முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரையில் முதல் நூற்றாண்டு முதல் முத்திரை பதித்த சித்திரை வசந்த கால விழா

 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி தொடங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில்  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சித்திரை முதல் நாளான இன்று காலை 10.35 மணி முதல் 10.59-க்குள் நடைபெற்றதை மக்கள் கண்டுகளிக்க வசதியாக கட்டணச் சீட்டும், இலவச அனுமதியும் வழங்கப்பட்டது. நேரில் வர இயலாதவர்கள் தொலைக்காட்சி, யூ டியூப், முகநூல் நேரலை மூலமும், திருக்கோவில் இணையதளத்திலும், மாவட்ட நிர்வாகத்தினர் வெளியிட்ட மாமதுரை செயலி மூலமும் மக்கள் கண்டனர் நேற்று மாலை துவங்கி இன்று மாலை வரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை விருந்தும்.

நன்கொடையாளர்கள் செய்திருந்தார்கள். மதுரை மாட்டுத்தாவணி, காய்கனிச் சந்தை, பரவை  காய்கறி வியாபாரிகள் சார்பில்  5 டன் காய்கனிகளை வழங்கியுள்ளனர் அரிசி வியாபாரிகள், எண்ணெய்,பலசரக்கு, மளிகை பொருள்களை அந்தந்த வியாபாரிகள் சங்கத்தினர் மூலம் வழங்கியுள்ளனர். எரிவாயு விநியோகஸ்தர் சங்கத்தினர் எரிவாயு சிலிண்டர்களையும் வழங்கியுள்ளனர். சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் நடைபெறும் திருமண விருந்து உபகாரப் பணியில் 100 க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள், 500 க்கும் மேற்பட்ட உதவியாளர்களுடன் 1000 தன்னார்வத் தொண்டர்களும் பங்குகொண்டுள்ளனர்.

பலவகையான ருசியில் மக்கள் உணவருந்த வேண்டும் என்பதால் ஒரே மாதிரி இல்லாமல், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், சைவப் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், கேசரி, வடை என பல வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்தும்  நடந்த நிகழ்வு சிறப்பானது மற்றும் திருக்கல்யாண வைபவம் காண வருகை தந்த மக்கள் மொய் எழுதினர்

திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 15 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. காலத்தால் இது சைவ சிவ வழிபாட்டு விழாவாக  இரண்டாயிரம் ஆண்டுகளாக  நடைபெற்ற நிலையில் விஜயநகரப் பேரரசின் வழி வந்த மதுரையில் ஆண்ட நாயக்க மன்னர்களில் திருமலை நாயக்கர் காலத்திலிருந்து இணைப்பு விழாவாக மாற்றி வைணவத்தை சைவத்துடன் சேர்த்து நடந்த அழகர் எழுந்தருளும் விழாவாக நடந்து வருகிறது அந்த விழாவானது  சித்திரை மாதம் பௌர்ணமி 16 ஆம் தேதி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் 500 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறப்பாக நடைபெற உள்ளது.    மதுரைக்கு  அரசி பார்வதி தேவி மீனாட்சியாக மீனவர் சமூக பெண்ணாகப் பிறந்து சிவனருள் கிட்டி சொக்கநாதர் மணவிழா முதன்மை பெறும் விழா ஏன் தமிழர்கள் பெண்களை தெய்வத்தில் உரைத்தார்கள்   உரைகல் ஆக்கினார்கள் என்பதற்குச் சான்று.

பராசக்தி காளியாக நாக்கை நீட்டி 18 கைகளில் ஆயுதம் தரப்பட்ட காளியும் அவளின் பாதுகாப்பிற்காகத் தான் போல்.

பார்த்த உடன் கைகள் வணங்கும் அமைதி. மனம் அமைதி கொள்ளும் கண்கள். 

தமிழ் பிள்ளைகள் பலர் பச்சைக்கிளி தோளில் வைத்திருக்கும் அழகே தனி . கயல்விழி என்றே அந்த பிஞ்சுக் கண்கள் மருண்டதைக் கண்டு பெயிரிட்ட மதுரை தென்பகுதியில் மக்கள் பலர்.

மதுரை ஆட்சி மீனின் ஆட்சி என்பது தான் மீனாட்சி. அதுவே பாண்டியன் ஆட்சி.

