முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக மகளிர் தினத்தில் மகளிர் சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கான மகளிர் சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்


குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கான மகளிர் சக்தி விருதுகளை வழங்கினார்.  

சர்வதேச மகளிர் தினமான இன்று  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன                             கட்ச்சில் நடந்த சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கில் பிரதமர் உரை









நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள்"

‘‘நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியமும் அழைப்பு விடுத்துள்ளன’’ 

‘‘பெண்களின் முன்னேற்றம் எப்போதும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் பலம் அளிக்கிறது’’ 

‘‘இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், பெண்களின் முழுப் பங்களிப்புக்கு, இன்று நாடு முக்கியத்துவம் அளிக்கிறது’’ 


‘‘ ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தின் கீழ் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடன்கள் பெண்கள் பெயரில் உள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் சுமார் 70 சதவீதக் கடன்கள் நமது சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு வழங்கப்பட்டுள்ளன’’

கட்ச்சில் நடந்த சர்வதேசப்  பெண்கள் தினக்  கருத்தரங்கில் காணொலிக்  காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று உரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கூடியிருந்தவர்களுக்கு பெண்கள் தின வாழ்த்துக்களைத்  தெரிவித்தார்.  கட்சில் தேவி ஆஷாபுரா, மாத்ருசக்தி வடிவில் இருப்பதால், பெண்கள் சக்தியின் அடையாளமாக கட்ச் பகுதி உள்ளது எனப்  பிரதமர் கூறினார்.  ‘‘கடுமையான இயற்கைச்  சவால்களுடன் வாழவும், போராடி வெல்லவும், ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இங்குள்ள பெண்கள் கற்றுகொடுத்துள்ளனர்’’ என அவர் கூறினார்.  குடிநீர் பாதுகாப்பில் கட்ச் பெண்களின் பங்கை அவர் பாராட்டினார்.  இந்த நிகழ்ச்சி எல்லை கிராமத்தில் நடைபெற்றதால், 1971ம் ஆண்டு போரில் இப்பகுதி பெண்களின் பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள்" என பிரதமர் கூறினார். ‘அதனால் தான், நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியம் அழைப்பு விடுத்துள்ளன’’  எனவும் அவர் கூறினார்.

பக்தி இயக்கத்திலிருந்து, ஞான தர்ஷன் வரை சமூகத்தில் சீர்திருத்தமும் மாற்றமும் ஏற்பட  வடக்கே  மீராய்பாய் முதல் தெற்கே சாந்த் அக்கா மகாதேவி போன்ற பெண் தெய்வங்கள்,  பெண்கள் குரல் கொடுத்தனர்  எனப்  பிரதமர் கூறினார்.  அதேபோல், கட்ச் மற்றும் குஜராத்தும், சாதி தரோல், கங்கா சாதி, சாதி லோயன், ரம்பை மற்றும் லிர்பை போன்ற பெண் தெய்வங்களைக்  கண்டவை .  பெண்கள், சக்தியாகத்  திகழும் நாட்டின் எண்ணிலடங்கா  தெய்வங்கள், சுதந்திரப்  போராட்டச்  சுடரைத் தொடர்ந்து எரியச் செய்தன எனப்  பிரதமர் கூறினார்.


இந்தப்  பூமியைத்  தாயாகக்  கருதும் நாட்டில், பெண்களின் முன்னேற்றம் எப்போதும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வலிமையை கொடுக்கிறது எனப்  பிரதமர் கூறினார்.  ‘‘பெண்களின் வாழ்வு முன்னேற்றம் அடைய, நாடு இன்று முக்கியத்துவம் அளிக்கிறது.  இந்தியாவின் வளர்ச்சிப்  பயணத்தில், பெண்களின் முழுப்  பங்களிப்புக்கு இன்று நாடு முக்கியத்துவம் அளிக்கிறது’’ எனப்  பிரதமர் கூறினார்.  11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டது, 9 கோடி உஜ்வாலா கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டது, 23 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள்  பெண்களுக்கு கவுரவத்தை கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது என அவர் குறிப்பிட்டார்.


பெண்களுக்கு அரசு நிதிஉதவி அளிக்கிறது, அப்போதுதான் அவர்கள் முன்னேறி, தங்கள் கனவுகளை நிறைவேற்றிச்  சொந்தமாக தொழில் தொடங்க முடியும் எனப்  பிரதமர் கூறினார்.   ‘‘ ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தின் கீழ் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடன்கள் பெண்கள் பெயரில் உள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் சுமார் 70 சதவீத கடன்கள் நமது சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு வழங்கப்பட்டுள்ளன’’ என அவர் கூறினார். ‘‘அதேபோல், பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் கட்டிக்  கொடுக்கப்பட்ட 2 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்கள் பெயரில் உள்ளன. இவையெல்லாம், நிதி சம்பந்தமாக முடிவு எடுப்பதில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளன ’’ என்று  பிரதமர் கூறினார்.

