முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை சாலை மார்க்கமாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணித்த பிரதமருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை


ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பளித்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக 5:45 மணியளவில் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்ற  சாலை மார்க்கமாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் பிரதமருக்கு வழிநெடுகிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது






 சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டிருந்தனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


காவி உடை அணிந்த கலைஞர்கள் கராத்தே, பரத நாட்டியம், கதகலி, சிலம்பம் போன்ற கலைகளை செய்துகாட்டி பிரதமரை வரவேற்றனர்.தமிழ்நாட்டில் ரூ.31,500 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் ரூ.31,500கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  இந்தத் திட்டங்கள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதோடு, போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்தி, இப்பகுதியில், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு உத்வேகம் அளிக்கும்.   தமிழக ஆளுனர் திரு.ஆர்.என்.ரவி, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.  "இந்த பூமி சிறப்புமிக்கது.  இந்த மாநிலத்தின் மக்கள், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகிய அனைத்தும் தலைசிறந்தவை" என்றும் அவர் குறிப்பிட்டார்.   தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் அல்லது பலர் எப்போதும் சிறந்து விளங்குகின்றனர்.  காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினரை சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர்,  "இம்முறை, இந்தப் போட்டியில் இந்தியா சிறப்பான திறமையை வெளிப்படுத்தியது.  நாம் வென்ற 16 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் 6 பதக்கங்களை வென்றுள்ளனர்"
 
வளமான தமிழ் கலாச்சாரம் குறித்து பேசிய பிரதமர், “ தமிழ்மொழி நிலைபேறுடையது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. சென்னையிலிருந்து கனடாவுக்கும், மதுரையிலிருந்து  மலேசியாவுக்கும், நாமக்கல்லிலிருந்து  நியூயார்க்கிற்கும், சேலத்திலிருந்து தென்னாப்பிரிக்கா வரையிலும் பிரசித்தி பெற்றது. பொங்கல் மற்றும் புத்தாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அண்மையில் கேன் திரைப்பட விழாவில் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தரான மத்திய அமைச்சர் திரு எல். முருகன் தமிழ்நாட்டு பாரம்பரிய உடையுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தது உலக முழுவதுமுள்ள  அனைத்து தமிழ் மக்களையும் பெருமைகொள்ளச் செய்தது என்று அவர் கூறினார்.

புதிதாக தொடங்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், சாலை போக்குவரத்துக்கு உந்துதலாக இருக்கும் என்பது கண்கூடு என்று அவர் குறிப்பிட்டார். இது பொருளாதார வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடையதாகும். பெங்களூரு -சென்னை விரைவு பாதை இரண்டு பெரிய மையங்களை இணைக்கும் என்றும் சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலை இணைக்கும் மேல்மட்ட இரண்டடுக்கு நான்கு வழிச் சாலை மிகவும் பயனுடையதாகவும் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஐந்து ரயில் நிலையங்கள் மறுமேம்பாடு செய்யப்படுவது குறித்து பிரதமர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நவீன மயமாக்கலும் மேம்பாடும் எதிர்கால தேவைகளை மனதில்கொண்டு செய்யப்படுபவையாகும். அதே சமயம் இது உள்ளூர் கலையையும் கலாச்சாரத்தையும் இணைப்பதாக இருக்கும். மதுரை - தேனி இடையேயான அகல ரயில்பாதை திட்டம் விவசாயிகளுக்கு உதவும்,  அவர்களுக்கு புதிய சந்தைகளை வழங்கும்.


பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வரலாற்று சிறப்பு மிக்க சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடனான வீட்டு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகளை பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். “உலகளாவிய சவாலை நாம் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த திட்டம் மிகவும் திருப்தி அளிக்கிறது. மிகவும் குறைந்த காலத்தில் முதலாவது திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவும் சென்னையில் நடந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.

நமது நாட்டின் சரக்குப் போக்குவரத்து முறையில், பல்முனை போக்குவரத்து பூங்காக்கள் புதிய முன்னுதாரணமாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். பல்வேறு துறைகளில் இத்தகையை திட்டங்கள் ஒவ்வொன்றும் வேலைவாய்ப்பையும் தற்சார்பு என்ற நமது தீர்மானத்தையும் ஊக்கப்படுத்தும் என்று அவர் கூறினார்.

