தேவாரப் புகழ் திருஞான சம்பந்தர் பதிகம்
"மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.
விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே".

கரிகால பெருவளத்தான் தனது நாட்டு மக்களைக் காண்பதற்கு பட்டத்து யானையின் மீது நகர்வலம் வந்த உலாவில்
யானைக்கு மதம் பிடித்தது,
அப்போது அங்கிருந்த சிவபெருமானை நினைத்து வேண்டுதல் செய்ய அதை,
ஏற்ற இறைவன் அங்கு உலாவிய கோழியை தன் கண்ணால் பார்த்தவுடனே அந்த கோழி அசுர பலம் பெற்று யானையின் மத்தகம் மீது அமர்ந்து யானையின் மத்தகத்தை குத்தி தாக்கி யானையின் மதநீரை வெளியேற்ற. யானை மதம் தனிந்து இயல்பானது.
சிவபெருமானின் கருணையால் கோழி மூலம் தன்னைக் காப்பாற்றியதால். அங்கிருந்த சிவனுக்கு கரிகாலன் கோவில் அமைத்து வழிபட்டான்.
இவ்வூருக்கு ‘கோழியூர்' என்ற மற்றொரு பெயர் வந்தது. அதன் பின்பு கோழி ஒரு வில்வ மரத்தடியில் மறைந்தது. தேடிப்பார்த்த போது கிடைத்த சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினார் மன்னர்.
கோவில் உள்மண்டபத்தில் இடப்பக்கமுள்ள தூண் உட்புறம் “யானை அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவ்யானையை கோழி குத்திதாக்கும் சிற்பம் புடைசிற்பமாக வடிவமைக்கப்பட்டது.“
உதங்க முனிவர் மனைவியுடன் கங்கையில் நீராட மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டது உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவர் மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு பல இடங்களில் சுற்றித் திரிந்த பின் உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவனை காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்ததனால் இந்த ஸ்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் எனப் பெயர் பெற்றது.
உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் விழாவில் தரிசிப்பது சிறப்பாகும்.
கருத்துகள்