முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடற்கரை சாலையில் பெண்ணுக்கு தொல்லை தந்த காவல் அலுவலர் மீது விசாரணை நடவடிக்கை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் வசிக்கும் வட இந்தியக் குடும்பத்தைச் சார்ந்த பெண் மதுமிதா பைத்யா என்பவர் நேற்றிரவு  சி ஷெல் அவின்யூ என்ற இடத்தில் கடற்கரையில் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த காவல் துறை சார்ந்த ஆய்வாளர் ஒருவர்  மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.


குறிப்பாக வட இந்தியாவிற்கு போய் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுகள் செய்துள்ளார்.அதில் 

Dear @tnpoliceoffl yesterday faced very inappropriate behaviour from the on duty police officer in Sea shell avenue ECR Beach.After office hour my friend and I were sitting there with all decency and manner.We were not aware about the timing of the beach.The on duty police

— Madhumita Baidya (@madhumitabaidya) April 14, 2022

அப்போது மதுமிதா அந்த காவல் துறை சார்ந்த நபருக்கு பதிலளித்ததனைத் தொடர்ந்து அந்த காவல் அதிகாரி இவர்களை காவல்துறை வாகனத்தில் ஏறச் சொல்லி மிரட்டியுள்ளார். அதுகுறித்தும் பதிவில் கூறியுள்ளார்

Police officer came with full aggression and started to misbehave like I’m a terrorist or criminal. The most disrespectful thing he told is “Go and roam in North India after 10 o’clock”.Being a north eastern how come I am being tagged as North Indian???? Is it because I cant

— Madhumita Baidya (@madhumitabaidya) April 14, 2022

இந்த சம்பவத்தை விளக்கிப் பதிவு செய்துள்ள மதுமிதா, "நான் குற்றவாளி அல்ல, நல்ல முறையில் நடந்து கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளியுங்கள்" என்று தெளிவாகப் பதிவு செய்துள்ளார். மேலும்

Speak Tamil language??Then I was replying him back so he threatened me to take me in his Vehicle and he’ll file a case against me?Literally why?And there was no notice displayed about the timing for sitting in beach. Please train them to behave nicely atleast.I’m m not a criminal

— Madhumita Baidya (@madhumitabaidya) April 14, 2022

இந்த பதிவு பலர் பார்வையில் வந்த பிறகு குறிப்பிட்டு ட்விட்டரில் பலர் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இதற்கு தமிழக காவல் துறையின் சார்பில் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில்  பதிலளிக்கப்பட்டுள்ளதில், பணியிலிருந்த காவல் அதிகாரியின் பொறுப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் விபரமிது:

I regret at the rude & irresponsible behaviour of that police officer on duty. An enquiry is ordered and action as deem fit would be taken: DGP Tamilnadu, Tr. Sylendra Babu IPS.

— Tamil Nadu Police (@tnpoliceoffl) April 15, 2022.                   


 இதுபோன்ற மிகுந்த வசதி படைத்த மார்வாடி  பெண்கள் தங்கள் பாதிப்புகள் குறித்து பகிரங்கமாக வெளியிட்ட விபரம் நடவடிக்கைக்கு வந்த நிலையில் மிஸ்டர் பொதுஜனங்கள் இது போல் பாதிப்புகள் வந்த பலரும் வெளியே பேசுவதில்லை என்பதே உண்மை இதில் பொதுவாக நீதி காவல்துறையில் சிலர்  சட்ட விதிகள் தாண்டி வரம்பு மீறுதல் தான் இதுபோன்ற பிரச்சினை வளரக் காரணமாக அமைகிறது. சமீபத்தில் சாலை ஓரங்களில்  அமர்ந்து மது அருந்தும் நபர்கள் அதிக அளவில் இருக்கும் நிலை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் அங்கு இவர்கள் அதிகாரம் செய்யலாமே என்றது பலர் கருத்தாகும். அதுவே இங்கு பொது நீதி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,