முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை துணை குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைத்தார்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்,


பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூபாய் .1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள காலம்சென்ற  முன்னாள் முதல்வர்  டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைத்த பிறகு பேசியதாவது:

கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி இந்தியாவின் பெருமை மிக்க முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர். என் இளம் வயதில் கலைஞரின் உரையால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.கருணாநிதி சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர். கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஜனநாயகத்திற்காக வாதாடினேன்.
கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர். பன்முகத்தன்மை அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கருணாநிதி அரசியல் பதவி முள்கிரீடமென்று கூறியவர் கருணாநிதி. தமிழ் சினிமாவின் புதிய அத்தியாத்தை எழுதியவர் கருணாநிதி. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. என்ற திருக்குறள் கலைஞருக்குப் பொருந்தும். தமிழையும், தமிழ் பண்பாட்டையும் வளர்த்தவர் கருணாநிதி. மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும். எனப் பேசினார்.கலைஞர் மு.கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் உரையின் முக்கிய அம்சங்கள்
சகோதர, சகோதரிகளே,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் 98-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு அவரது சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் உங்களுடன் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த முதலமைச்சர்களுள் அவரும் ஒருவர்.

இந்த முக்கிய நிகழ்விற்கு எனக்கு அழைப்பு விடுத்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். சென்னை,  என் மனதிற்கு மிகவும் நெருக்கமான நகரம் மட்டுமல்லாமல், எனது வாழ்க்கையில் சிறப்பு இடமும் பிடித்துள்ளது. எனது சொந்த ஊரான நெல்லூருக்கு அருகில் இருப்பதால், சிறுவயது முதலே சென்னை என் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பொது வாழ்க்கையில் எனது நீண்டநாள் பயணத்தின்போது, பல தசாப்தங்களில் கலைஞர் மு.கருணாநிதியுடன் நெருக்கமாக கலந்துரையாடும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருந்தேன்.

பல்வேறு திறமைகளின் தனித்துவமான கலவையோடு ஓர் பல்துறை வித்தகராக அவர் விளங்கினார்.

தாம் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற நுட்பமான அரசியல்வாதியாக இருந்ததுடன், சுமார் 50 ஆண்டு காலம் தமது கட்சிக்கு அவர் தலைமை தாங்கினார்.

வளர்ச்சி மற்றும் சமூக நலனின் மரபை நிலைநிறுத்திய முதல்வராக அவர் திகழ்ந்தார்.

தமது புத்திசாலித்தனம், இலக்கிய சுவை மற்றும் கற்றறிந்த வெளிப்பாடுகளோடு பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் தலைசிறந்த சொற்பொழிவாளராக அவர் இருந்தார்.

அவர், ஆக்கபூர்வமான அரசியல் விவாத கலையில் சிறந்து விளங்கிய ஒப்பற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

கலை, கலாச்சாரம் மற்றும் இதழியலின் மீது அவரது ஈடுபாட்டினால், 1948-ஆம் ஆண்டு “தூக்குமேடை” என்ற அவரது நாடகம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, “கலைஞர்” என்ற கௌரவப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவராக அவர் இருந்தார்.

தமது எழுத்து மற்றும் வசனங்களின் வாயிலாக தமிழ் திரைப்படத் துறையில் புதிய பாதையை அவர் வகுத்தார்.

அன்றாட நிகழ்வுகளின் நுண்ணறிவுமிக்க வர்ணனையாளராக, அரசியல் பகுப்பாய்வராக செயல்பட்டதோடு, அவர் நிறுவிய கட்சி வெளியீடான முரசொலியில் தமது விசாலமான எழுத்துக்களின் மூலம் சக்திவாய்ந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.

நிர்வாகி, சமூக ஆர்வலர், அரசியல் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், கவிஞர், திரைப்பட எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என கலைஞர் மு.கருணாநிதியின் பணிகளில் இயங்கும் பொதுவான இழை, சமூக சமத்துவமும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் ஆகும்.