உள்கட்டமைப்புக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்த நாடுகள், வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற இடத்துக்கு முன்னேறியதை வரலாறு நமக்கு கற்றுத் தந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். சிறந்த, தரம் வாய்ந்த மற்றும் நிலையான உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அரசு முழுக்கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு நிலம் மற்றும் கடலோரங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு, செயல்பட்டு வருகிறது. சமூக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், நமது கொள்கையின் மீதான முக்கியத்துவத்தை குறிக்கிறது. முக்கியத் திட்டங்கள் முழுமை நிலையை எட்டுவதற்கு தனது அரசு இயங்கி வருகிறது.

கழிவறை வசதி, வீட்டு வசதி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்தவொரு துறையாக இருந்தாலும் முழுவளர்ச்சி என்ற இலக்கை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம். 

ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை உள்கட்டமைப்பு என்பதை சாலை, மின்சாரம், நீர் ஆகிய திட்டங்களை மேம்படுத்துவது என்பதை மட்டுமே கொண்டிருந்தது. தற்போது வழக்கமாக குறிப்பிடப்படும் உள்கட்டமைப்பு என்பதை கடந்து தமது அரசு சென்றுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இன்று நாம் குழாய்வழி எரிவாயு இணைப்பு திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள சேவையை கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.

தமிழ்மொழி, மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி வலியுறுத்தி  கூறினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடம் சென்னையில் தொடங்கப்பட்டது. இது முழுவதும் மத்திய அரசின் நிதியுதவியால் கட்டப்பட்டுள்ளது. அண்மையில், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி ஆய்வுப் படிப்புகளுக்கான பாரதியார் இருக்கை நிறுவப்பட்டதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பனராஸ் பல்கலைக்கழகம் தமது தொகுதியில் இருப்பது தமக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்று பிரதமர் கூறினார். இலங்கை தற்போது கடினமான காலங்களை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கைக்கு நட்பு அடிப்படையில் அனைத்து உதவிகளையும் தற்போது செய்து வருகிறது என்று தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் தாம் என்பதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு கலாச்சாரம், சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளில் உதவ பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்

விடுதலைப் பெருவிழாவின் போது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான கூட்டு முயற்சியை மீண்டும் வலியுறுத்தி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

ரூ.2,960 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட ஐந்து திட்டங்களை  பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.   மதுரை - தேனி இடையே 75 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.500 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழித்தடத்தின் மூலம் வசதியான பயணம் அமைவதுடன் அப்பகுதி சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும். ரூ.590 கோடி செலவில்  தாம்பரம் – செங்கல்பட்டு இடையே  30 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 3-வது ரயில்வே பாதை மூலம் அதிக அளவிலான புறநகர ரயில்சேவையை அளிக்க முடியும். இது பயணிகளுக்கு மேலும் வசதியை அளிக்கும். ரூ.850 கோடி செலவில் எண்ணூர் – செங்கல்பட்டு இடையே 115 கிலோமீட்டர் தொலைவிலும், ரூ.910 கோடி செலவில் திருவள்ளூர் – பெங்களூரு இடையே 271 கிலோமீட்டர்  தொலைவில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோருக்கு இயற்கை எரிவாயு வசதியை அளிப்பதுடன் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் தொழிற்சாலைகளும் பயனடையும்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில், நவீன வீடுகள் திட்டத்தின் மூலம் ரூ.116 கோடி மதிப்பில்  கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளும் இந்நிகழ்ச்சியில்  திறந்து வைக்கப்பட்டது.

ரூ.28,540 கோடி மதிப்பில் கட்டப்படும்  6 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  ரூ.14,870 கோடி செலவில்,  262 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூரு – சென்னை விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியே  செல்வதுடன்  பெங்களூரு – சென்னை இடையேயான  பயண நேரம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் குறையும். சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலை இணைக்கும் வகையில்,  21 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழி இரண்டடுக்கு சாலை, ரூ.5,850 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இது சரக்கு வாகனங்கள் சென்னை துறைமுகத்தை எந்நேரமும் அடைய வாய்ப்பு ஏற்படும்.