அதை மீன் அக்சி என்று வடமொழி திரிபிற்கு நிறுத்தியும்,

மீன் போன்ற கண் உடையாள் என்ற அங்கையர் கன்னி என்பதை மீன்+அக்சி என்றும் பத்ரி போன்றோர்  வடமொழி விபூதி அடித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

தமிழர்களின் பானை கொடி கல்வெட்டுக


ள் என்பது குறீயீடுகளால் உணர்த்தப்பட்ட ஆட்சி முறை.

பல சங்க இலக்கிய பாடல்களில் இதைக் காணலாம்.

இதோ இந்த முகம் காட்டும் குறியீட்டைக் கவனியுங்கள்.மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரே ஒரு கல்வெட்டு தான் சம்ஸ்கிருதத்திலுள்ளது, மற்றவை எல்லாமே தமிழ் தான் ஆகவே இந்த மண்ணின் ஆன்மீக மரபில் சம்ஸ்கிருதத்திற்கும் இடமுண்டு 1960 வரை மக்கள் தமிழை சமஸ்கிருதம் கலந்து எழுதியுள்ளனர்.

இந்திய அரசாங்கம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் தன்னுடைய ஆணைகளைத் தருகிறது.பெரும்பாலும் அரசாணைகள் ஹிந்தியிலேயே இருக்கிறது.இதை நாளை ஒருவர் வந்து பார்த்து, இந்தியாவில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என்கிற மொழியே இருந்தது .அதில் ஹிந்தி விஞ்சி நின்றது எனச் சொன்னால் எப்படி இருக்குமோ? அதுபோலதான் இவர்கள் பேசுவதும் உள்ளது..

முதலில் 'மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்' என்ற பெயரே தமிழ் கிடையாது எனப் பலர் சொல்வது போல 'மீனாட்சி' என்று எழுதி,அதை 'மீன்+ஆட்சி' என பொருள்படுவது தவறு..மீன் போன்ற கண்களை குறிப்பதே 'மீனாக்ஷி'..அக்ஷி என்றால் கண் எனப்பொருள்...இதனுடைய தமிழ் பதம் அங்கயற்கண்ணி ஆகும்.அதே போல சுந்தரேஸ்வரர் என்பதன் தமிழ் பதம் 'சொக்கர்' ஆகும்..'அங்கயற்கண்ணி - ஆலவாய் சொக்கர்' என்பதே தேவாரக் குறிப்பு.

இன்னும் 'மதுரை' என்கிற பெயரே தமிழ்தானா? என்பது இன்று வரை விவாதம்தான்.    காரணம்            உத்தரகாசி - தென்காசி இருப்பதைப் போலவே உத்தர மதுரை என்கிற கிருஷ்ணன் பிறந்த வடமதுராவுக்கும், நமது தென்மதுரைக்குமான தொடர்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.. பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பு அந்த வாதத்தை வலிமை பெற வைக்கிறது.

மதுரையின் பழமையான பெயர் 'கூடல்' என்றே சங்கப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.  அகுதை என்ற வேளிர்குடியினனிடமிருந்த கூடல் நகரை,  நெடுந்தேர் செழியன் என்ற பாண்டியன் கொற்கையிலிருந்து கைப்பற்றியதே கூடல் கைமாறியதைகீ குறிக்கிறது..

கூடல் நகருக்கு பிறகு மதுரை என்ற பெயர் பாண்டியர்களால் சூட்டப்பட்டதென்பதே புரிந்துகொள்ள வேண்டியது. அந்தப் பெயர் பாண்டியர்களின் சந்திரவம்ச தொடர்பிலிருந்து வந்ததா? என்பதை வெறுப்பற்ற ஆய்வுட்குட்படுத்த வேண்டும்.

அதே போல 'கூடல்' 'மதுரை' என்ற பெயர்களை விட பழையது 'ஆலவாய்' எனவும் ஒரு கருத்துண்டு. இந்த இடத்தில் சங்கப்புலவர் பேராலவாயரைக் குறிப்பிட வேண்டும். பழம்பெரும் பாண்டியனான பூதபாண்டியன் இறப்பையும், அவன் மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறியதையும் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமல்ல,நெடுந்தேர் செழியன் அகுதையிடமிருந்து கூடல் நகரை கைப்பற்றியதையும் குறிப்பிடுகிறார். இவருடைய பெயரிலேயே 'ஆலவாய்' இருப்பது கவனிக்கத்தக்கது..