சகோதர, சகோதரிகளே,

1947-இல் சுதந்திரத்திற்குப் பிறகு, நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்த மேன்மைவாய்ந்த பிரதமர்களையும், முதல்வர்களையும் நாம் பெற்றிருந்தோம். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், கொள்கைகளை வடிவமைக்கவும், திட்டங்களை உருவாக்கவும், நிறுவனங்களைக் கட்டமைக்கவும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அளவில் அவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்ற தொடர் முயற்சிகள், நம் நாட்டை முன்னெடுத்துச் சென்றுள்ளன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்துத் தந்த பாதையால் வழிநடத்தப்பட்டு, இது போன்ற தலைவர்கள் நமது அரசியலமைப்பின் வார்த்தைகளுக்கு அர்த்தம் காண பல்வேறு நிலைகளில் முயன்றுள்ளனர்.

ஒரு சில பிறழ்வுகளைத் தவிர அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள பார்வையை நிலைநிறுத்தும் வகையில், ஒரு துடிப்பான, வளர்ந்த ஜனநாயகமாக இந்தியாவை வடிவமைக்க அவர்கள் உதவியுள்ளனர். தங்களது பணியில் மக்களை மையமாகக் கொண்டிருந்த தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் கலைஞர் மு.கருணாநிதியும் இடம்பிடித்துள்ளார். அவரைப்போன்ற தலைவர்களால் நாடு தனது கூட்டாட்சி முறையை வலுப்படுத்தியிருப்பதோடு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியவாறு வலிமையான ‘குழு இந்தியாவாக' வளர்ந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் துடிப்பான, தனித்துவம் வாய்ந்த திறமையைப் பெற்றுள்ளது. மொழிவளம், இலக்கிய மற்றும் கலாச்சார பொக்கிஷங்கள், தலைசிறந்த கட்டிடவியல், அபாரமான கைவினைத் திறன், அறிவியல், தொழில் மற்றும் வேளாண்மை சாதனைகள் போன்ற வளங்களை ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளார்ந்த வலிமையைப் பயன்படுத்தி, இத்தகைய வியப்பூட்டும் பன்முகத்தன்மையைக் கொண்டாடி, ஒரு நாடாக நாம் வளர்ந்திருப்பதோடு, விவேகமான முன்னேற்றத்தையும் அடைந்துள்ளோம். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் அபரிமிதமான சக்தியைத் தட்டி எழுப்புவதன் மூலம் அரிதான ஒருங்கிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்துள்ளோம்.

கலைஞர் மு.கருணாநிதியைப் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள், அதைத்தான் செய்ய முயன்றார்கள். மக்களுக்கு, குறிப்பாக, ஒடுக்கப்பட்டோர் மற்றும் வளர்ச்சி வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவரது தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. “உழவர் சந்தை” என்ற விவசாயிகளின் சந்தை  மற்றும் ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் பற்றி சிந்தித்த தலைவர், அவர். தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு அவர் ஊக்கமளித்தார். தமது தாய்நாடு மீதும், தாய் மொழி மீதும் அவர் அளவற்ற பற்று கொண்டிருந்ததோடு, செம்மொழியான தமிழில் உள்ள இலக்கிய படைப்புகள் பற்றியும், மாநிலத்தின் பாரம்பரிய கலாச்சார வளம் பற்றியும் உலகம் தெரிந்துகொள்ள உதவினார். மாநிலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் இடம்பெறும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை' தமிழ்நாட்டின் இறைவணக்கப் பாடலாக 1970-இல் அவர் உருவாக்கினார்.

சகோதர, சகோதரிகளே,

தமது அரசியல் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளில் கலைஞர் கருணாநிதி உறுதியாக இருந்தார். அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு கலைஞர் கருணாநிதி தெளிவாக எதிர்ப்பு தெரிவித்திருந்ததை நினைவுகூர்வது அவசியமாகிறது.

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்து வளர்ந்து, தாழ்த்தப்பட்டோருக்காக அயராது உழைத்து, பல தசாப்தங்கள் பொதுவாழ்வின் மையப்பகுதியை ஆக்கிரமித்து, கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட பல அம்சங்கள் நிறைந்த பணிகள், தமிழகத்தின் சமூக- அரசியல் வட்டாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சில தலைவர்கள் பெருமை கொள்ளக்கூடிய நீடித்த அரசியல் மரபை கலைஞர் விட்டுச் சென்றுள்ளார். தற்போதைய முதல்வர் திரு மு.க. ஸ்டாலின், தமது புகழ்பெற்ற தந்தையின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளால் வழிநடத்தப்படுவார் என்று நான் நம்புகிறேன்.நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை சேர்த்த புகழ்பெற்ற தலைவர், திரு மு.கருணாநிதி என குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

