75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றடைந்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் & கால்நடை பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பிரான்ஸ் சென்றடைந்தார்.
அமைச்சர் முருகனை பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் முருகன்," பிரான்சில் உள்ள இந்திய தூதர் @JawedAshraf5 சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-பிரான்ஸ் உறவுகள் மற்றும் @Festival_Cannes 2022 உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினோம்," என்று தெரிவித்தார்.
திரைப்பட விழாவில் 22-ந் தேதி முதல், 24-ந் தேதி வரை அவர் கலந்து கொள்கிறார். டாக்டர் முருகன் 25-ந் தேதி காலையில் புதுதில்லி வந்து சேர்வார்.
கருத்துகள்