அமராவதி சமஸ்தானத்தின் மன்னர் வழங்கிய இனாம் நிலங்களை அனாதீனம் செய்து பின் வகைப்பாடு மாற்றம் செய்து 134 கோடிக்கு மூன்று அதிகாரிகள் மோசடி
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் கிராமத்தில் 134 கோடி ரூபாய் மதிப்புள்ள 102 ஏக்கர் அனாதீன ரயத்துவாரி நிலத்தை, 66 தனி நபர்களுக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கின் புலன் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் கிராமத்தில், 134 கோடி ரூபாய் மதிப்புள்ள 102 ஏக்கர் அனாதீன நிலம் (தனியார் நில உரிமையாளரிடமிருந்து அரசு கையகப்படுத்தியது), 66 தனி நபர்களுக்குச் சட்ட விரோதமாக
ஒதுக்கப்பட்டுள்ளது. தாழம்பூரில், அரசுக்கோ அல்லது முகம் தெரியாத ரயத்துவாரி தனியாருக்கோ சொந்தமான, 102 ஏக்கர் பட்டாதாரர் பெயருள்ள இடத்தில் அனாதீனமாக அச்சிடப்பட்ட அ.பதிவேடுகளில் உள்ள நிலத்தை, சட்டவிரோதமாக தனி நபர்களுக்கு மாற்றிய அரசு ஊழியர்களான வருவாய் துறை அலுவலர்களில் மூவர் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் அணைத்தும் இரத்து செய்யப்பட்டு, அந்தச் சொத்துக்களை, இனி பத்திரப்பதிவு செய்ய வேண்டாமென, சார் - பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளதனால், இந்த நில மோசடி விவகாரம், இப்போது நீதிமன்றத்திலுள்ள நிலையில்.. அது குறித்து முழுமையான விபரங்கள் வருமாறு:- செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, தாழம்பூர் கிராமத்தில், அனாதீனமென வகைப்படுத்தப்பட்ட, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட நிலங்கள் உள்ளன. மெட்ராஸ் இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டப்படியான ரயத்துவாரி செட்டில்மென்ட் அல்லது இந்நிலங்களை, 'அனாதீனம்' என, தமிழக அரசு வருவாய் அ.பதிவேட்டில் வைத்துள்ளது. இதன்படி, இந்நிலங்கள் மீது மோசடி பட்டா வழங்க காரணமாக இருந்த
அலுவலர்கள் மீது பாய்ந்தது வழக்கு: தாழம்பூரில், அரசுக்கு சொந்தமான அல்லது தனியார் உரிமை கோரப்படாத , 102 ஏக்கர் அனாதீன நிலத்தை, சட்டவிரோதமாக உரிமை இல்லாத தனி நபர்களுக்கு மாற்றிய வருவாய் துறை அலுவலர்கள் மூவர் மீது, வழக்கு பதிவு செய்துள்ள நிலையில்
இந்நிலங்களை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் சிலர், அரசின் அனுமதியின்றி, மோசடியாக ரயத்துவாரி புஞ்சையை மனையிடமாக மறுவகைப்பாடு செய்து, தனியார் பெயருக்கு ஒதுக்கியதாகப் புகார் எழுந்தது. தாழம்பூர் கிராமத்தில், 100 ஏக்கருக்கும் அதிகமான அனாதீன நில பட்டாக்கள், பல தனியார் நபர்களுக்கு, சட்ட விரோதமாக 2008 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டுக்கு இடையில், ஒதுக்கியது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், 500 ஏக்கருக்கு மேற்பட்ட அனாதீன நிலத்தில், 102 ஏக்கர் நிலங்கள், 66 நபர்களுக்கு சட்டவிரோதமாகப் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதில் சம்பந்தப்பட்ட வருவாய் துறையின் மூன்று உயர் அதிகாரிகள் மீது, விசாரணை மேற்கொள்ள, நீதிமன்றத்தின் உத்தரவு படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜான் லுாயிஸ், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் இரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறை தீவிரமாக விசாரித்தனர்.
அதில், வருவாய் துறை அதிகாரிகள் மூன்று பேர் கூட்டாகச் சேர்ந்து, அரசு ஆவணங்களைத் திருத்தி, முறைகேடாக பட்டா வழங்கியது தற்போது தெரியவந்தது. மோசடியான நிலங்களை விபரம் தெரியாமல் வாங்கிய மக்கள் விழி பிதுங்கி வெளியே சொல்ல முடியாமல் நிற்கின்றனர். அனாதீனம் என்பது உரிமையாளர் அல்லது அவர்கள் காலமான பின்னர் அவரது வாரிசுகளால் உரிமை கோரப்படாமல் உரிய டைட்டில் அதாவது உரிமை ஆவணங்கள் இருந்தும், வருவாய் வரி செலுத்தும் ஆவணங்கள் மாற்றம் ஆகாமல் இருந்தால் அது அனாதீனம். சில ஆதரவற்ற பிள்ளைகள் ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பார்கள் அதனால் அவர்கள் தாய் தந்தை இல்லாமல் பிறந்த நபர்கள் அல்ல அவர்களுக்கும் தாய் தந்தை இருந்து, இப்போது இல்லாமல் இருக்கும். அது போலவே நிலங்கள் இதற்கு உரிமை உள்ள நபர்கள் தனியார் மட்டுமே அரசு நிலமாக அது இருக்க முடியாது என்பது தான் உண்மை
அதற்கு முன் SLR அல்லது SF-1 மற்றும் SF-1A ,SF-7, மற்றும் 100 ஆண்டுகளுக்கு உரிய பதிவுத்துறை வில்லங்கச் சான்றுகள் மற்றும் OSR அது கடந்த IFR ஆவணங்கள் சரி பார்த்து உண்மை நிலை அறிந்து நடவடிக்கை தேவை. வருவாய் கணக்குகளில் மாற்றம் ஆகாமலுள்ள நிலம் ஆகும். நஞ்சை, புஞ்சை, மானாவாரி,தரிசு, மனையிடம் ஆகியவை மட்டுமே நிலங்களில் வகைப்பாடு ,, அனாதீனம் என்பது உரிமையாளர் உரிமை கோரப்படாத வரி விதிப்பு மாற்றம் ஆகாமல் உள்ள நிலம் அதில் புஞ்சை மட்டுமே இருக்கும். இது பல நபர்கள் அரியாமல் இருப்பினும் இதுவே சரியான தகவல். செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழம்பூரில் அனாதீன நிலங்களை வீட்டு மனைகளாவும் வேறு சில நிறுவனங்கள் அடுக்குமாடி கட்டிடங்களாகவும் விற்பனை செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாணையில் உள்ளது.
ஆகவே, தாழம்பூரில் நிலங்கள் வாங்க நினைக்கும் மக்கள் ஊஷராக விசாரணை நடத்திய பின்னர் வாங்க வேண்டும். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படியும், இந்த வழக்குத் தொடர்பான புலன் விசாரணை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது. இந்த மோசடியில், முதலாவது நபரான நிலச் சீர்திருத்த பிரிவு இணை ஆணையர் பாலசுப்பிரமணி, இறந்ததாகக் கூறப்படும் நிலையில். இரண்டாவது நபர் உதவி ஆணையர் பழனியம்மாள், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும்; மூன்றாவது நபர் முத்துவடிவேலு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர்களாகப் பணியாற்றி வரும் இவர்கள் தங்களை முழுமையாக அதிகாரம் உள்ள நபர்கள் என நினைத்து இந்த விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், முன்ஜாமின் வழங்கும் படி கோரியும், நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுக்களை, நீதிமன்றம் ஏற்காத நிலையில், இவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இவர்கள் முறையாக ஒத்துழைக்காத பட்சத்தில், கைது செய்து, காவல் துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கப்படும் நிலை ஏற்படும். என்பதே தற்போதைய நிலை . இந்த நிலம் குறித்து நமது பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் சேகரித்த தகவல்கள் வருமாறு:- ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அமராவதியை ஆட்சி செய்த சமஸ்தானத்தின் மன்னர், இராஜா வசிரட்டி வெங்கடரி நாயுடு, 1881 ஆம் ஆண்டில் சதாவர்தி அறக்கட்டளைக்கு, ஏராளமான நிலங்களை இருவார தர்மாசனமாக (குடிவாரம் மற்றும் மேல் வாரம் ) அல்லது இனாம் அல்லது வரியிலி தானமாக வழங்கியதாகக் கூறப்படுவதில், ஒரு பகுதி நிலங்கள், சென்னை தாழம்பூரில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சதாவர்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான தாழம்பூர் நிலங்களை மீட்டு, ஏலம் விட வேண்டுமென, ஆந்திர அரசியலில் அவ்வப்போது பிரச்னை எழுகிறது. இது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் முன்பே எதிர் கட்சியாக இருந்த காலத்தில் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியிலிருந்தபோது, இப்பிரச்னையை சட்டசபையில் அடிக்கடி எழுப்பினர். அப்போது, முதல்வரான சந்திரபாபு நாயுடு, ''தாழம்பூர் நிலங்களை அனாதீன நிலங்களாக தமிழக அரசு உரிமை கோரியுள்ளது. இது தொடர்பான வழக்கு, டில்லியில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் ஆந்திர அரசால் எதுவும் செய்ய முடியாது,'' என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது வகையாக மாட்டிக் கொண்டது ஊழல் கும்பல் ...!
கருத்துகள்