அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை ஏதும் இல்லை: மத்திய அமைச்சர் தகவல்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய இரசாயணங்கள் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது
மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு உத்தரவில் இடம் பெற்றுள்ள அத்தியாவசிய மருந்துகள், மாநில அரசுகளின் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் மூலம் தேசிய மருந்து விலை ஆணையத்தால் (என்பிபிஏ) கண்காணிக்கப்படுகின்றன.
அத்தியாவசிய மருந்துகளின் தயாரிப்பாளர்கள், தங்களின் காலாண்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மருந்துக் கடைகளின் கணக்கெடுப்புகள், 22 மாநிலங்களில் என்பிபிஏ அமைத்த மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் மற்றும் விலைக் கண்காணிப்பு அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள், மருந்து பற்றாக்குறையைத் தெரிவிக்கும்போதெல்லாம், மருந்துகளை அனுப்பும்படி உற்பத்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. நாட்டில், அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதாக சமீபத்தில் எந்தத் தகவலும் இல்லை.
மருந்துத் துறையில் நாட்டை தற்சார்புடையதாக்கவும், முக்கிய மருந்துகளின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், மருந்துகள் துறை உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தை ரூ.6.940 கோடி மதிப்பில் தொடங்கியுள்ளது.
மொத்தத்தில், இத்திட்டத்தின் கீழ் 49 விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 8 திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. முதலீடுகளை அதிகரித்து இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, ரூ.15,000 கோடி மதிப்பில் மற்றொரு உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை மருந்துகள் துறை தொடங்கியுள்ளது. மொத்தத்தில் 55 விண்ணப்பங்கள் இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், மருந்துப் பூங்காத் திட்டத்தை ரூ.3,000 கோடி மதிப்பில் மருந்துகள் துறை தொடங்கியுள்ளது.
கருத்துகள்