திரு நாயுடு: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்டவர், திரு மு. கருணாநிதி

குடியரசு துணைத்தலைவர்: நெருக்கடி நிலையை எதிர்த்து, தமது அரசியல் நம்பிக்கைகளில் திரு மு.கருணாநிதி உறுதியாக நின்றார்

திரு மு.கருணாநிதியின் பன்முக ஆளுமைக்கு குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்துகிறார்

நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சாம்பியனாக கலைஞர் திகழ்ஙந்தார்: திரு நாயுடு

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் திரு மு.கருணாநிதியின் உருவச்சிலையை குடியரசு துணைத்தலைவர் திறந்துவைப்பு
நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை சேர்த்த புகழ்பெற்ற தலைவர் என்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் வல்லமை வாய்ந்தவருமான டாக்டர் மு. கருணாநிதிக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தலைசிறந்த திமுக தலைவரின் 98-வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவச் சிலையை திறந்து வைத்துப் பேசிய திரு நாயுடு, நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை சேர்த்த தலைவர்களுள் திரு மு.கருணாநிதியும் ஒருவர் என்று குறிப்பிட்டு, அவருக்கு உயரிய மரியாதை செலுத்தினார். இந்த நடைமுறையால் வலுவான ‘குழு இந்தியாவாக' நாடு வளர்ந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள பார்வையை நிலைநிறுத்தும் வகையில், ஒரு துடிப்பான, வளர்ந்த ஜனநாயகமாக இந்தியாவை வடிவமைக்க மக்களை மையமாகக் கொண்டிருந்த தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் திரு மு.கருணாநிதியும் இடம்பிடித்தார் என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். “1947-இல் சுதந்திரத்திற்குப் பிறகு, நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்த மேன்மைவாய்ந்த பிரதமர்களையும், முதல்வர்களையும் நாம் பெற்றிருந்தோம்”, என்றார் அவர். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், கொள்கைகளை வடிவமைக்கவும், திட்டங்களை உருவாக்கவும், நிறுவனங்களைக் கட்டமைக்கவும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அளவில் கலைஞர் திரு மு.கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் முயற்சிகளை குடியரசு துணைத் தலைவர் வெகுவாகப் பாராட்டினார். “அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்துத் தந்த பாதையால் வழிநடத்தப்பட்டு, இது போன்ற தலைவர்கள் நமது அரசியலமைப்பின் வார்த்தைகளுக்கு அர்த்தம் காண பல்வேறு நிலைகளில் முயன்றுள்ளனர்”, என்று திரு நாயுடு தெரிவித்தார்

மொழிவளம், இலக்கிய மற்றும் கலாச்சார பொக்கிஷங்கள், தலைசிறந்த கட்டிடவியல், அபாரமான கைவினைத் திறன், அறிவியல், தொழில் மற்றும் வேளாண்மை சாதனைகள் போன்ற வளங்களால் துடிப்பான, தனித்துவம் வாய்ந்த திறனை ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ளது. “ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளார்ந்த வலிமையைப் பயன்படுத்தி, இத்தகைய வியப்பூட்டும் பன்முகத்தன்மையைக் கொண்டாடி, ஒரு நாடாக நாம் வளர்ந்திருப்பதோடு, விவேகமான முன்னேற்றத்தையும் அடைந்துள்ளோம். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் அபரிமிதமான சக்தியைத் தட்டி எழுப்புவதன் மூலம் அரிதான ஒருங்கிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்துள்ளோம். திரு மு.கருணாநிதி போன்ற தலைசிறந்த தலைவர்கள் இதைத்தான் செய்ய முயன்றார்கள்”, என்று திரு நாயுடு மேலும் கூறினார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் வளர்ச்சி வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை திரு கருணாநிதி தொலை நோக்குப் பார்வையாகக் கொண்டிருந்தார் என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். “வளர்ச்சி மற்றும் சமூக நலனின் மரபை நிலைநிறுத்திய முதல்வராக அவர் திகழ்ந்தார்”, என்று திரு நாயுடு கூறினார். “உழவர் சந்தை” என்ற விவசாயிகளின் சந்தை  மற்றும் ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் திரு மு.கருணாநிதியின் தொலைநோக்கு அணுகுமுறையை பிரதிபலிக்கும் பல்வேறு திட்டங்களுள் இடம்பெற்றுள்ளதாக அவர் நினைவுகூர்ந்தார். இந்தியாவின் சக்திவாய்ந்த முதலமைச்சர்களுள் திரு மு.கருணாநிதியும் ஒருவர் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை அவர் ஊக்குவித்ததை சுட்டிக்காட்டினார்.

பொது வாழ்க்கையில் தமது நீண்டநாள் பயணத்தின்போது, பல தசாப்தங்களில் கலைஞர் திரு மு.கருணாநிதியுடன் தாம் நெருக்கமாக கலந்துரையாடியதை திரு நாயுடு நினைவுகூர்ந்தார். திமுகவின் சக்திவாய்ந்த தலைவர், தமது அரசியல் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளில் உறுதியாக நின்றார் என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார். இதன்படி, அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு திரு மு.கருணாநிதி தெளிவாக எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்

திரு மு.கருணாநிதியின் பன்முக ஆளுமையில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்திய திரு நாயுடு, பல்வேறு திறமைகளின் தனித்துவமான கலவையோடு ஓர் பல்துறை வித்தகர் என்று திமுக தலைவரை வர்ணித்தார். தாம் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற நுட்பமான அரசியல்வாதியாக இருந்ததுடன், சுமார் ஐம்பது ஆண்டு காலம் தமது கட்சிக்கு அவர் தலைமை தாங்கினார்”, என்றார் அவர். தமது புத்திசாலித்தனம், இலக்கிய சுவை மற்றும் கற்றறிந்த வெளிப்பாடுகளோடு பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் திரு மு.கருணாநிதி இருந்ததாக திரு நாயுடு குறிப்பிட்டார். அவர், ஆக்கபூர்வமான அரசியல் விவாத கலையில் சிறந்து விளங்கிய ஒப்பற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார்”, என்று குடியரசு துணைத்தலைவர் மேலும் கூறினார். கலை, கலாச்சாரம் மற்றும் இதழியலின் மீது திரு கருணாநிதி கொண்டிருந்த ஈடுபாட்டினால், “கலைஞர்” என்ற கௌரவப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டதாக திரு நாயுடு தெரிவித்தார். “தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவராக”  திரு மு.கருணாநிதி விளங்கினார் என்று அவர் கூறினார்.

திரு மு.கருணாநிதியின் பல அம்சங்கள் நிறைந்த பணிகள், தமிழகத்தின் சமூக- அரசியல் வட்டாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக திரு நாயுடு தெரிவித்தார். “தமது எழுத்து மற்றும் வசனங்களின் வாயிலாக தமிழ் திரைப்படத் துறையில் புதிய பாதையை கலைஞர் திரு கருணாநிதி வகுத்தார். அன்றாட நிகழ்வுகளின் நுண்ணறிவுமிக்க வர்ணனையாளராக, அரசியல் பகுப்பாய்வராக செயல்பட்டதோடு, தாம் நிறுவிய கட்சி வெளியீடான முரசொலியில் தமது விசாலமான எழுத்துக்களின் மூலம் சக்திவாய்ந்த எழுத்தாளராகவும் திரு மு.கருணாநிதி விளங்கினார்”, என்று அவர் மேலும் குறிப்பிட்டார். நிர்வாகி, சமூக ஆர்வலர், அரசியல் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், கவிஞர், திரைப்பட எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என கலைஞர் திரு மு.கருணாநிதியின் பணிகளில் பொதுவான இழை இயங்குமானால், அது சமூக சமத்துவமும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியுமாக இருக்கும், என்றார் அவர்.

நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சாம்பியனாக கலைஞர் திகழ்ந்தார் என்றும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். தமது தாய்நாடு மீதும், தாய் மொழி மீதும் திரு மு. கருணாநிதி அளவற்ற பற்று கொண்டிருந்ததோடு, செம்மொழியான தமிழில் உள்ள இலக்கிய படைப்புகள் பற்றியும், மாநிலத்தின் பாரம்பரிய கலாச்சார வளம் பற்றியும் உலகம் தெரிந்துகொள்ள உதவினார், என்று திரு வெங்கையா நாயுடு கூறினார். “மாநிலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் இடம்பெறும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை' தமிழ்நாட்டின் இறைவணக்கப் பாடலாக 1970-இல் திரு கருணாநிதி உருவாக்கினார்”, குடியரசு துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து நிலைகளிலும் விரைவான வளர்ச்சியை தமிழகம் பதிவு செய்யும் என்றும், ‘கூட்டாட்சி உணர்வு’ மற்றும் ‘கூட்டாட்சியில் போட்டித்தன்மை’ என்ற உணர்வோடு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்தியா தனது உண்மையான திறனை உணரும் என்றும் திரு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய முதல்வர் திரு மு.க. ஸ்டாலின், தமது புகழ்பெற்ற தந்தை கலைஞர் திரு மு. கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளால் வழிநடத்தப்படுவார் என்ற தமது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்விற்கு என்னை அழைத்ததற்கு தமிழக அரசுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிப்பதோடு, முதல்வர் திரு ஸ்டாலின், அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் கலைஞர் செய்தது போல மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தை அதே ஆர்வத்துடன் தொடர, தங்களது அயராத முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அனைத்து நிலைகளிலும் விரைவான வளர்ச்சியை இந்த மாநிலம் பதிவு செய்யும் என்றும், 'கூட்டாட்சி உணர்வு' மற்றும் 'கூட்டாட்சியில் போட்டித்தன்மை’ என்ற உணர்வோடு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்தியா தனது உண்மையான திறனை உணரும் என்றும் நான் நம்புகிறேன்.
நன்றி!
ஜெய் ஹிந்த்!

வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளதென்று முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். *பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது *இந்த அரங்கத்தை மேம்படுத்தி கலைவாணர் அரங்கம் என்று பெயரிட்டவர்  *கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தவர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு *கலைஞர் சிலையை யார் திறப்பது என்று யோசித்த போது எங்க்ள் நெஞ்சியில் தோன்றியது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தான். *இந்தியாவின் பல குடியரசு தலைவர்களை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி *கருணாநிதிக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது *நமது நாட்டில் பல குடியரசு தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர் *வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது *கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டார் நிரப்பு விழா அழைப்பு அவர் விடுத்த போது  அண்ணா சாலையில் இருந்து முன்னால் முதல்வர் எம்ஜிஆர் மரணம் நிகழ்ந்த போது உடைத்த நிலையில்  முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் சிலை, 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே சாலையில் நிறுவப்பட்டுள்ளதில் கூறியிருப்பதாவது,” ஐந்து முறை முதலமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி, நாட்டிற்கு முன்னோடியான திட்டங்களை உருவாக்கி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர்.


தீயசக்திகளால் தகர்த்தப்பட்ட கலைஞர் சிலை ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மவுண்ட் ரோடு’ எனப் பெயரிடப்பட்டு, உருவாக்கப்பட்ட சென்னையின் இதயப் பகுதிக்கு, அண்ணா சாலை’ என்று பெயர் சூட்டியவரே நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் தான். அத்தகைய கலைஞருக்கு ஒரு சிலை அமைத்திட வேண்டும் என்பது தந்தை பெரியாரின் எண்ணம். பெரியார் மறைந்த பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சி எடுத்து, திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணா சாலையில் (இன்றைய தாராப்பூர் டவர்ஸ் சிக்னல் அருகே) கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் 1987-ஆம் ஆண்டு மறைந்த போது, அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில தீயசக்திகளால், அன்றைய அரசின் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் கலைஞரின் சிலையைக் கடப்பாரை கொண்டு தாக்கி, தகர்த்தெறிந்த அக்கிரமத்தை அண்ணாசாலை மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த அண்ணா சாலையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கலைஞர் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்  எவராலும் அகற்ற முடியாத தனிப்பெரும் சாதனையாளர், தளராத உழைப்பாளி, சமரசமில்லாத சமூகநீதிப் போராளி, நவீன தமிழ்நாட்டின் சிற்பி என கலைஞருக்கு புகழாரம் சூட்டினார்.


50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கத்திப்பாரா மேம்பாலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் டைடல் பார்க், உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு அமைத்தது போன்ற மகத்தான திட்டங்களை வகுத்த திமுகவின் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்!

முதலமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன