தீயணைப்புத் துறையினர் உதவியில் தெப்பக்குளத்தில் மூழ்கி பலியான நபர் உடல் மீட்பும் பிள்ளையார்பட்டி வீட்டில் புகுந்த இராஜநாகம் மீட்பும்
திருப்பத்தூர் சீதளி தெப்பக்குளத்தில் மூழ்கி 40 வயது நிரம்பிய நபர் பலி.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீ திருத்தளி நாதர் திருக்கோவில் புகழ் பெற்ற சீதளி தெப்பக்குளத்தில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அக்பர் அலி (வயது 40) திருமணமானவர், குளத்தில் நீச்சல் தெரியாத நிலையில் மூழ்கி இறந்தார். பின்பு தண்ணீரில் மிதந்தவர உடலை . தீயணைப்பு மீட்புத் துறையினர் மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்கு அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிள்ளையார்பட்டியில் 8 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பு பிடிபட்டது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் பிள்ளையார்பட்டியில் வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீளம் கொண்ட ராஜநாகப் பாம்பை உயிருடன் மீட்டனர் தீயணைப்பு மீட்புத் துறையினர்.
பிள்ளையார்பட்டி சன்னதித் தெருவில் வசித்துவரும் செந்தில் என்பவரது வீட்டில் மாலை நேரத்தில் 8 அடி நீளம் கொண்ட இராஜ நாகப்பாம்பு ஒன்று புகுந்தது அதைக் கண்டு வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் தெரிந்ததும் உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்பு மீட்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான குழுவினர் வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள இராஜ நாகப்பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்ட பின்னர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கருத்துகள்