திரைப்பட நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர், உடல் நலக்குறைவால் மே மாதம் 19 ஆம் தேதி சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்
திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர். கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவருக்கு தற்போது நலமாக இருப்பதாக விவரமறிறிந்தவர்கள் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
இதனால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரை பரிசோதித்த பின்னர் சிகிச்சை தரும் மருத்துவர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய இரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு இருப்பதாக கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதனிடையே ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை
டி.ராஜேந்தர் உடல்நிலை தொடர்பாக அவரது மகன் நடிகர் சிம்பு தரப்பில் இன்று மருத்துவ சிகிச்சை குறித்து அறிக்கை வெளிவரக் கூடும் எனவும் .அவரைப் பரிசோதித்த இருதயதவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிகிறது.
மயிலாடுதுறையை சேர்ந்த டி.ராஜேந்தர் ஒரு தலை ராகம் திரைப்படம் மூலமாக அறிமுகம் ஆன பூங்கா நகர் நிலையில் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்த சுய முயற்சி வெற்றியாளர் என அறியப்படும் நபராவார் .நத்தம உடையார் சமூக பிரமுகர்ரான ராஜேந்தர் நடிகை உஷா வை கலப்புத் திருமணம் செய்த நிலையில் மூன்று பிள்ளைகளில் மூத்த மகன் நடிகர் சிலம்பரசன் ஆவார், மற்றும் இளைய மகன் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார், மகள் இலக்கியா ஆவார்,1980 காலகட்டத்தில் இவரது திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பணி சிறப்பானது
தற்போது டி.ராஜேந்தர் உடல்நலம் குறித்து சிலம்பரசன் கடிதம் வெளியிட்டுள்ளதில் கூறியதாவது, "எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி" .எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்