தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பட்டிணப் பிரவேச விழா கோலாகலமாக நடந்தது
பல தடைகள் கடந்து நேற்றிரவு பட்டிணப் பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றதில்
தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமை தலைமையில் 70 பக்தர்கள் தோளில் சுமந்த ஆதீனத்தைச் சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்தனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தூக்கும் பல்லாக்கு நிகழ்வான, பட்டிணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தால் நானே சென்று பல்லக்குத் தூங்குவேன் எனக்கூறிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா ஆகியோர் ஒரு சில வினாடிகள் சம்பிரதாய முறைப்படி பல்லக்கைத் தூக்கிச் சுமந்தார்.
யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டாம், கிராமியக் கலை நிகழ்ச்சி என பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார். ஆதீனமடத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் உள்ள குடும்பங்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பளித்தனர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் அருளாசி வழங்கிய விழாவில்
சைவ மடங்களின் ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகி எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோருடன் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
ஈசனை கோவிலில் பார்க்கிற பக்தர்கள், மனதில் பார்க்கிறவர்கள் சித்தர்கள், அனைவரிடத்திலும் பார்க்கிற பூரண ஞானிகள். தருமையாதீனம் எல்லாரிடமும் கடவுள் வாழ ஆனால் கடவுளிடம் எல்லோரும் வாழ்வதில்லை, ஒரு சிலருக்கு மட்டும் அப்படிப்பட்ட பாக்கியம் கிட்டும் அதில் ஒருவரே குருமகா சந்நிதானம் திருவடியை போற்றி !
மரத்திற்கு அதோட கிளைகள் தான் சந்ததி, மனுஷனுக்கு அவனது பிள்ளைகள் தான் சந்ததி, பூமிக்கும், ஆகாயத்திற்கும், ஏன் காற்றுக்கும், நெருப்பிற்கும், மழைக்கு கூட சந்ததியோ பரம்பரையோ எதுவுமில்லை ஆனால் ஆண்டவனுக்கும் பரம்பரை உண்டென்றால் அதுவும் திருக்கயிலாயப் பரம்பரை தான் !தருமையாதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு இருபத்தி ஐந்தாயிரம் பக்தர்களுடன் நடைபெற்ற தருமபுரம் ஆதீனம் குருபூஜை பட்டினப்பிரவேச பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
காவல்துறையினரையும் சேர்த்து மொத்தம் 27 ஆயிரம் பேரை தருமபுரத்திற்கு வரவைத்த செந்தமிழ் சொக்கநாதர் !
தருமையாதீனம் 27 நிகழ்வு மக்கள் எழுச்சி கலந்த விழாவாக சிறப்பாக நடந்தது.
கருத்துகள்