சைவர்களுக்கு தெளிவாகப் புரியும், தேவாரம் வாசித்தவர்களுக்கும் தெரியும். மதுரை நகரை 'தென்கூடல் ஆலவாய்' என்றே அப்பர்,  சம்பந்தப்பெருமான் அழைத்தார்கள்.அதற்கு மிக முக்கியமான காரணமது சைவப்புராணங்களோடு தொடர்பு கொண்டதென்பதே.

எல்லோரும் சொல்வது போல ஆலமரம் வாசலில் இருந்ததால் அது 'ஆலவாய்' என்ற பெயரைப் பெறவில்லை.'ஹாலாஸ்ய' என்ற வடமொழி பெயரின் தமிழ் பதமே ஆலவாய்..'ஹாலாஸ்ய மாகாத்மியம்' என்ற வடமொழி இலக்கியத்தில் இருந்தே 'திருவிளையாடல் புராணம்' மொழிபெயர்க்கப்பட்டது. பக்தி இலக்கியத்தில்

எப்படி 'ஹாலாஹலா' என்ற வடமொழி வார்த்தை 'ஆலகாலம்' என்று மாறுகிறதோ அதையொத்தே 'ஹாலாஸ்ய' என்பது 'ஆலவாய்' என்று மருவியிருக்க வேண்டும்.ஹலாயுதன் என்றால் பலராமனைக் குறிக்கும்,அதை தமிழில் 'அலாயுதன்' என ஆழ்வார் பாசுரங்கள் குறிப்பிடுவது போலவேதான் இதுவும்.

'ஹாலா' என்பது இறைவனின் கங்கணமாக திகழும் விஷம்பாம்பை குறிக்கும். 'ஆஸ்ய' என்றால் வாய் எனப்பொருள்.

திருவிளையாடல் புராணத்தின் படி, மதுரை நகரின் எல்லையை மன்னனுக்கு உணர்த்த இறைவன் தன் கங்கணமாயிருந்த பாம்பினை எடுத்து விட அது வட்ட வடிவமாகத் தன் வாலை வாயால் கௌவியது. அவ்வட்ட வடிவமே எல்லையாகக் கொள்ளப்பட்டது.இவ்வாறு நாகம் தன் வாயால் கவ்வி எல்லையைக் காட்டியதால் இந்த ஸ்தலம் 'ஆலவாய்' என்றழைக்கப்படுகிறது.

இப்படித்தான் 'மதுரை - ஆலவாய்' இரண்டுமே 'மதுரா - ஹாலாஸ்ய' என்ற மூலத்திலிருந்து வந்திருக்கும் என்ற வலுவான வாதமுள்ளது. கூடல் நகரைக் கைப்பற்றிய சந்திர வம்சத்து பாண்டியர்களே சூட்டுகிறார்கள்.

."ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறிகிலா" என்று இதே மதுரையில்தான் ஞானசம்பந்தப் பெருமான் பாடினார்.

நமது கோவில்களிலிருக்கும் கல்வெட்டுகள் பெரும்பாலும் மெய்கீர்த்தி, அரசாணைகளே.இன்று தமிழக அரசு எப்படி தன் ஆணைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் தருகிறதோ அப்படி அன்றுள்ள பாண்டிய அரசு தன் ஆணைகளை வடமொழியிலும் தமிழிலும் தந்தது.எல்லாக் கோவில்களிலும் பெரும்பங்கு தமிழ் கல்வெட்டுகளே இருக்கும் .அது அத்தனையும் அரசாணைகள்..

அந்த அரசாணைகளும், அரசர்களின் செப்பேடுகளும் என்ன செய்தி சொல்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்..அது இந்த தர்மத்துக்கு மாறாக எங்கே பேசியுள்ளது? கீழே உள்ள வேள்விக்குடி செப்பேடுகள் சாசனத்தை கவனியுங்கள்.......

'எண்ணிறந்த கோஸஹஸ்ரமும், ஹிரண்ய கர்பமும், துலாபாரமும் மண்ணின் இசைப்பல செய்து மறைநாவினர் குறைதீர்த்துங் கூடல் வஞ்சி கோழி மாடமதில் புதுக்கிஉ '...

அதாவது...

"ஆயிரக் கணக்கில் பசுக்களை கொடுத்தும்,ஹிரண்யகர்ப்பம்,துலாபாரம் இவைகள் செய்தும்,வேதத்தினை ஓதும் அந்தணர்கள் குறைகளை தீர்த்தும்,கூடல் - வஞ்சி - கோழி மூன்று ஊர்களின் மாடம் திருத்தியும்.." என்று ஜடில பராந்தக நெடுஞ்சடையன் புகழ் பேசப்படுகிறது..

இந்த தர்மம் போதிப்பது எதை? வைதீக பண்பாட்டையா? அல்லது வேறேதேனுமா?

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில்  கீழ்க்கோபுரத்து இரண்டாம் நிலை தூணில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்கீர்த்தி கல்வெட்டு சொல்லும் செய்தி

 'கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப

 ஒருகுடை நீழல் இருநிலம் குளிர

 மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க

 நால்வகை வேதமு நவின்றுடன் வளர

 ஐவகை வேள்வியுஞ் செய்வினையியற்ற அறுவகை சமயமும் அழகுடன் திகழ'

என்பதாகும்.

அதாவது,கலியுகம் தன் கொடுமையைச் செய்ய விடாமல் அதை அடக்கி செங்கோல் செலுத்தினான் பாண்டியன்..

'இயல் - இசை - நாடகம்' என்ற முத்தமிழும் முறைபட,'ரிக் - யஜூர் - சாம - அதர்வண' என்கிற நால் வேதம்  பெருக,'ரிஷி - தேவ - பித்ரு - பூத- மனுஸ்ய' எனும் பஞ்ச மகா யக்ஞங்கள் சரியாகச் செயல்பட,'சாங்கியம் - யோகம் - மீமாம்ஸம் - வேதாந்தம் - நியாயம் - வைசேஷிகம்' போன்ற அறுசமயங்கள் சிறப்பாக விளங்க சுந்தர பாண்டியனின் ஆட்சி இருந்தது என்கிறது இந்தச் சாசனம்..

அதுமட்டுமல்ல,"மனு நெறி தழைப்ப மணிமுடிசூடி" என மனுதர்மம் சிறப்புற்று விளங்க சுந்தர பாண்டியன் முடிசூடி ஆண்டான் என்கிறது..


'மறைநெறி வளர மனுநெறி திகழ

 அறநெறிச் சமயங்கள் ஆறும்  தழைப்ப 

சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) 

'கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன் சிறப்பு

அருந்தமிழும் ஆரியமு அறுசமயத்தறநெறியும் திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்க'

- சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271)

'நால்வேதம் - ஆறங்கம் - ஐவேள்வி - அறுசமயம் - தமிழ்/வடமொழி - மனுநெறி' இவை தழைத்தோங்க ஆட்சி செய்கிறேன் என்றுதான் பாண்டியர்கள் வரிசையாக சொல்லிக் கொண்டார்கள்.

இதில் எங்கே தனித்தமிழ் மரபு



அதுமட்டுமில்லை, பாண்டியன் ஜடில பராந்தக நெடுஞ்சடையனின் (பொது யுகம் 765 - 815)'வேள்விக்குடி செப்பேடு சாசனம் - ஸ்ரீவரமாங்கல சாசனம் - சின்னமனூர் சிறிய சாசனம்',பராந்தக வீர நாராயணனின் (பொது யுகம் 880 - 905) 'தளவாய்புர சாசனம்' -  இராஜசிம்ம பாண்டியனின் 'சின்னமனூர் பெரிய சாசனம்',வீரபாண்டியனின் 'சிவகாசி சாசனம்' என இவைதான் அடிப்படைச் சான்றுகளாகின்றன..

எல்லா சாசனங்களும் முதலில்


சம்ஸ்கிருதத்திலும் அடுத்தது தமிழிலும் உள்ளது.தங்களை சந்திர வம்சம் என்றும்,பாரதப் போரில் பாண்டவர்களோடு நின்று திருதராஷ்டிர புத்திரர்களை அழித்தவரென்றே சொல்கிறார்கள்.

சந்திரன் - புதன் - புரூரவஸ் - யயாதி வழிவந்த பாண்டியன் குலம் என்றே பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.அகஸ்தியனை புரோகிதனாக பெற்றவர்கள் என்றும்,அசுரர்களை தங்கள் தோள்வலியால் வென்றவரென்றே சொல்கிறார்கள்.

