முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாட்ச்மேனுக்கு நிலம் சொந்தமாகாது: உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

வாட்ச்மேனுக்கு நிலம் சொந்தமாகாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

"நிலத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நிறைவேற்றவேண்டிய கடமைகள் கொண்ட வாட்ச்மேன், இரண்டு தலைமுறைகளாகப் பார்த்துக் கொண்டிருந்ததாலும் அந்த நிலம் தனக்கே சொந்தமென்று உரிமை கொண்டாட முடியாது'' என உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கியது.

மனைகள் அல்லது நிலங்களை வாங்கும் உரிமையாளர்கள் தங்களுடைய தொழில், வியாபாரம், வேலை காரணமாக வெளியூரில் வசிக்கும் உரிமையாளர்கள் ஒருவருடைய பராமரிப்பு அல்லது பொறுப்பில் விட்டுவைத்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சொத்து அவர்களுக்கே உரியது என்று உரிமை கோர சட்டத்தில் வழியில்லை என்று தெரிந்தாலும் அதை மீறி அபகரித்த நபர்கள் தமிழகத்தினல் தான் அதிகம் உண்டு என்ற நிலையில் இந்த தீர்ப்பு மற்ற வழக்குகளுக்கும் பயன்படும் நிலையில் அது குறித்து உச்சநீதிமன்றம்  நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா அடங்கிய "அமர்வில்' தீர்ப்பு வழங்கியது.நிலங்களை அல்லது சொத்துகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவற்றின் உரிமையாளர் ஒப்படைக்கும் போதே அவர் திரும்பக் கேட்கும்போது அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதே இயற்கை நீதி. பராமரிப்புக்கும் இதர சேவைகளுக்கும் உரிமையாளர் அவருக்குச் செலவுக்குப் பணம் தருவதே அப்படிப் பார்த்துக் கொள்வதற்காகத் தான். அதற்குப் பிறகும் அந்தச் சொத்து தனக்கே உரியது என்று கோர எந்தவித நியாயமும் உரிமையுமில்லை என்பதை அமர்வு சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கில் ஒரு நிலத்தை இரண்டு தலைமுறைகளாகப் பராமரித்து வந்த வாட்ச்மேன் அதைத் தனக்கு உரிமையுள்ளது என்று கோரி உச்ச நீதிமன்றத்திலேயே வழக்கு தொடுத்திருந்தார்.

அவருடைய வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், இப்போதெல்லாம் தங்களுக்கு சட்டப்படி சொந்தமில்லை என்று தெரிந்தும் ஏதாவது அற்ப ஆதாரத்தை அல்லது காரணத்தைக் காட்டி இதுபோல அலைக்கழிக்கும் வழக்குகளைத் தொடுக்கும் போக்கு தற்போது அதிகரித்து வருவது குறித்து கவலையும் அலுப்பும் தெரிவித்தனர். இத்தகைய வழக்குகளைத் தொடுப்பவர்களுக்குக் கடுமையான அபராதம் விதித்தால் தான் இனி மேல் எதிர்காலத்தில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் இந்த வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்ததாகவும் மனுதாரர் வெறும் வாட்ச்மேன் தான் என்பதால் 25,000 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இந்த அபராதத்தை அவர் இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த நிலத்தை அதன் உரிமையாளரிடம் இரண்டு மாதங்களுக்குள் ஒப்படைத்து விட வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.அந்த நிலத்தை அதன் உரிமையாளர் தரும சத்திரத்துக்குக் கொடுத்துவிட முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இப்போது அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுவதும் அதற்காக சட்டப்பூர்வ உரிமை கோருவதும் அதிகரித்து வருவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

பல வழக்குகளில் "சட்டப்பூர்வமாக செல்லாது'' என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தாலும் "சும்மா வழக்கு போட்டுப் பார்ப்போமே'' அது சிவில் தானே காலம் கடத்தினால் ஏமாற்றி விடலாம் என்கிற மனப்போக்கு அதிகரித்து வருவதையும் அவர்கள் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.உண்மையிலேயே சட்டப்பூர்வமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் ஏராளமாகத் தேங்கிக் கிடக்க சுய விளம்பரத்துக்காகவும், அப்பாவிகளை அலைக்கழிக்கவும், வழக்குகள் போடும் போக்கைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பராமரிப்பாளர்கள் அல்லது  வேலைக்காரர்கள் உரிமை கோர முடியாது

நீண்ட காலமாக அந்த நிலத்திலோ அல்லது  வளாகத்திலோ தங்கி இருக்க அனுமதித்ததால் மட்டுமே ஒருவர் சொத்தின் உரிமையைப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எச்.எல்.தத்து மற்றும் தீபக் வர்மா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பராமரிப்பாளர்கள் மற்றும் காவலாளிகள் அல்லது வேலையாட்கள் என யாரும் பல ஆண்டுகளாக சொத்தை வைத்திருப்பதால் மட்டுமே அதன் மீது எந்த உரிமையையும் பெறுவதில்லை என்று புதிய வழிகாட்டுதல்களை சட்டத்தில் வகுத்துள்ளது

யாராகினும் நிலத்தில் அல்லது வளாகத்தில் தேவையில்லாமல் தங்க அனுமதிக்கப்பட்டால், யாரும் சொத்தின் உரிமையைப் பெற மாட்டார்கள். நீண்ட ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்களாக வைத்திருந்தாலும், அத்தகைய நபர் அந்த சொத்தில் எந்த உரிமையையும் பெற மாட்டார்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

"தவறான உரிமைகோரல்கள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து ரியல் எஸ்டேட் வழக்குகளில் மிகவும் தீவிரமான பிரச்சனைகள், முக்கியமாக ரியல் எஸ்டேட் விலைகள் அதிகரித்து வருவதால்.

"மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் நேர்மையற்ற சில வழக்குரைஞர்களால் இழுக்கப்படுகின்றன, மற்ற தரப்பினர் சோர்வடைவார்கள் மற்றும் இறுதியில் ஒரு பெரிய தொகையை செலுத்துவதன் மூலம் அவர்களுடன் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையில்.

"நமது நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்ப்பதில் பெரும் தாமதம் ஏற்படுவதால் இது நிகழ்கிறது. நடைமுறை அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், இந்த பிரச்சனையை பெரிய அளவில் குறைக்க முடியும்," என்று நீதிபதி பண்டாரி தனது கருத்தை தீர்ப்பாக வழங்கினார்.

தனது சகோதரரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எராஸ்மோ ஜாக் டி செக்வேரியாவுடன் இரண்டு தசாப்த காலமாக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மரியா மார்கரிடா செக்வேரியா ஃபெர்னாண்டஸின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. கோவாவில்.

"பாதுகாவலர், காவலாளி அல்லது வேலைக்காரன் தனது நீண்ட கால உடைமையைப் பொருட்படுத்தாமல் சொத்தின் மீது உரிமை வாங்க முடியாது. பராமரிப்பாளர் அல்லது வேலைக்காரன் உரிமையை (சொத்தை) கோரிக்கையின் பேரில் உடனடியாக விட்டுவிட வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கூறிய தீர்வு சரியான நடவடிக்கையாகவே பார்க்கப் படுகிறது மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே நில அபகரிப்பு கள் அதிகம் இதில் வருவாய் துறையில் நடந்துள்ள பல முறைகேடுகள் இந்த அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு துணை புரிகிற நிலையும் ஒரு காரணமாக அமைகிறது.                     தமிழ்நாட்டில் ரயத்துவாரி நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்திற்கான முழுத்தொகையைக் கொடுக்காமலோ அல்லது போலி ஆவனங்கள் தயாரித்தோ அல்லது மிரட்டியோ அல்லது ஊழல் காரணமாக நிலத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்துக் கொள்ளுதல் அல்லது ஆக்கிரமிப்பு செய்து கொள்வது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக 1990  ஆம் ஆண்டு முதல்  அதிகமாக நடைபெற்றாலும் 2001 ஆம் ஆண்டு முதல் தான் தமிழக அரசு குற்றம் சாட்டியது.    அதற்கு முன்னர் மோசடி நிலங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை             அப்படி நிலங்களைப் பறிகொடுத்து இழந்த நிலங்களின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் மேல் பதிவு செய்யப்படும் வழக்குகள், அதன் மீதான நடவடிக்கைகள் ”தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்” என்று அழைக்கப்படுகின்றன. நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக சூலை மாதம் 10 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டு அன்று தனிப்பிரிவு ஒன்றை நிறுவியது. அதன்படி காவல் துறையில், தனியாக சிறப்பு பிரிவு ஒன்று காவல் தலைமை அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும்.

அரசியல் கட்சியின் சிலர் மற்றும் அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி, பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தததன் படி அப்போதய அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றவுடன் பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைப் பற்றியதாகும். நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக சூலை மாதம் 10 ஆம் தேதி அன்று தமிழக அரசு தனிப்பிரிவு ஒன்றை நிறுவியதன்படி இருந்த போதிலும் முழுமையாக விசாரணைகள் நடைபெறுவதில்லை மேலும் லஞ்ச ஊழல் ஒரு காரணமாக அமைகிறது அதன் காரணமாக காலம் கடந்து விடுகிறது .தமிழ்நாடு நிலசிர்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டார்டு ஏக்கர் நஞ்சை, புஞ்சை என இரண்டும் கலந்த  நில உச்சவரம்பு விதிக்கப்பட்டது.  இந்தச் சட்டம் 1970 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் என்பது 15 ஏக்கராக குறைக்கப்பட்டது. இது மறுபடியும் 1972 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. நிலசிர்திருத்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி பினாமி உடமை மாற்றங்களைச் செய்யும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பினாமி மாற்றுத் தடுப்புச் சட்டம் 1988 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு பினாமி மாற்றங்களை கிரிமினல் குற்றமாக அறிவித்து அத்தகைய பினாமி மாற்றங்களுக்கு மூன்றாண்டு வரை சிறை தண்டனையும்  விதிக்க வகை செய்யும் 

சட்டம் மூலம், பெருநில உடைமையாளர்களின் பினாமி நிலமாற்றமும், போலி நில விற்பனையும் 1958 ஆம் ஆண்டு தொடங்கியே சட்டத்தின் குறைகளைப் பயன்படுத்தி பெருமளவு நடத்தப்பட்டிருக்கிறது. நிலசிர்திருத்தம் குறித்த அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு இதற்கு முக்கியமான காரணமாகும். அத்தகைய பினாமி நிலமாற்றங்களைக் கண்டறிய அரசியல் சாசனத்திலேயே தகுந்த திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்னும் நிலையில். இது கடந்த 20 ஆண்டு காலத்தில் வருவாய் துறையில் பட்டா மாறுதல் என்ற பெயரில்  உரிமை இல்லாத நபர்கள் பெயரில் மாற்றம் செய்து மோசடி நடத்திய நபர்கள் தங்களுக்கு தண்டனை இல்லை என்பதே ஊழல் நடக்கக் காரணமாக அமைகிறது , தவறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தால் தவறு செய்யும் அரசு பொது ஊழியர்கள் தவறோ அல்லது ஊழல் செய்ய வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.  வெற்றியூர்  ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1,411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன.  சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக , வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா, மதர் சிறப்புப் பள்ளி, நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய