முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கையில் சரியும் பொருளாதாரம் சரிக்கட்ட அரசின் இறுதி முயற்சி பின்னடைவு மக்கள் போராட்டம்

இலங்கை இறக்குமதியை மட்டும் நம்பியிருக்கும்  பொருளாதாரம் உலக நாடுகளில் ஏற்படும் நெருக்கடிக்கு உடனடியாக முகம் கொடுத்தாக வேண்டும் என்பதற்கேற்ப இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பும் பெருமளவு குறைந்துள்ளது.

270 கோடி அமெரிக்க டாலராக அதன் அந்நிய செலாவணிக் கையிருப்பிருக்க, வெளிநாடுகளுக்கு அது செலுத்த வேண்டிய கடன் பாக்கி 3,500 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாகவே உயர்ந்துள்ளது. ஏறக்குறைய இலங்கை அரசின் வருவாயில் சுமார் 80 சதவிகிதம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகவே செலவிடப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, அந்நியச் செலாவணி பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது         கொரோனா பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் இலங்கை பெரிய  பொருளாதார பாதிப்பை சந்திக்கிறது. இலங்கைக்கு வந்த அந்நியச் செலாவணி வரத்தும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்த நிலையில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியிது. கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவ. நிலக்கரி வாங்கப் பணமில்லாததால் இலங்கையில் தினம் 12 மணி நேரம் மின்வெட்டு அமலிலுள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து. பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தன.



மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஏப்ரல் 1 ஆம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். கிட்டத்தட்ட ஐந்து நாள்களுக்குப் பிறகு நேற்று அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார் கோத்தபய ராஜபக்சே. அந்நாட்டின் அரசிதழில், ஏப்ரல் மாதம்  5 ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முறைப்படி அமல்ப்படுத்தப்பட்டது.





 பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது மூத்த சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர இலங்கையின் அமைச்சரவையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்தது.



 பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி நேற்று எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்பு வேலிகளை அகற்றியவர்கள் ராணுவ வாகனத்திற்கும் தீ வைத்ததனால் முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது போராட்டத்திலீடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். பின்னர் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதில் 10 நபர்கள் காயமடைந்தனர். போராட்டம் காரணமாக கொழும்பு நகரில் பதற்றமேற்பட்டது.  தொடர்ந்து கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தியக் கொழும்பு, நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் 12 அதிருப்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தனித்துச் செயல்பட முடிவு செய்ததால் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.



வெள்ளிக்கிழமை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, 36 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப் படுகிற நிலையில். ஆளும் இலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (எஸ்எல்பிபி) 117 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சியான லங்கா சுதந்திரக் கட்சிக்கு 15 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும் ஆளும் கூட்டணியில் சேர்ந்த 10 கட்சி கூட்டணிக்கு 14 உறுப்பினர்கள் இருந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் 12 அதிருப்தி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் தனித்துச் செயல்பட முடிவு செய்தனர். இதனால் அரசுக்கான ஆதரவு நேற்று 105 ஆக குறைந்து, கொத்தபய ராஜபக்ச அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.

பிரதமர் ராஜபக்ச தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க பிற கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டிய அவசியமுள்ளது.


ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை 41 லிருந்து மேலும் அதிகரிக்கலாமெனக் கூறப்படுகிற சூழ்நிலையில், இடைத் தேர்தலை நடத்துவதற்காக பொறுப்பு அரசாங்கத்தை அதிபர் நியமிப்பது அவசியமாகுமெனவும் கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இலங்கைக்கு கொடுத்த கடனின் ஒரு பகுதியை சீனா திருப்பி தருமாறு கேட்டுள்ளது. ஒருவேளை இலங்கை கொடுக்க முடியாத பட்சத்தில் சீனா இதற்கு ஈடாக வேறு இழப்பீடுகளை கேட்கும் வாய்ப்புகளும் உண்டு.


தெற்காசிய நாடுகளுக்கு சீனா அதிகமாகக் கடன் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளது. பெல்ட் அண்ட் ரோட் திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் சீனா முதலீடு செய்யும். இதற்கு கடனாக பல மில்லியன்களை சீனா அந்த நாடுகளுக்கு கொடுக்கும்.

நிலையில் அந்த நாடுகள் கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில், அந்த நாடுகளின் பல்வேறு வளங்களை சீனா கட்டுப்படுத்தும். துறைமுகம் போன்ற இடங்களை சீனா கையகப்படுத்தும்.சீனாவின் இந்தச் செயலை டெப்ட் டிராப் பாலிசி  என்பார்கள். பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி, அதற்கு வட்டி மேல் வட்டி கட்டி தற்போது பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. சீனாவில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இந்தக் கடனும் முக்கியக் காரணமாகும். 1948 ஆம் ஆண்டுக்குப் பின்பாக இலங்கை மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.  தங்களது கடல் எல்லையில் இறக்குமதி தயாராக இருக்கும் கச்சா எண்ணெய்யை வாங்கக் கூட இலங்கையிடம் வெளிநாட்டுச் செலாவணியான அமெரிக்க டாலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து இலங்கைக்கு இந்தியா 2.4 பில்லியன் டாலர் கடன் கொடுத்து உதவியுள்ளது. அதோடு 400 மில்லியன் டாலர் பரிமாற்றத்தையும்  மேற்கொண்டுள்ளது. மேலும் 500 மில்லியன் டாலர் கடனை பின்பு செலுத்தும் படி ஒத்தி வைத்துள்ளது. அதாவது இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடனை இப்போது திருப்பிச் செலுத்த வேண்டாம் என்று இந்தியா பெருந்தன்மையாகக் கூறியுள்ளது. இன்னொரு பக்கம் 1 பில்லியன் டாலருக்கு மருந்து, உணவு உட்பட பல்வேறு உதவிகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கைக்கு கடுமையாக கடன் கொடுத்து அந்த நாட்டை கட்டுப்படுத்தி வந்த சீனா தற்போது கடனை கேட்டு  நெருக்கியுள்ளது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்க நகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், ஒரு பிரெட் பாக்கெட்  விலை 200 ரூபாய் என ஆடம்பரமான பொருள் முதல் அத்தியாவசியப் பொருள் வரை பெரும் விலையேற்றத்தைச் சந்தித்த இலங்கை மக்கள் ஒரு கட்டத்தில் டீசல் தட்டுப்பாடு, மின் வெட்டு போன்ற தொடர்ந்து பாதிப்புகளால் பொங்கி யெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்திலீடுபட்டு வருகிற நிலையில்   இந்தியாவில் சில மாநில அரசுகள் கொடுக்கும் இலவசத் திட்டங்களால் இந்தியாவும் இலங்கை போன்ற பொருளாதாரப் பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசு அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளதாக தகவல். மாநில அரசு பணிகளிலிருந்து விடுபட்டு மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அப்பொழுது சில மாநிலங்கள் கொடுக்கும் இலவசத் திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி செல்வதாகவும், இதுபோன்ற இலவச திட்டங்களால் இலங்கை தற்பொழுது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியை இந்தியாவும் எதிர்காலத்தில் சந்திக்க வாய்ப்பிருப்பதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கூறியதாகத் தகவல்கள் வெளியான நிலையில்  பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அறிவித்துள்ள திட்டங்கள் பொருளாதார ரீதியாக நிலைக்கத்ததக்கவை அல்ல எனவும் அதிகாரிகள் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் நான்கு மணி நேரம் பிரதமருடன் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...