மதுரை: மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் துவங்கி பாரம்பரியமாக பொருட்காட்சி இதுவரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வந்த நிலையில் சித்திரை திருவிழா பொருட்காட்சி நடப்பாண்டு இடம் மாற்றமாகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் தயார் செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் மதுரையில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகி முக்கிய நிகழ்வாக ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தமிழகம் மட்டுமில்லாது, உலக நாடுகளிலிருந்தும் இந்த விழாவில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். சைவம் பாண்டிய மன்னன் காலத்திற்கு பிறகு வந்த விஜயநகர நாயக்க மன்னர்கள் வைணவ நெறியைப் பின்பற்றி வந்த நிலையில் அந்த நாட்களில் சைவ விழாவை அதனுடன் கலந்து வைணவ நெறியைப் பரப்பினர் அதன் வெளிப்பாடு தான் மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். சித்திரை மாதம் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநில அரசு சார்பில் மாநகராட்சிக்குச் சொந்தமான தமுக்கம் மைதானத்தில் பாரம்பரியமாக அரசு பொருட்காட்சி நடக்கும்.
தமுக்கம் மைதானம், மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட வாடகை நிர்ணயித்து சித்திரைப் பொருட்காட்சி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு வாடகைக்கு விடும். ஒரு நாள் வாடகையாக அரங்கு அமைப்பதைப் பொறுத்து ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில். திருவிழாவுக்கு வரும் இலட்சக்கணக்கான மக்கள், இந்தப் பொருட்காட்சியையும் கண்டுகளிப்பார்கள்.
இந்நிலையில், தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் சென்னை வர்த்தக மையம் (Trade Center) போல், தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடியில் வர்த்தக மையம் (convention center) அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆகவே, தமுக்கம் மைதானத்திற்குப் பதிலாக மாட்டுத்தாவணி அருகே பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் காலி நிலத்தில் இந்த வருடம் சித்திரைத் திருவிழா பொருட்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. அதற்காக, அந்த இடத்தை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், சித்திரைத் திருவிழா நடக்கும் இடத்திற்கும் மாட்டுத்தாவணிக்கும் சம்பந்தமில்லாததால் பொருட்காட்சி கடந்த காலங்களைப் போல் எந்தளவுக்கு சிறப்பாக இருக்கும் எனக்கூற முடியாது எனக் கூறப்பட்டாலும் வெளியூர் மக்கள் வருகை அதிகரிக்கும். சித்திரைத் திருவிழா பொருட்காட்சியில் சித்திரை விழாவின் பாரம்பரியம், வரலாறு அடங்கிய தொகுப்புப் படங்கள், தமிழக அரசின் சாதனைவிளக்க புகைப்படங்கள், கலை கலாச்சாரம் கலந்து நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
கருத்துகள்