பிரசவ கால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அரசு உயர்த்தியுள்ளது எனப்  பிரதமர் தெரிவித்தார்.  பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள் மிக கடுமையாக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.  பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் பிரிவும் உள்ளது.  ஆண்களும், பெண்களும் சமம் என்பதைக்  கருத்தில் கொண்டு, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முயற்சிக்கிறது என்று  பிரதமர் கூறினார்.  பாதுகாப்புப்  படைகளில்  பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், சைனிக் பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை தொடங்கியுள்ளது எனவும் பிரதமர் கூறனார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான பிரசாரத்தக்கு மக்கள் உதவ வேண்டும் எனப்  பிரதமர் வலியுறுத்தினார். பெண் குழந்தைகளைப்  பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப்  படிக்க வைப்போம் திட்டத்தில் பெண்களின் பங்கை அவர் வலியுறுத்தினார்.  பெண் குழந்தைகளைப்  பள்ளியில் சேர்க்கும் விழாவிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கு வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரத்தைப்  பொறுத்தவரை, உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பது, மிகப் பெரிய விஷயமாக உருவெடுத்துள்ளது என்றும், பெண்கள் முன்னேற்றத்தில் இது இன்னும் அதிகப்  பங்காற்ற வேண்டும்’’  என்றும் பிரதமர் கூறினார்.  உள்ளூர் பொருட்களின் சக்தி பெண்களின் கையில்தான் உள்ளது என அவர் மேலும் கூறினார்.

முடிவில், சுதந்திர போராட்டத்தில் சாந்த் பரம்பராவின் பங்கு குறித்து பிரதமர் பேசினார்.  மேலும்,  கட்ச் பகுதியில் நடைபெறும் ரான் விழாவின் அழகைக் கண்டு களித்து , ஆன்மீக அனுபவத்தையும் பெற வேண்டும் எனக்  கருத்தரங்கில் பங்கேற்றவர்களைப்  பிரதமர் கேட்டுக் கொண்டார்பெண் கல்வி நுழைவு விழா பிரச்சாரத்திற்கு பிரதமர் பாராட்டு

பெண் கல்வி நுழைவு விழா பிரச்சாரம், கல்வி மகிழ்ச்சியை மேலும் அதிக பெண்கள் பெறுவதை உறுதி செய்யும் அற்புதமான முயற்சி என பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு உள்ளார். இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு இளம் பெண்ணும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை பெறுவதற்கு அனுமதிப்பதை உறுதி செய்யும் இந்த பிரச்சாரம் ஒரு இயக்கமாகும்.

  மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானியின் டுவிட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

“கல்வி என்னும் மகிழ்ச்சியை மேலும் அதிக பெண்கள் பெறுவதை உறுதிசெய்யும் அருமையான முயற்சி! நாம் அனைவரும், ஒரு நாடாக ஒன்று சேர்ந்து இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்குவோம் எனத் தெரிவித்தார்.ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022, அகில இந்திய வானொலியில் நேரடி ஒலிபரப்பு

சர்வதேச மகளிர் தினத்தை இன்று நாம் கொண்டாடும் நிலையில், ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை வென்று உலகக் கோப்பையை வெல்வதற்கான நிலையை எட்டியுள்ளது. இந்தப் புகழ்மிக்க தருணத்தை நேயர்களுடன் கொண்டாட ஒருமாத காலம் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பற்றிய நேர்முக வர்ணனையை அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்ப பிரசார் பாரதி ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த நேரடி ஒலிபரப்பை மிகவும் ஆர்வமுள்ளதாகவும், அனைவரும் ஈடுபாடு கொள்வதாகவும், மாற்றுவதற்கு சிறப்பு நிகழ்ச்சிகளை அகில இந்திய வானொலி நடத்த உள்ளது. இதில், இந்தப் போட்டித் தொடரின் பல்வேறு நிலைகளில், ஏற்படும் நிகழ்வுப் போக்குகள் குறித்து விளையாட்டுத்துறை நிபுணர்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். இந்த  நிகழ்ச்சிகள் இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் நடைபெறும்.

போட்டி தொடங்குவதற்கு முன்பும், போட்டிக்கு இடையேயும், போட்டி முடிந்த பிறகும் அகில இந்திய வானொலியுடன் இணைந்திருக்கும் நேயர்கள் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்கலாம்.

