முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கம்யூனிஸ்ட் வழி வந்த இசையமைப்பாளர் தற்போது பாஜக ஆதரவுக் களமாடுவதே விமர்சனம் வரக் காரணம்

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனத்தின் சார்பில் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிட்டதில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதிய நிலையில் அது சமூகவலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது. 


அவரது முன்னுரையில், "பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ள

இசையமைப்பாளர் இளையராஜாவின் முன்னுரை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  மோடியையும் அம்பேத்காரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.  கருத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிடுகின்றனர்.

சமீபத்திய  இளையராஜாவின் விவகாரத்தை நிதானமாக யோசிப்பவர்களுக்கு ஒன்று புரியும்.  இது இளையராஜாவின் இசையைப் பற்றியதல்ல., பிரதமர் நரேந்திர மோடியப் பாராட்டி ஒரு முன்னுரையில் எழுதியிருக்கிறார் என்பதே காரணம்.   இளையராஜா அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியை யாராவது கேட்கலாம்.  அதற்கான பதில்  நம் அனைவருக்கும் தெரியும்.   இது இளையராஜாவின் அரசியல் பற்றியதல்ல என்றால், இந்த விவகாரத்தின் மையப்புள்ளி எது?

இசையமைப்பாளர் இளையராஜா, தனிநபர் எனும் எல்லையைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமாக மாறிக் கொண்டிருக்கிறார் .  ராஜா ‘இசைஞானி’யாகத் தெரிவது ஏன் - அவர் உருவாக்கும் ஆநின்று என்ற நீண்ட நிகழ்காலம் - இளையராஜா விளைவு - இளையாராஜா நிகழ்வு - நினைவில் மறதியுள்ள மனிதன் - தமிழர்களின் இன்பத்தை வரையறுத்த இளையராஜா இசை:   இப்படியாக இளையராஜா குறித்து  அனைத்தும், இசையின் மூலமாக திரண்டெழும் பண்பாட்டு நிகழ்வையே விளக்குகிறது.  தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வாக



ஜல்லிக்கட்டு எப்படி ஒரு பண்பாட்டு நிகழ்வாக உருமாறி நிற்கிறதோ, பெரியார் என்ற சொல் எவ்வாறு நிற்கிறதோ, நீத்தோர் கடன் எவ்வாறு இன்றளவும் செயல்படுகிறதோ, ‘தாய்மொழி’ எவ்வாறு தமிழ்ப்பண்பாட்டில் திரண்டு நிற்கிறதோ அதே போன்ற தொரு காலிக் குறிப்பானாக இளையராஜா உருமாறி வருவதையே நாம் அறியலாம்

காலிக்குறிப்பான், பன்முகத்தை செயல்வடிவமாகக் கொண்ட ஒற்றைப் பொதுத்தளம்.  அடையாளங்களால் பிரிந்து நிற்கும் பலரும், இந்த ஒற்றையின் கீழ் திரளவும், தத்தம் பன்மைகளைப் பேசிக் கொள்ளவும் முடிகிறதென்பதே காலிக்குறிப்பான்களின் சிறப்பு.  இதற்காக இக்காலிக்குறிப்பான் செய்கிற தியாகம் பெரிது - நினைவில் மறதியுள்ள மனிதனாக இருப்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  

இளையராஜா பாடல்கள் எப்படித் தங்கள் ‘பூர்வீக திரைப்பட நினைவுகளை’ மறந்து விட்டு நம்மோடு உறவாடுகின்றனவோ அதே போல, இளையராஜா என்ற நபரும் தனது பூர்வீக சமூக நினைவுகளை மறந்து நிற்கும் பொழுதே, ‘இளையராஜா நிகழ்வு’ நடைபெறத்தொடங்குகிறது.  இப்படித் திரண்டு நிற்கும் நிகழ்வுகள் இல்லாத சமூகம் சிதைந்து போகிறது என்பதே வரலாறு.  அந்த வகையில், இளையராஜா நிகழ்வே நம்மை சமகாலத்தில் ஒரு சமூகமாக உணர வைக்கிறது.

‘இளையராஜா நிகழ்வு’ போன்று பண்பாட்டில் திரண்டெழும் காலிக்குறிப்பான்களின் அரசியல் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.  அவற்றிற்கென்று தனியே எந்த அரசியலும் இருப்பதில்லை.  அவை, தங்கள் நினைவுகளை மறந்து விட்டே உங்கள் முன் நின்று கொண்டிருப்பதால், அவற்றின் ஞாபகம் காலியாக இருக்கிறது.  அதில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உங்கள் ஞாபகங்களை இட்டு நிரப்பிக் கொள்ள முடிகிறது.   பன்முகப்பட்ட குழுக்களை ஒற்றை பொதுமையின் கீழ் கொண்டு வருவதற்கு இப்படியான ‘நினைவில் மறதியுள்ளவர்’களைத் தவிர வேறு வழியில்லை என்பதே காலிக்குறிப்பான்களின் அரசியல். 