நெரலூரிலிருந்து - தர்மபுரி வரை 94 கிலோமீட்டர் தொலைவிற்கு, ரூ.3,870 கோடி செலவில் நான்கு வழிப்பாதையும், மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை  31 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.720 கோடி செலவில் இரண்டு வழிப்பாதையும் அமைக்கப்பட உள்ளது. இது அப்பகுதியில் தடையில்லா போக்குவரத்துக்கு வழி வகுக்கும்.

 சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,800 கோடி மதிப்பில்  நவீன  அமைப்புகளுடன் பயணிகளின் வசதிகளுக்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில், ரூ.1,430 கோடி மதிப்பில் பல்முனை நவீன சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது தடையில்லா சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் என்பதுடன் பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள முடியும்.சென்னையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களே,

தமிழ்நாடு முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் அவர்களே,

மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே,

தமிழ்நாடு அரசின் அமைச்சர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர்களே,

தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினர்களே,

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளே, வணக்கம்.

 

மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவது என்பது எப்போதுமே மிக அருமையாக இருக்கும் ஒன்று.

இது மிகவும் சிறப்பான பூமி.

இந்த மாநிலத்தின் மக்கள், கலாச்சாரம், மொழி என அனைத்துமே மிகச் சிறப்பானவை.

சீர்பெருமை நிறைந்த பாரதியார் அவர்கள்,

செந்தமிழ் நாடென்னும் போதினிலே,

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

என்று மிக அழகாகப் பாடியிருக்கிறார்.

 

நண்பர்களே, ஒவ்வொரு துறையிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகின்றார்.  அண்மையில் தான் நான் Deaflympics - இந்திய காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பளித்தேன்.  இதுவரை நடந்த போட்டிகளில் இது தான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாம் வென்ற 16 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேர்களுக்கு ஒரு பங்கு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? அணிக்கு இது மிகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்று.

தமிழ் மொழி நிலையானது-நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. 

சென்னை முதல் கனடா வரை,

மதுரை முதல் மலேஷியா வரை,

நாமக்கல் முதல் நியூயார்க் வரை,

சேலம் முதல் தென்னாப்பிரிக்கா வரை,

பொங்கல் மற்றும் புத்தாண்டுக் காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை.

ஃப்ரான்ஸ் நாட்டின் கான்ஸ் (Cannes) நகரிலே ஒரு திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 

அங்கே இந்த மகத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டின் மைந்தரான எல். முருகன் அவர்கள், தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரியமான ஆடையில் அங்கே, சிவப்புக் கம்பளத்தின் மீது நடந்தார்.   இது உலகெங்கிலும் உள்ள தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தது.

நண்பர்களே, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் மேலும் ஒரு உன்னதமான அத்தியாயத்தைக் கொண்டாட நாமனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்.

31,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று, தொடங்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

இந்தத் திட்டங்கள் பற்றிய விபரங்களை நாம்  இப்போது பார்த்தோம், ஆனால் நான் சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

சாலைக் கட்டுமானத்தின் மீது செலுத்தப்பட்டிருக்கும் கவனம் தெளிவாகப் புலப்படுகிறது.

இதை ஏன் இந்த வகையில் நாம் செய்கிறோம் என்றால், இது பொருளாதார வளர்ச்சியோடு நேரடியாக தொடர்புடையது.

பெங்களூரூ சென்னை விரைவுச்சாலை இரண்டு முக்கியமான வளர்ச்சி மையங்களை இணைக்கும்.

சென்னை துறைமுகத்தை, மதுரவாயலோடு இணைக்கும் 4 வழி உயர்த்தப்பெற்ற பாதை, சென்னை துறைமுகத்தை மேலும் திறன்மிக்கதாக ஆக்குவதோடு, மாநகரப் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.

நெரலூரு முதல் தர்மபுரி வரையும், மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையுமான பகுதிகளின் விரிவாக்கம் மக்களுக்கு ஆதாயங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 

5 இரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட இருப்பது எனக்குக் குறிப்பாக உவகையை அளிக்கிறது.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும், மேம்பாடும் செய்யப்படுகின்றன.  அதே நேரத்தில், இது உள்ளூர் கலை, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம், என் விவசாய சகோதர சகோதரிகளுக்கு உதவிகரமாக இருக்கும், அதிக அளவிலான சந்தைகளை அணுகுவதற்கு இது உதவும்.