டிஜிட்டல் முறையில் இந்த நிகழ்ச்சிகளை பிரசார் பாரதியின் விளையாட்டுப் பிரிவுகள் யூட்யூப் அலைவரிசையில் கேட்கலாம். - https://www.youtube.com/c/PrasarBharatiSports  அதே போல் அகில இந்திய வானொலியின் விளையாட்டுக்கள் பிரிவு ட்விட்டரிலும், @akashvanisports  தூர்தர்ஷனின் விளையாட்டுக்கள் பிரிவு ட்விட்டரிலும் @ddsportschannel நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

அனைத்து போட்டிகளையும்  இடம் பெறச் செய்வதற்கு வசதியாக ஒவ்வொரு மணிக்கும் போட்டிகளின் அப்போதைய நிலைமை குறித்து நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களிலும், சம்பந்தப்பட்ட மாநில மொழிகளிலும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்..

கிரிக்கெட் போட்டிகளின் நேர்முக வர்ணனையை  பண்பலை (எஃப்எம்) ரெயின்போ அலைவரிசைகளில் கேட்கலாம்சர்வதேச மகளிர் தினத்தன்று பெண் செங்கல் சூளை மற்றும் பீடி தொழிலாளர்களுக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாமை தொழிலாளர் அமைச்சர் நடத்துகிறார்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இன்று இங்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாமை முன் நின்று நடத்தினார். நிகழ்ச்சிக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தலைமை தாங்கினார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ராமேஸ்வர் டெலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.




 பெண் தொழிலாளர்கள் மத்தியில் ‘ஸ்வஸ்தா பாரத்’ என்ற எண்ணத்தை ஊக்குவிப்பதற்கும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவும், சர்வதேச மகளிர் தினத்தன்று உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.  அமைப்புசாரா துறையின் பெண் தொழிலாளர்களிடையே தொழில் சார்ந்த நோய்களைக் கண்டறிவது அவசியம் என்று திரு  பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார். அபாயகரமான பணிச்சூழலுக்கு ஆளாகும் பெண் தொழிலாளர்கள் பல்வேறு தொழில் சார்ந்த நோய்கள் மற்றும் பல  பெரும  மற்றும் குறு  ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர். செங்கல் சூளைத் தொழிற்சாலைகள் மற்றும் பீடித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் இரும்புச் சத்து குறைபாட்டிற்கு ஆளாகின்றனர்




  இரத்த சோகை என்பது இந்தியாவில் ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினையாகும், குறிப்பாக நலிந்த  சமூக-பொருளாதார நிலையில்  உள்ள பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.


  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய  திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துள்ள முயற்சிகள் பற்றி மீண்டும் வலியுறுத்தினார். 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கருத்தைச் சுற்றி கொள்கைகளை உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இரு அமைச்சகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பால் நமது நாட்டின் பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத்  தீர்க்க முடியும் என்றார். பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட பல பெண்களை மையப்படுத்திய அரசின் முதன்மையான திட்டங்களை அவர் விவரித்தார். நாடு முழுவதும் 704 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திட்டத்தின் மூலம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக தொழிலாளர் அரசுக் ஈட்டுறுதி கழகத்துடன்  இணைந்து செயல்படும் யோசனையையும் அவர் ஊக்குவித்தார்.

 பெண்கள் செங்கல் சூளை பீடி தொழிலாளர்களுக்கான உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாம்

  எந்தவொரு பெரிய தொழில் சார்ந்த நோய்களையும் முன்கூட்டியே கண்டறிவதற்காக, சர்வதேச மகளிர் தினத்தன்று தொழிலாளர் அரசுக் ஈட்டுறுதி கழகம்  மற்றும் தொழிலாளர் நலத்துறையின் உதவியுடன் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்,  சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடங்கப்பட்ட இந்த முகாம்  ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு உழைக்கும் பெண்களின் உகந்த ஆரோக்கியத்தை அடைவதற்கு உதவும். முகாமில் பங்கேற்றவர்களுக்கு சுகாதார விவர அட்டைகள் வழங்கப்பட்டன. அடுத்த 06 மாதங்களுக்கு பங்கேற்பாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இவை தவிர, இந்த நிகழ்வில் பங்கேற்ற அஜ்மீரைச் சேர்ந்த 20 பெண்கள் பீடித் தொழிலாளர்கள், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 பெண்கள் பீடித் தொழிலாளர்கள் மற்றும் ஹரியானாவில் இருந்து 26 பெண்கள் செங்கல் சூளைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நோய்த்தடுப்பு சுகாதாரம், சுகாதாரப் பொருட்கள் மற்றும் ஆயுஷ் கிட்கள்  வழங்கப்பட்டன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...