எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து வான் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது
எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து வான் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை வங்காளவிரிகுடா பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நேரடியாக தாக்கி சாதனைப்படைத்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட தூரத்திற்கான பிரம்மோஸ் ஏவுகணை எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து செலுத்தப்பட்டது. இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் தரை / கடல் பகுதியில் தொலைதூர இலக்குகளை தாக்கும் திறனை இந்திய விமானப்படை பெற்றுள்ளது.
கருத்துகள்