நண்பர்களே,

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்கு உட்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க சென்னையில் நவீன தொழில் நுட்பத்திலான வீட்டுவசதித் திட்டத்தின்படி வீடுகள் கிடைக்கப் பெறும் அனைவருக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இது எங்கள் அனைவருக்கும் மிகவும் நிறைவை அளித்த ஒரு திட்டம்.

மலிவுவிலையிலான, நீடித்த மற்றும் சூழலுக்கு இசைவான இல்லங்களை உருவாக்குவதில் மிகச் சிறப்பான நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதில் ஒரு உலகளாவிய சவாலை நாங்கள் மேற்கொண்டோம்.

சாதனை படைக்கும் நேரத்திலே, இப்படிப்பட்ட முதல் நவீன தொழில்நுட்பத்திலான வீடு கட்டும் திட்டம் சாத்தியமாகி இருக்கிறது. அது சென்னையில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்வை அளிக்கிறது.

திருவள்ளூர் முதல் பெங்களூரு வரையும், எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் பதித்தல் தொடங்கியிருப்பதன் காரணமாக, தொழில் நிறுவனங்களுக்கும், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநில மக்களுக்கும் இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சென்னை துறைமுகத்தைப் பொருளாதார வளர்ச்சியின் மையமாக ஆக்கும் தொலைநோக்குப் பார்வையோடும், சென்னையில் ஒரு பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

நாட்டின் பிற பாகங்களிலும் இப்படிப்பட்ட பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை அமைக்க எங்களுடைய அரசு அர்ப்பணிப்போடு இருக்கிறது.

இந்த பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் நமது நாட்டிலே ஒரு முன்மாதிரி மாற்றத்தை ஏற்படுத்தும்.

பல்வேறு துறைகளிலும் இருக்கும் இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றுமே, வேலைவாய்ப்புக்களையும், தற்சார்பு நிலை நோக்கிய நமது உறுதிப்பாட்டையும் ஊக்கப்படுத்தும்.

நண்பர்களே,

நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தை விடச் சிறப்பான ஒரு வாழ்க்கைத் தரத்தை உங்கள் குழந்தைகள் வாழ வேண்டும் என்று நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க நீங்கள் ஒவ்வொருவரும் விரும்புவீர்கள்.

இதற்கு முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்று தான் தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதிகள்.

எந்த நாடுகள் எல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் கூடுதல் முக்கியத்துவம் அளித்தனவோ, அந்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்குக் கற்பித்திருக்கிறது.

தலைசிறந்த தரமும், நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசாங்கம் தனது முழு கவனத்தைச் செலுத்துகிறது.

நான் உள்கட்டமைப்பு பற்றிப் பேசும் போது, சமூக மற்றும் புறக் கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகிறேன்.

சமூகக் கட்டமைப்பை மேம்படுத்துவதன் வாயிலாக, நம்மால் ஏழைகள் நலனை உறுதி செய்ய முடியும். 

சமூகக் கட்டமைப்பின் மீதான நமது அக்கறை, அனைவரும் நலன் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் நமக்கிருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

முக்கியமான திட்டங்கள் முழுமை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, கழிப்பறைகளோ, வீட்டுவசதியோ, நிதிசார் உள்ளடக்க திட்டங்களோ – அது எதுவாக இருந்தாலும், அவையனைத்தும், அனைவரையும் சென்று சேர்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரைக் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்ய பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி நாம் செய்யும் போது, பாரபட்சமோ, விடுபட்டுப் போவதற்கான சாத்தியக்கூறோ இருக்காது.

உள்கட்டமைப்பு மீது கவனம் செலுத்தப்படும் போது, இந்தியாவின் இளைஞர்கள் தான் அதிகம் பயன் பெறுவார்கள். 

இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற உதவுவதோடு, வருவாயையும், அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொள்ள இதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நண்பர்களே,

பாரம்பரியமாக உள்கட்டமைப்பு என்று எது கருதப்பட்டு வந்ததோ, அதையும் தாண்டி எங்கள் அரசு கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கட்டமைப்பு என்றால் சாலைகள், மின்சாரம், குடிநீர் வசதி ஆகியன மட்டுமே கருதப்பட்டன.