இது திடீரெனச் சொல்லவில்லை நாம் முன்பு சொன்னபடியே, சங்ககாலத்திலேய புறநானூற்றில் 'கருங்கை ஒள்வாள் பெரும்பயர் வழுதியை' இரும்பிடர்தலையார்  புகழ்ந்து பாடும் போது "நெஞ்சின்,

தவிரா ஈகை, கவுரியர் மருக!" என்று குறிப்பிடுகிறார்.

கௌரவர்களின் வழித்தோன்றலே! என்றுதான் பாண்டியனை போற்றுகிறார்.அகநானூறில் ஸ்ரீராமர் தனுஷ்கோடியில் வியூகம் வகுத்ததை குறிப்பிடும் பாடலில்,"வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'பஞ்சவர் - கவுரியர்' இரண்டுமே பாண்டியர்களின் மகாபாரத தொடர்பையே குறிக்கிறது.பாண்டிய என்பது 'பாண்டு' என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்தும் வலுவாகவே உள்ளது..

அதை ஒட்டியே சங்ககாலத்திலிருந்து பிற்காலப் பாண்டியர் தங்கள் மகாபாரதத் தொடர்பை நீட்டி சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

'மணிமாட கூடல்புக்கு மலர்மகளோடு வீற்றிருந்து மனுதர்சித மார்க்கத்தினால் குருசரிதம் கொண்டாடி.'

அதாவது,மணிமாடங்கள் உள்ள மதுரை சேர்ந்து செல்வத்தோடு,மனு நெறி காட்டிய வழியில் நின்று குருசரிதை கொண்டாடினான் என பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீவரமங்கல சாசனமான செப்பும் பட்டயம் சொல்கிறது.

'திருதராஷ்டிரர் படை முழுதும் களத்தவியப் பாரதத்து   பகடோட்டியும்' ,

எனக் கூறுகிறது.

- தளவாய்புரம் சாசனம்.

'பஞ்சவனென்னும் பெயர்நிறீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில் வகுத்தும் உளமிக்க மதியதனால் ஒண் தமிழும் வடமொழியும் 

பழுதறத்தான் ஆராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும்

மாரதர் மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும்

விசயனை வசுசாபம் நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும்'.

'மகாபாரதம் தமிழ்படித்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' 

இது சின்னமனூர் செப்பேடு பெரிய சாசனமாகும்.

"பாண்டவர்க்குரிய பஞ்சவனெனும் பெயரை பெற்றவனும்,மதுரை மாநகர் கண்டு,அதற்கு மதிலமைத்த பெருமை பெற்றவனும் ஆவான்.தமிழையும், வடமொழியையும் ஒருங்கே கற்று ஆராய்ந்து அதில் பண்டிதர்களை விட மேலே நின்றான்..,பாரதப் போரில் தன் யானைப்படையை செலுத்தி மகாசேனாதிபதிகளை அழித்ததோடு,அர்ஜூனனின் வசுசாபத்தை நீக்கினான் பாண்டியன் என்கிறது".

மகாபாரதத்தை தமிழ்படுத்தவே மதுராபுரியில் சங்கம் அமைக்கப்பட்டதாக பாண்டியர் செப்பேடு சொல்வதை ஆழமாகவே கவனிக்க வேண்டும்..

பிற்காலப் பாண்டியர்கள் மட்டுமல்ல,சங்ககாலப் பாண்டியர்கள் மிகப்பழமையானவன் முதுகுடுமி பெருவழுதிதான்,பொது யுகம்.முன் 1 ஆம் நூற்றாண்டாகக் கூட இருக்கலாம்..அவனே 'பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி' என்றுதான் அழைக்கப்படுகிறான்.. பல யாகங்களை செய்வித்து ஸ்ருதி மார்க்கம் பிழையாத பெருவீரனாக இருந்தான்..


அவன் வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு கொடுத்த நிலத்தை பிரம்ம தாயம் களப்பிரர் கைப்பற்றியதாகச் சொல்லி ,முதுகுடுமி பெருவழுதி தன் முன்னோனுக்கு கொடுத்த ஆவணங்களை பராந்தக நெடுஞ்சடையனிடம் காட்டியே மீண்டும் பாகனூர் கூற்றத்தை சேர்ந்த வேள்விக்குடியை பெறுகிறான் நற்சிங்கன் என்ற அந்தணன்.

உறையூரும்,வஞ்சியும் கோழி கூவி விழிக்கிறது ஆனால் மதுரை வேதஒலி கேட்டு விழிக்கிறது என்கிறது 'பரிபாடல்'.

'பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம இன்துயில் எழுதல் அல்லதை - வாழிய வஞ்சியும் கோழியும் போல கோழியின் எழாதுளம் பேரூர் துயிலே'.

இப்படி சங்ககாலம் துவங்கி பாண்டிய மாநகரம் வேதஒலி தழைப்ப,ஸ்ருதிமார்க்கம் பிழையாமலே இருந்தது..அது தன்னுடைய பேரிருளை சந்தித்தது அலாவுதீன் கீல்ஜி அனுப்பி வைத்துள்ள தளபதி மாலிகாபூர் 1310 ஆம் ஆண்டு நடைபெற்ற படையெடுப்பிலும், 96,000 மணங்கு (ஒரு மணங்கு யானை தூக்கும் சுமை) பொன்ளனும், பொருட்களும் இராமேசுவரம் வரை சென்ற படை கொள்ளையடித்து தான் வரலாறு  .அதை தொடர்ந்து அங்கே நடந்த மதுரை சுல்தானக ஆட்சியிலும் இது தான்.. நடந்தது

 சரியான படி பார்த்தால் 711 வருடம் முன்பு 3 ஆம் தேதி ஏப்ரல் மாதம் 1311 ஆம் ஆண்டு அன்றுதான் படையெடுப்பாளன் மாலிகாபூர் மதுரையை நோக்கி வர தமிழகப் பிரதேசத்தில்  பாண்டிய நாட்டில் நுழைந்தான்..அந்த நாட்கள் தமிழகத்தின் கொடுங்கனவாக மாறியது..மதுரை - சிதம்பரம் - ஸ்ரீரங்கம் - கங்கை கொண்ட சோழபுரம் - விருத்தாச்சலம் - இராமேஸ்வரம் என எல்லா புண்ணிய தலங்களும் தாக்கப்பட்டதுடன் கொள்ளையடிக்கப்பட்டது. 

அப்போது மதுரை கோவில் முற்று முழுதாக இடிக்கப்பட்டு அதன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் 'அமீர் குஸ்ரு' போன்றவர்களே சொல்கிறார்கள்..அதுபோலவே திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலய கற்றளி இராஜகோபுரம் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான ஆலயங்களில் பல கொடுமை வரலாறு கல்வெட்டு பதிவில் உண்டு. இதன் காரணத்தால்தான் பழம்பெருமைமிக்க மதுரைக் கோவிலில் பொது யுகம் 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பான கல்வெட்டுகள் எதுவுமே கிடைக்கவில்லை.

பொது யுகம் 1311 ஆம் ஆண்டு முதல் 1378 ஆம் ஆண்டு வரை மதுரை மற்றும் தமிழகமே இஸ்லாமிய ஆட்சியின் கீழே சென்றது..1365 முதல் 1378 வரை உள்ள இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தான் விஜயநகர அரசர் குமார கம்பண்ணர் தமிழகத்தை கவ்விய இருளிலிருந்து மீட்டார்..மதுரை - ஸ்ரீரங்கம் - சிதம்பரம் என புகழ்பெற்ற கோவில்கள் மறுநிர்மாணம் அடைந்தது.வரலாறு

மதுரை கோவிலில் தமிழ் கல்வெட்டு, சம்ஸ்கிருத கல்வெட்டு என்றெல்லாம் பேசுபவர்கள் மாலிகாபூர் மற்றும் மதுரை சுல்தான்கள் ஆட்சியால் மீனாட்சி கோவில் முழுவதும் தரைமட்டமாக்கியதையும் அதை குமாரகம்பணர் மீட்டதையும் ஏன் பேச மறுக்கிறார்கள்? இது தீர்வு செய்ய வேண்டிய நிலை தற்போது உள்ளது.

