சிறந்த சேவைக்காக குடியரசு தலைவர் பதக்கம், காவல் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வென்ற ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களை மத்திய அமைச்சர் கௌரவிக்கிறார்
சிறந்த சேவைக்காக குடியரசு தலைவர் பதக்கம், காவல் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வென்ற ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கௌரவிக்கிறார்
வீரதீர செயல்களுக்கான குடியரசு தலைவர் பதக்கம், சிறந்த சேவைக்காக காவல் துறை பதக்கம், குடியரசு தலைவரின் காவல் பதக்கம் ஆகியவற்றை பெற்ற ரயி்ல்வே பாதுகாப்புப் படை வீரர்களை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் 27 மே,2022 அன்று புதுதில்லி விக்கியான் பவனில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கௌரவிக்கவுள்ளார். கடந்த 2019, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டில் அவர்கள் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்புப் படை செயல்பட்டு வருகிறது. பயணப்பாதுகாப்பு,
தீவிரவாத செயல் தடுப்பு நடவடிக்கை, ஆள்கடத்தல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கை,
காவல் துறையினருக்கு உதவுதல் உள்ளிட்ட முக்கிய பணிகளிலும் ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்