1971 போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவகத்தை, தேசிய போர் நினைவுச்சின்னத்துடன் இணைக்கும் பணி நிறைவடைந்தது.
1971 போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக இந்தியா கேட்டில் வைக்கப்பட்டிருந்த தலைகீழாகப் பிடிக்கப்பட்ட துப்பாக்கி & தலைக்கவசம், பாதுகாப்பு படையினரால் தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு மாற்றப்பட்டது
1971 போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக புதுதில்லி இந்தியா கேட்டில் வைக்கப்பட்டிருந்த தலைகீழாகப் பிடிக்கப்பட்ட துப்பாக்கி & தலைக்கவசத்தை, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள பரம் யுத்த ஸ்தலத்திற்கு எடுத்துசென்று, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் மார்பளவு சிலைகளுக்கிடையே நிறுவினர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம், 1971 போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவகத்தை, தேசிய போர் நினைவுச்சின்னத்துடன் இணைக்கும் பணி நிறைவடைந்தது.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஏர்மார்ஷல் பி ஆர் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முப்படைகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்