இன்று நாம் இந்தியாவின் எரிவாயு குழாய் வழி இணைப்புகளை விரிவாக்கச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதிவேக இணைய வசதியை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   அதிவேக இணையத்தை நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்வதே எங்களுடைய தொலைநோக்குப் பார்வையாக உள்ளது.  இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்!!

பிரதம மந்திரி விரைவு சக்தித் திட்டத்தை, சில மாதங்கள் முன்பாக நாங்கள் தொடங்கினோம்.

இனிவரும் ஆண்டுகளில் இந்தியாவில் உயர் தரம் வாய்ந்த கட்டமைப்பினை உறுதி செய்யும் நோக்கத்தோடு, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும், அனைத்து அமைச்சகங்களையும் இந்தத் திட்டம் ஒன்றிணைக்கும்.

செங்கோட்டை கொத்தளத்தில் நான் உரையாற்றிய போது ஒரு தேசிய கட்டமைப்பு ஒருங்கிணைப்புத் திட்டம் குறித்து பேசியிருந்தேன்.  இந்தத் திட்டத்தின் மதிப்பு 100 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்டது.  இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையின் போது, 7.5 இலட்சம் கோடி ரூபாய், மூலதனச் செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரலாற்று சிறப்பு மி்க்கது.

கட்டமைப்பை உருவாக்கும் வேளையில், இந்தத் திட்டங்கள், குறித்த நேரத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் நிறைவு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம்.

நண்பர்களே,

தமிழ்மொழியையும், கலாச்சாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது.

செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னையில் தொடங்கப்பட்டது.  இந்தப் புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.  இங்கே விசாலமான ஒரு நூலகம், ஒரு மின்னணு நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், பல்லூடக அரங்கொன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புக்களுக்கான சுப்பிரமணிய பாரதி பெயரிலான ஒரு இருக்கை, அண்மையில் தான் அறிவிக்கப்பட்டது.  பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் என் தொகுதியில் இருப்பதால், என்னுடைய உவகை கூடுதல் விசேஷமானது.

இந்திய மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை அவற்றுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை காரணமாக, தொழில்நுட்ப, மருத்துவப் படிப்புக்களை உள்ளூர் மொழிகளிலேயே கற்க முடியும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் பலனடைவார்கள்.

நண்பர்களே,

இலங்கை நெருக்கடியான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது.  அந்நாட்டின் தற்போதைய நிலவரம் உங்களுக்குக் கண்டிப்பாகக் கவலையளிப்பதாக இருக்கும்.

நெருங்கிய நட்பு நாடு என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும், இந்தியா இலங்கைக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து வருகிறது.

நிதியுதவி, எரிபொருள்-உணவு-மருந்துகள், பிற அத்தியாவசியமான பொருட்கள் உதவி ஆகியன இதில் அடங்கும்.

பல இந்திய அமைப்புக்களும் தனிநபர்களும் இலங்கையின் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி மற்றும் மலையகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட, இலங்கையில் இருக்கும் தங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு உதவிகளை அளித்திருக்கிறார்கள்.

இலங்கைக்குப் பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாக சர்வதேச அமைப்புகளால் இந்தியா தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக, இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.

நண்பர்களே, யாழ்ப்பாணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்றதை என்னால் மறக்க முடியாது.  யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் நான் தான்.

இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையிலே இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.  இந்தத் திட்டங்கள் சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கும்.

நண்பர்களே, சுதந்திரத் திருநாள் அமிர்தப் பெருவிழாவை நாம் இப்போது கொண்டாடி வருகிறோம்.  75 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் நாம் நமது பயணத்தைத் தொடங்கினோம். 

நமது நாட்டிற்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பல கனவுகளைக் கண்டார்கள். அவற்றை நிறைவேற்றுவது நமது கடமை என்பதோடு, நாமனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு கனவை நனவாக்க முயற்சி மேற்கொள்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நாமனைவரும் இணைந்து இந்தியாவை வலுவானதாகவும், வளமானதாகவும் ஆக்குவோம்.

மீண்டும் ஒருமுறை, தொடங்கப்பட்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கான நல்வாழ்த்துக்கள்.
வணக்கம்.
மிக்க நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த