கண்டியாநத்தம்- புதுப்பட்டி கிராமத்தில் கண்மாயில் நீர்வற்றி அழி கண்மாயில் கிராம மக்கள் மீன் பிடித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கண்டியாநத்தம்- புதுப்பட்டி கிராமத்தில் கண்மாயில் நீர்வற்றி அழி கண்மாயில் கிராம மக்கள் மீன் பிடித்தல் நிகழ்வு நடைபெற்றது
. ஒரு போகம் விவசாயத் தேவைக்கு கண்மாய் நீரைப் பயன்படுத்தியதாலும் கோடைகாலம் தொடங்கியதாலும் கண்மாயில் நீர் வற்றிய நிலையில். கிராம மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்கும். வகையில் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கண்மாயில் மீன்களைப் பிடித்தனர்.
வில்லியநத்தான் கண்மாய் மற்றும் ஓவியன்கண்மாயில் விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டி பிராத்திக்கும் வகையில் அழி கண்மாயில் மீன்பிடித்தல் நிகழ்வு நடைபெற்றதை முன்னிட்டு கரை மேல் உள்ள மடையில் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் தேங்காய் உடைத்து சங்கல்ப பூஜை செய்து ஊர் முக்கியஸ்தர் வெள்ளை வீசிய பின்பு சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆலவயல், அம்மன்குறிச்சி, கேசராபட்டி, வலையப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், பிடாரம்பட்டி, கொப்பனாப்பட்டி, கொன்னையூர், நாத்துப்பட்டி, தூத்தூர், மனப்பட்டி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து மீன்பிடிக்கக் குளத்தில் இறங்கினர்.
இதில் மீன் பிடிக்கப் பயன்படும் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவை பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனர். இதில் ஜிலேபி, அயிரை, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் கிடைத்தன. மக்கள் அணைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டு சென்றனர் கண்மாய்களில் தற்போது மீன்பிடிக்கும் நேரம் என்பதால் கிராம மக்களும், நகரவாசிகளும் கண்மாய்களை நோக்கிச் செல்கின்றனர். அதிகாலை நேரங்களில் கண்மாயில் பிடிக்கும் மீன்களுக்குப் போட்டி நிலவுகிறது. உயிருடன் கண்மாய் கரையிலேயே விற்கப்படும் மீன்களை கிலோக் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
கட்லா, ரோகு, கெண்டை போன்ற வகை மீன்கள் கிலோ ரூ.200 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. விரால் மீன் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை விலை போகின்றன. அயிரை மீன் ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை வாங்குகின்றனர்.
பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. ஆயினும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் பிறகே மீன்பிடிப்புப் பகுதியில் உள்ள மீன் வகைகள், மீன்களின் எண்ணிக்கை போன்றவை அறியப்பட்டு, மீன்களைத் தரம் பிரித்தலில் சிக்கல்கள் நீக்கப்பட்டன. உள்நாட்டு நீர்வளங்கள் ஆறு, கால்வாய், நதி, வெள்ளச்சமவெளி, நன்செய், கண்மாய், குளம், கடற்கரைக்காயல் மற்றும் நீர்தேக்கங்களாகும். கடல் நீர்தேக்கங்கள் பிடிப்பு மீன் வளத்திற்கு மட்டும் பயன்படுகிறது. ஆனால் உள்நாட்டு நீர் தேக்கங்கள் வளர்ப்பு மற்றும் பிடிப்பு மீன் வளத்திற்குப் பயன்படுகிறது.
இந்தியா உள்நாட்டு பிடிப்பு மீன் வளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உள்நாட்டில் உள்ள குளம், குட்டை, ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் மீன்பிடித்தலை உள்நாட்டு மீன்பிடித்தல் என்கிறோம். விலாங்கு, மிர்கல், கட்லா, ரோக் போன்ற மீன்கள் இவ்வகை மீன் பிடித்தலில் கிடைக்கின்றன. கட்டுமரம், சிறிய படகுகள், டீசல் படகுகள், மிதவைகள், வலைகள் ஆகியவை இவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மொத்தம் 30 சதவீதம் மீன் உற்பத்தியாகிறது. நிறைய உள்நாட்டு மீன் தேக்கத்தினால் பொருளாதார அளவில் மீன்வளம் உயர்ந்துள்ளது.
உலகில் சுமார் 500 மில்லியன் ஹெக்டர் உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளன. இதிலிருந்து வருடத்திற்கு மொத்த மீன் உற்பத்தியில் 40 முதல் 70 சதவீதம் உள்நாட்டு மீன்பிடிப்பாகும். நீர்வாழ் உயிர்களுக்கும் மீன் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பு மீன்வள உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதாகும். வெப்பநிலை, கலங்கியநிலை, நீர் அமில-காரத் தன்மை, நீரில் கரையும் ஆக்ஸிஜன், தனித்துள்ள கரியமில வாயு, நீரின் மொத்த அமிலத்தன்மை, மண் வெப்பநிலை, மண் அமில காரத்தன்மை, மன் அங்ககக் கரி. மண் பாஸ்வரம், உப்பின் காரச் சத்து மற்றும் கடலில் பெரிய தாவரத் திறன் இவை அனைத்தும் அடங்கியது தான் நன்னீரியல் மற்றும் ஆற்று நீர் மீன்பிடிப்பு பகுதியின் வழியலகுகளாகும்.மீன்களில் பொதுவாக 60 முதல் 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 முதல் 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 முதல் 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 முதல் 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.
தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது. இதுவும் மீன் பிடித்தல் நடைபெற ஓர் காரணமாகிறது. 1980 வரை உள்ள காலக்கட்டத்தில் தமிழகத்தின் மக்கள் கடல் மீன்களை வாங்கி உண்பதில்லை. கூவிக்கூவி கடல் மீன்களை விற்பனை செய்யும் நிலையில் யாரும் வாங்க மாட்டார்கள். கண்மாயில் பிடிக்கும் மீன்களை பாதுகாப்பு என்பதால் வாங்கும் மக்கள். தான் அப்போது அதிகமாக இருந்த நிலை.ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது கடல் மீன்களை மட்டுமே உடனுக்குடன் வாங்க மக்கள் காத்திருக்கும் நிலை தான் கட்டுமாவடி போன்ற மீனவக் கிராமங்களில் காண்கிறோம்.
கருத்துகள்