இங்கிருக்கும் கோவில்களை போலவேதான் காஷ்மீர் - இன்றைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலுமிருந்தது. இன்று அவையெல்லாம் எங்கே போனது ?, தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்தக் கல்வெட்டுகளும், கோவில்களிலும், பண்பாடும் இந்த அளவுக்கு பிழைத்த ஒரே காரணம்  அப்போது வந்த விஜயநகரப் பேரரசு தான்..விசய நகரப் பேரரசின் சில செய்திகளை தமிழக வரலாற்று ஆய்வாளர் கு.ராசய்யன்  'தமிழக வரலாறு 1565- 1967' எனும் நூலை எழுதியுள்ளார். அது போல் ஆ.சிவசுப்பிரமணியன் என்பவரும்   'கிறித்தவமும் தமிழ்ச்சூழலும்' என்ற நூலில் பிரமலைக் கள்ளர்களை வெளியேற்றிய திருமலை நாயக்கர் குறித்தும் சில தகவல்களைத் தந்துள்ளார்.

"விசயநகரப் பேரரசின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து நாயக்கர்கள் தங்கள் ஆதிக்கத்தைத் வலுப்படுத்தி தென்கோடிப் பகுதி வரை தங்கள் செல்வாக்கினை நிலை நாட்டிக் கொண்டனர். தெலுங்கு அரசர்கள் தமிழக அரசுகளைப் பணிய வைத்து அம் மண்ணின் மைந்தர்களை அடிமை நிலைக்குத் தாழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து நாயுடுகள், ரெட்டிகள், ராஜீக்கள் போன்ற தெலுங்கு மக்கள் அலை அலையாகத் தமிழகத்தில் குடியேறத் தொடங்கினர். ராணுவ, நிர்வாக நிறுவனங்களில் தமிழர்களை அகற்றி அவர்கள் அமர்ந்தனர். பெரும்பாலான இடங்களில் ஆண் இனத்தை அழித்து, பெண்களை அடிமையாக்கி வளம் கொழிக்கும் நிலங்களை அபகரித்துக் கொண்டதாக பல்வேறு கிராமங்களின் பராம்பரியச் செய்திகளும் உண்டு.

எங்கே அடியோடு அழிந்துபோய் விடுவோமா என்றஞ்சிய மக்கள் பலர் வறண்ட நிலப்பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர். திரு வேங்கட மலைப்பகுதிகளில் வாழ்ந்த கள்ளர்கள் அழிவினின்றும் உயிர் தப்பி, மேலூர், நத்தம் பகுதியிலுள்ள காடுகளில் குடியேறினர். அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இவ்வாறு வெளியேறியதால் திருவேங்கடத்திலிருந்து சென்னை நகரின் சுற்றுப்புறம் வரையிலுள்ள நிலப்பகுதிகளில் தெலுங்கு பேசும் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள்னார்கள். அவர்கள் மேலும் அப்பகுதியில் குடியேறினர். அதன் விளைவாக புகழ் பெற்ற திருப்பதி கோயிலையும், தங்கள் தாயகத்தின் வடபகுதியையும் அங்கு இருந்த தமிழர்கள் இழந்தனர்...என ராமப்பையன் அம்மானை  பேசுகிறது

தமிழக வரலாறு, கு.இராஜய்யன் எழுதியதில்

 1635இல் சேதுபதி மன்னர் சடைக்கத் தேவர் என்பவர் தெலுங்கர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து திறை செலுத்த மறுத்ததாகவும், திருமலை நாயக்கர் மூலம் அனுப்பப்பட்ட இராமப்பையன்  சடையக்கத் தேவரை கைது செய்து மதுரைக்கு கொண்டு வந்ததாகவும், மக்களின் கடும் எதிர்ப்புக்கு திருமலை நாயக்கர் அடிபணிந்து சடையக்கத் தேவரை மீண்டும் சேதுபதியாக ஏற்றுக் கொண்டதாகவும் நூலாசிரியர் கு.ராசஜய்யன் குறிப்பிடுகிறார்.அடுத்து முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக 1584 ஆம் ஆண்டில் பிறந்த திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு ஆகும். முதலாம் முத்துவீரப்பர் வாரிசின்றி இறந்தார் அவரது தம்பி தான் திருமலை நாயக்கர் மதுரை  ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.                "சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்   இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்   மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட  சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ".

-நாச்சியார் திருமொழிஅவ்வழி "படரீர் ஆயின்,இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலமுண்டு",. என இரண்டாம் நூற்றாண்டில் உருவான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பப் பற்றிக் கூறுகிறார்.

மேலும் விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம்,பவகாரணி யோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார் . ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே ஆழகர் கோவில் அமைக்கப்பட்டது எனத் தெரியவருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த