தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் துறை மாற்றப்பட்டது. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பன் (எஸ். கண்ணப்பன் என்ற பெயர் அவர் மாற்றம் செய்த நிலையில்) தற்போதைய முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தொகுதியிலிருந்து 1991 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
பொதுப்பணித்துறை, மின்சாரம், நெடுஞ்சாலை, மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக காலம்சென்ற முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் இருந்தார். பின்னர் மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை தன் சமூக ஆதரவாளர்களுடன் துவக்கினார். பின்னர் 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டார். 2006 ஆம் ஆண்டு தனது கட்சியை கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக, சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார்.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கைத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு, இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான ப. சிதம்பரத்திடம் மிகவும் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியுற்றார் பின்னர்
அஇஅதிமுகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டார். இத்தேர்தலில் 1,01,901 வாக்குகள் பெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் 2021, ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி அன்று போக்குவரத்துத்துறை அமைச்சசராக பதவியேற்றார். : இச் சூழ்நிலையில் அவர் மீது புதிய குற்றச்சாட்டு கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தது விவாதமாக மாறியுள்ளது.
இராமநாதபுரம் : போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், என்னை ஜாதி பெயரை சொல்லியும், ஒன்றிய தலைவர் பேச்சை தான் கேட்பாயா, உன்னை மாற்ற வேண்டும் என்றும் மிரட்டினார் என இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பி.டி.ஓ., ராஜேந்திரன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: மார்ச் மாதம் 27 ஆம் தேதி காலை என்னையும் மற்றொரு பி.டி.ஓ., அன்புக் கண்ணனையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டிற்கு வரச் சொன்னதாக உதவியாளர் சத்தியேந்திரன் கூறினார்.அமைச்சரை சந்திக்க சிவகங்கை வீட்டிற்குச் சென்றபோது அவர் என்னை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, ஒன்றியத் தலைவர் சொல்றதை மட்டும் தான் கேட்பியா, எங்க கட்சிக்காரர் சொல்வதைக் கேட்க மாட்டாயா. உன்னை பி.டி.ஓ., சீட்டில் வைக்க மாட்டேன். உடனடியாக உயர் அதிகாரி அமுதாவிடம் சொல்லி பணிமாறுதல் செய்வேன். பி.டி.ஓ., பதவி வகிப்பதற்கு உனக்குத் தகுதி இல்லை என கோபமாக பேசினார்.வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் என்னால் துாங்க முடியவில்லை. நேற்று காலை இதுதொடர்பாக கலெக்டர், கூடுதல் கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கச் சென்றேன். சந்திக்க முடியவில்லை. திரும்ப வந்து ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்கிறேன். இது நான் சந்திக்காத மனக்காயங்களை ஏற்படுத்தி உள்ளது, என்றார். இச் சூழ்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.புதிய போக்குவரத்து துறை அமைச்சரான எஸ். எஸ். சிவசங்கர் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் 2011, 2021 ஆம் ஆண்டு தேர்தல்களில், சட்டமன்ற உறுப்பினராக, குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 அன்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராக பதவியேற்றார்.
இவரின் ஊர் அரியலூர் ராஜாஜி நகர் ஆகும். அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1990 ஆம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சிவசங்கருக்கு டாக்டர் காயத்ரிதேவி என்ற மனைவியும், சிவசரண், சிவசூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
கருத்துகள்