2022-23 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டர் என்ற சாதனை வேகத்தில் 18,000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையை அமைக்க உறுதிபூண்டுள்ளதாக திரு நிதின் கட்கரி கூறுகிறார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், புதிய இந்தியாவின் லட்சிய இலக்கைப் பூர்த்தி செய்ய நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை, நாள் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டர் என்ற சாதனை வேகத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 18,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை விரிவாக்க உறுதிபூண்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 2025-ஆம் ஆண்டுக்குள் 2,00,000 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை உருவாக்க ஒட்டுமொத்த இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாலை உள்கட்டமைப்பு தற்சார்பு இந்தியாவின் ஆத்மாவாக உள்ளதால் உலகத்தரம் வாய்ந்த சாலை உள்கட்டமைப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கை எட்டும் வழியில், உருவாக்குவது அவசியம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கருத்துகள்