இப்படியொரு நிகழ்வாகத் திரண்டு நிற்கும் இளையராஜாவின் மூலம், ஒற்றைப் பொதுமைத் தளமொன்றை நிர்மாணிக்க முடியும் என்று தெரிந்த பின்பு நாம் செய்தது என்ன என்பதையே ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும் 


சமத்துவ தமிழ்ச் சமூகத்தைக் கற்பனை செய்யும் திராவிட இயக்கங்கள், கம்யுனிஸ்ட்கள், அடித்தள மக்கள் இயக்கங்கள் இப்படியொரு சாத்தியம் உருவாகி நிற்பதை இந்த நிமிடம் வரை உணரவில்லை.  திராவிட இயக்கங்களில் இவற்றை உணரக்கூடிய நபர்கள் இருப்பார்களா என்பது நமது சந்தேகம்.  இருந்தால், சித்திரை திருவிழா உள்ளிட்ட  நாட்டார் தெய்வங்களையும், சடங்குகளையும் கூட சமரசத்தோடு ஏற்றுக் கொள்ள முன்வரும் கம்யுனிஸ்டுகளால் ‘இளையராஜா நிகழ்வை’ எவ்வித மனச்சாய்வுமின்றி யோசிக்க முடிவதில்லை.  1960 ஆம் ஆண்டுகளில் அரை டிராயர் போட்டு, அவரது சகோதரர் பாவலர் வரதராஜன் உடன்  கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடிய ராசையா வேறு இப்போது உள்ள இளையராஜா என்பது வேறு என்று அவர்களுக்கு யார் சொல்லித்தர முடியுமென்று தெரியவில்லை.  அடித்தள மக்கள் இயக்கங்களிடம் இந்த விஷயத்தில் ஓர் ஆதாரக் கோளாறு இருக்கிறது - அவர்கள் ‘நினைவில் மறதியுள்ள இளையராஜாவை’ பூர்வீகத்தை மறந்த துரோகியாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.  ஆனால், உண்மையில் இம்மூன்று இயக்கங்களும் பயன்படுத்திக் கொள்ள முடிகிற வலிமையான பண்பாட்டு நிகழ்வாகவே இளையராஜா எழுந்து நிற்கிறார்.


மத அரசியலோடு, அடிப்படைவாதப் போக்கை பின்பற்றுகிறதென கருதப்படும்  பாரதிய ஜனதா கட்சியும் சரி, அவர்களது பின்புலமான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்குகளும் சரி, அவர்களுக்கு தமிழகத்தில் தேவைப்படுவதெல்லாம் ஓர் அங்கீகாரம் மட்டுமே.  உடனடியான அரசியல் அதிகாரக் கைப்பற்றுதலை அவர்கள் நம்பவில்லை.  அதற்கு முன், தங்கள் மீதான களங்கத்தை அவர்கள் நீக்க விரும்புகிறார்கள்.  இதன் காரணமாகவே, தங்களது சப்தம் மிக அதிகமாகக் கேட்கும் படி ஊடகங்களாகட்டும்.  இதில், தொடர்ச்சியாக நிறையக் கோமாளிகளை அவர்கள் தயாரித்து அனுப்புகிறார்கள்.  அவர்களது தலைவர்களை யெல்லாம், குறைந்தபட்சம் அரசியல் கோமாளிகளாக வேணும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.  நம் சமூகம் ‘கோமாளிகளாக’ ஏற்றுக் கொள்ளவும் தொடங்கிவிட்டது.  இதுவொரு ஆபத்தான அரசியல் விளையாட்டு.  ரஜினிகாந்த், ஜாக்கி சென் போன்றோர் தன்னை ஒரு பக்கம் கோமாளியாகவும் இன்னொரு பக்கம் வீரதீரனாகவும் காட்டி வெற்றி பெற்ற வெகுஜன கதையம்சமான அரசியல்.  

இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயரில் ஒரு முன்னுரையை வெளியிடுவதன் மூலமும், அதில் பிரதமர் குறித்து சில பாராட்டுரைகளை பரப்புவதன் மூலமும் பாஜக இனியும் அடித்தள மக்களின் முன் விலக்கப்பட்ட அமைப்பல்ல என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள்.  அதற்காக இசையமைப்பாளர்   இளையராஜாவைப் பயன்படுத்தியதன் மூலம் இது சாத்தியமாகும் வாய்ப்புகளே அதிகம்.   பக்தி இயக்க காலங்களில்  நிகழ்ந்த சாத்வீக வாதத்தைப் போல 

மாநில  இந்து சமய அறநிலையத்துறையைக் கையில் வைத்திருக்கும் அரசால் இளையராஜா நிகழ்வை விளங்கிக் கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை என்றால் அதற்கான மன்மாச்சரியங்களை அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலை.  தங்களது கொள்கை முழக்கங்கள் மறந்து கள்ளழகர் விழாவைக் கூட கொண்டாடத் தொடங்கி விட்ட கம்யுனிஸ்டுகளால் இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்வை ஏன் கைப்பற்ற முடியவில்லை என்றும் அவர்களே தான் விவாதித்துக் கொள்ள வேண்டும்.  அடித்தள மக்கள் இயக்கங்கள் இளையராஜா நிகழ்வை விளங்கிக் கொள்ளவும், பயன்படுத்திக் கொள்ளவும் தீவிரமான அயோத்திதாசரிய பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  இதுவெல்லாம் நடந்தால், அடிப்படைவாதச் சிந்தனைகள் தமிழகத்தில் நுழைவதற்கு வாய்ப்பில்லை.  மீறினால், இளையராஜாவும் 63 நாயன்மார்களில்  நந்தனாராக இனி  பெரிய பெரிய புராணங்கள் பேசும் நிலை இசையமைப்பாளர்" இளையரசா முன்னுரை எழுதக் கூட கருத்து சுதந்திரம் தர மறுத்து அவர் மீது வெறுப்பை உமிழும் கருத்தே இல்லாத கருத்து  சுதந்திரப் போராளிகளுக்கு அர்ப்பணம். புறக்கணிக்கப்பட்ட ஜாதிகளின் வளர்ச்சி பிடிக்காதவங்க தான் இளையராசா முன்னுரையில் இப்படி எழுதி விட்டாரே என்று பொங்குகிறார்களோ?

இது இளையராசா முன்னுரைக்கு ஆதரவு பதிவல்ல. நுனிப்புல் மேயும் அவசரக்குடுக்கைகளுக்காக.ஒரு வெளி வராத புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் என்ற விளம்பரத்திற்காக இசையமைப்பாளர் இளையராசா  மீது வெறுப்பை உமிழ்பவர்கள் எத்தகையவர்கள்

புத்தகம் வரட்டும். புத்தகம் என்ன பேசுகிறது என்று படிப்போம். முன்னுரையிலிருந்து சில பகுதிகளை அந்த புத்தக நிறுவனம் துண்டு துண்டாக வெளியிட்டு இருப்பதை பார்த்து ஒரு முன் கருதுகோளுக்கு வர யாரும் தயாராகவில்லை.

சமீபத்திய ஆண்டுகளாக பாசக, சங் பரிவார் குறித்த ஆய்வுகள், கட்டுரைகள் விமர்சனங்கள் தான் அதிகமாக விற்ற புத்தகங்கள். அருட்கூர்ந்து பிளிப்கார்ட் அமேசானில் சென்று வாங்க வேண்டாம், தேட முயலுங்கள்.

ஆட்சிக்கு வந்த ஓராண்டு முதல்வர்  புத்தகம் வெளியிடுகிறார். அதை காங்கிரஸ் கட்சி  ராகுல் காந்தி கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் பினராயி விசயன் என்று கொண்டாடியது போலவே இந்த நிகழ்வு

ஒப்பீட்டளவில் முத்தலாக் என்ற இசுலாமிய பெண்கள் அடைந்த விடுதலையை சமூக பாதுகாப்பை ஒப்பிட்டு இளையராசா எழுதி இருக்கிறார். இளையராஜா மீநு வெறுப்பை உமிழும் சமூகமே முத்தலாக் சட்டம் குறித்து இசுலாமிய பெண்கள் கருத்தை அறிந்து புத்தகம் வெளியிட்டீர்களா? என்பது எழுவினா 

இசுலாமிய பெண்களுக்கு இருந்த தடைகளை நீக்கிய பாரதிய ஜனதா கட்சி சபரிமலைக்குப் பெண்கள் போக கூடாது என்ற போராட்டத்தில் ஈடுபட்ட போது இரண்டையும் ஒப்பிட்டு எழுதினோமா? என்பதும்  எழு வினா.

75 ஆண்டுகளில் அட்டவணைப் பிரிவு மக்களை அரசியல் அதிகாரத்தில் முழுமையாக அமர்த்தி விடாத சக்திகள் தான் தற்போது வரை முன்னேறியவர்களை  முன்நிறுத்தி பக்கவாட்டில் நிறுத்தி இது நாள் வரை அதிகாரம்  அறியாத கிடைக்காத ஜாதிகளாகத் தேடித் தேடி பதவிகளை வழங்குகிறது என்பதையும்  சிந்தனைக்கு வைத்து. டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும் பிம்பத்திற்கும் பின்னால்  அவர்கள் ஒழிஞ்சு விளையாடுவது தவிர வேறு இல்லை.

சங் பரிவார்கள் வழியில் அரசியல் இயக்கமாக உள்ள பாரதிய ஜனதா கட்சி அவர்களது கருத்தியலை கையில் எடுத்து  தற்போது அரசியல் செய்கிறார்கள். இது விபரம் அறிந்த அரசியல் புரிந்த பவரை யோசிக்க வைக்கிறது. என்பதே உண்மை நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...