 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  நீர் வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரூபாய் .3384 கோடி மதிப்பீட்டில் பாசன அமைப்பு

  அணைகளை புனரமைக்கும் திட்டத்திற்கு ரூபாய் .300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  64 பெரிய அணைகளை புனரமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்.

  கால்நடைப் பராமரிப்பு துறைக்கு ரூபாய்.1,315 கோடி நிதி ஒதுக்கீடு

  சென்னைக்கு அருகே தாவரவியல் பூங்கா அமைக்க ரூபாய் .300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

 இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூபாய்.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களைச் சீரமைக்க ரூபாய்.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  வட்டியில்லா பயிர்கடன் திட்டத்திற்கு ரூபாய்.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 சுற்று சூழல் துறைக்கு ரூபாய்.849 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளி கல்வித்துறைக்கு ரூபாய்.36,785 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 உயர்கல்வித் துறைக்கு ரூபாய் .5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 நான் முதல்வன் திட்டம் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும்.

 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும்.

 புதிதாக உருவான 6 மாவட்டங்களில் புதிய மாவட்ட நூலகங்கள் அமைக்கப்படும்.

 அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம்.

 செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத அரசு ஆதரவு அளிக்கும். 150 நாடுகளைச் சேர்ந்த 2,000 முன்னணி செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 19 மாவட்டங்களில் ரூபாய்.1,019 கோடி மதிப்பில் தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

 பேராசிரியர் க.அன்பழகன் மேம்பாட்டு திட்டம் 7,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் - 

 உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தொடர நடவடிக்கை, அந்த மாணவர்களின் கனவை நனவாக்க அரசு உதவும்.

 தமிழக மருத்துவத் துறைக்கு ரூபாய்.17,901 கோடி நிதி ஒதுக்கீடு

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டத்திற்கு ரூபாய்.2,542 கோடி ஒதுக்கீடு

 அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய்.1000 உதவித்தொகை

 பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

 தொன்மையான வழிபாட்டு தலங்களை புனரமைக்க ரூபாய்.12 கோடி நிதி ஒதுக்கீடு

 சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை புனரமைக்க ரூபாய் .12 கோடி நிதி ஒதுக்கீடு

 மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூபாய்.738 கோடி நிதி ஒதுக்கீடு

 எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூபாய்.1,949 கோடி ஒதுக்கீடு

 பராமரிப்பில்லாத சமத்துவபுரங்கள் ரூபாய்.190 கோடி செலவில் சீரமைக்கப்படும்       கள்ளச் சந்தை விற்பனை மூலம் சுமார் 50 சதவீதம் வரையிலான வருமான இழப்பு தமிழக அரசு சந்தித்துள்ளதைப் பார்க்கும் போது அரசியல்வாதிகள், காவல்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரகம், டாஸ்மாக் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்குக் கட்டாயம் தெரியாமல் இருக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது.   இந்தக் கள்ள சந்தை விற்பனையில் சட்டவிரோத இயங்கும் மதுபான ஆலைகள் மற்றும் டிஸ்டில்லரிகளால் தயாரிக்கப்படும் மதுபானம், கொள்ளையர்களால் தயாரிக்கப்படும் சாராயம், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கடத்தப்படும் மதுபானம் ஆகியவையும் அடங்கும் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5402 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது, இதில் ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 110 முதல் 120 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. 2017-18ஆம் நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் 26,797.96 கோடி ரூபாயாகப் பெற்ற வரி வருமானம் 2022-21ல் 33,811.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.        ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை பிற மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.95 லட்சம் லிட்டர் சாராயம், 75,720 லிட்டர் ரெக்டிஃபைட் ஸ்பிரிட் மற்றும் 17.53 லட்சம் ஐஎம்எஃப்எல் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாகச் சுமார் 1.65 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்தப் பிரச்சனையைச் சரி செய்வதன் வாயிலாக எவ்விதமான கட்டண உயர்வோ அல்லது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்காமல் சுமார் 30000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருமானத்தைப் பெற்ற முடியும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்குப் பெரிய அளவில் பயன்படும். என்பது சாராம்சம்.அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகுமா என அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்கவும் ஓய்வூதியப் பலன்களை வழங்கவும்  சுமார் 19000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரை முன்பு வாசிக்கத் துவங்கிய போது                                                       "காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, 

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல, 

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.” என்ற பாடலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் வாசித்தார். அதற்கு அவர் தெரிவித்த கூற்றின்படி தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை வாசித்த போது பதில் கூற அதன் தொடர்ச்சியாக தனது உரை மூலம் தனது தமிழ் புலமை காட்டிய மாநில நிதியமைச்சர் பி. டி .ஆர். பழனிவேல் தியாகராசன்                "வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்

றூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்

டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்

ஆருங் கிளையோ டயின்று" .

அதாவது யானைக்கு ஒரு வாய் கவளம் சிதறுவது என்பது சாதாரண விஷயம்..ஆனால் அதுவே ஒரு கோடி எறும்புகளுக்கு உணவாகும்..

இதன் மெய்ப்பொருள் அறிந்த பிறகு மீண்டும் நிதிநிலை அறிக்கை வாசிக்க நமது  வாசகர்களுக்கு  விபரம் புரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன