அனுமதி பெறாமல் தனி செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பிய இளைஞரை ஹைதராபாத் காவல்துறையால் கைது .
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பு செய்து வருகின்ற நிலையில் 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி (வயது 29)
என்ற நபர் அனுமதி பெறாமல் தனது செயலி மூலம் ஒளிபரப்பு செய்ததுதொடர்பாக ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கடாரம் துப்பா (வயது 36) என்பவர் ஹைதராபாத் சைபர் கிரைம்
காவல்துறையில் புகார் செய்த நிலையில் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறை சார்பு ஆய்வாளர் ரவீந்தர், தலைமையில் காவலர்கள் சுனில், திருமாவேலன், குபேந்தர், மணிகண்டா ஆகியோர் சிவகங்கையில் ராமமூர்த்தியைக் கைது செய்தனர். பின்னர் அவரை சிவகங்கை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 ல் ஆஜர் செய்தனர். பின்னர் ஹைதராபாத் அழைத்து சென்றனர். அனுமதி பெறாமல் தனி செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பிய இளைஞரை ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள்