முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தற்கால ஆசிரியர் மாணவர் சிக்கலுக்குறிய காரணிகள்

இறைவனருளால ஆசிரியர்களுக்கு மட்டும்  ஆயிரமாயிரம் குழந்தைகள்!

முறிந்த பிரம்புகள்  அறிந்திருக்கவில்லை தான் தழுவியது ஒரு எதிர்கால மருத்துவரை பொறியாளரை என்று அந்த ஆசிரியரைத் தவிர!..

20 வயதிற்குள் நாம் அதிக முறை  சென்ற கோவில் பள்ளி, தரிசித்த குரு தெய்வம் ஆசிரியர்கள்!…ஒரு நல்ல மாணவன்  பள்ளி மாற்றம் செய்யும்  வேளையில் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து வருந்தியது அந்த ஆசிரியரும் தான்!…கருத்த வண்ணம், பெருத்த உடல், சோடாபுட்டிஅ கண்ணாடி, சுருட்டை முடி, எல்லாவித உருவ அமைப்புகளையும் நாம் ஹீரோவாக பார்த்தது  பள்ளியில் தான்!..                                   என்ற வரிகள் கூறும் உண்மை ..                   உளி கொண்டு செதுக்குவதால்,               வலிகள் என்னவோ சிற்பிக்குத்தான்…உயிரில்லா கற்களுக்கல்ல…        அறிவெனும் ஞான உளிக்கொண்டு நம்மை சிற்பமாக்க   அதிக வலிகளை தாங்கிக்      கொள்வது சிற்பியின் கரங்கள்தானே!. .என்பது வேத வாக்கு..             

           குடும்பமும் பள்ளியும் மாணவர்களுக்குத் தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் போதுதான் மாணவர்கள் கல்வியில் நல்ல அடைவினைப் பெறயியலும். இவையிரண்டும் மாணாக்கரது வளர்ச்சிக்கு உதவும் இன்றியமையாத காரணியாகும். ஒரு குழந்தையின் பண்பு தான் குடும்பத்தின் பண்பு. அதன் சமூகத்தின் பண்பு. சமூகம் காலம் காலமாகச் சேகரம் செய்த பண்பை குழந்தைக்கு அளிப்பது குடும்பம், குடும்பம் இல்லாவிட்டால் குழந்தைகள் நற்பண்புகளைப் பெறமுடியாது என்பர் அறிஞர் பெருமக்கள்.ஆசிரியர்கள் மாணவர்கள் உறவென்பது ஆரம்ப கால குருகுல கல்வியின் துவக்கம் இக்கால பாடசாலைக் கல்வி வரையிலும் பின்பற்றப்படும்

ஒரு புனிதமான உறவாகும். அக் கால  மாணாக்கர்கள் குருவினிடத்திற்குச் சென்று குருவிடத்தில் தங்கியிருந்து அவருடன் நெருக்கமான உறவைப் பின்பற்றி வித்தைகள், கல்வி, ஒழுக்க விழுமியங்களைப் பயின்றனர். இது குறிப்பாக மன்னர் அரசராட்சிக் காலங்களில் நடைமுறையில் கண்டது. மகாபாரத இதிகாசத்தின் படி தன் குருவிற்காக ஏகலைவன் தன் பெருவிரலை தற்சணையாக அளித்தான் இவ்வாறு அக்காலத்தில் குரு, சிஸ்யன் உறவு முறை நெருக்கமாக காணப்பட்டமையை

அறியலாம். இது கால ஓட்டத்தில் திண்ணைக் கல்வி முறையாகவும் பின்னர் பாடசாலைக் கல்வியாகவும் மாற்றப்பட்டு தற்போது மெக்காலே முறையில் பின்பற்றப்பட்டு பின்னர் மாற்றமடைந்த போதிலும் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவென்பது முக்கியப்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டே வருகிறது.ஆசிரியர் மாணவன் உறவு நிலை உளவியல் சார்ந்ததாக இருந்தாலும், அது எதார்த்தமானதும் மரியாதை, மதிப்பு மிக்கதாகதாகும்.  ஆசிரியர் மாணவர்களுக்கிடையில் விட்டுக்கொடுப்புக்கள் ஏற்படும் போது முரண்பாடுகள் வீழ்ச்சியடையும் உறவு பலமடையும்.

அத்தோடு சிறப்பான ஆசிரியர் மாணவர் உறவு ஏற்படும் போது அது சிறப்பானதொரு உலகை கட்டியெழுப்ப வழியமைக்கும். பிளட்டோ போன்ற சிறப்பான ஆசான் இல்லை என்றால் அரிஸ்டாட்டில் எனும் சிறந்த நபரைப் பெற்றிருக்க முடியாது. எனவே இவ்வாறான சிறந்த ஆசிரிய மாணவர் உறவை மேலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மாணவர்கள் அனைவரதும் கடமையாகும். அவ்வாறு செயற்பட்டால் எக்காலத்திலும் எவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட்டாலும் ஆசிரிய மாணவர் உறவில் பிரிவிணையை உண்டாக்கவே முடியாது.     "தாய் பெற்று தந்தை வளர்ந்து வர வில்லை எனில் நாய்பெற்ற செல்வம்", இது பழமொழி தற்போதைய நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவணிடம் முடியை வெட்டுமாறு ஆசிரியர் கூறியதால் ஆத்திரமடைந்த  12 ஆம் வகுப்பு மாணவன் காலி மது பாட்டிலால் பள்ளி ஆசிரியரைக் குத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 

அடுத்ததாக  தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் புத்தகம் கொண்டு வராமல் பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்த போது, கத்தியைக் காட்டி மாணவன் மிரட்டிய மிகவும் கொடூரமான சம்பவத்தைத்  தொடர்ந்து  தேவாரம் அரசு மேல்நிலை பள்ளியில் புத்தகம் எடுத்து வராத மாணவனை ஆசிரியர் சற்று கோபமாக கேட்க அதற்கு ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில். மற்றுமொரு நிகழ்வு வேலூர் மாவட்டம்  தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் இரும்பு மேஜையை மாணவர்கள் அடித்து உடைத்தது தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர்  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற மாணவர்களின் ஒழுங்கீனக் குறைபாடுகளும் அதற்கு பதில்   நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கே வருவதற்கு அச்சமாக இருப்பதாக பல ஆசிரியர்கள் வேதனை தெரிவிகின்றனர்.



இதற்கெல்லாம் காரணம் பாடப் புத்தகங்களைச் சுமக்க வேண்டிய மாணவர்களின் கைகளில் ஆயுதங்களும், செல்போன்களும் தான் பல தீங்குகளுக்குக் காரணமாக மேலும் பெற்றோர்களின் வளர்ப்பில் கண்டிப்பு இல்லை  அதிக செல்வம் கொடுத்து அதிக சுதந்திரம் தந்த காரணமாக ஒழுங்கின்மை ஏற்படுத்துகிறது என்கிற அதிர்ச்சித்  தகவல்கள் தான் சில நல்ல பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.     


 மேலும் ஒரு நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி அரசு மேல்நிலைபள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.பள்ளி மாணவர்களில் பலரும் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் புள்ளிங்கோ ஸ்டைலில் நீளமாக வைத்திருப்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டார். ஊராட்சி தலைவர்  அப்போது ஆசிரியர், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் பலமுறை தெரிவித்தும் மாணவர்கள் இதுபோன்று வருகின்றனர். எவ்வளவோ எடுத்து கூறியும், எந்தப் பலனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவிதத நிலையில்

மாணவர்களின் பெற்றோரை வரவழைத்துப் பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி, பள்ளியில் படிக்கும் போது ஒழுக்கத்துடன் வளர்த்தால் தான் நல்ல நிலைக்கு வரமுடியும். இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்று எடுத்துக் கூறியதுடன்.

நீங்கள் சம்மதித்தால் பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தும் தொழிலாளர்களை கொண்டு முடி வெட்ட தான் உதவி செய்வதாகவும் தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சிக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, பள்ளி வளாகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு 300 மாணவர்களின் தலை முடிகள்  வெட்டப்பட்டது. இதில் ஒரு சில மாணவர்கள் முடிவெட்ட விடாமல் அடம் பிடித்த போது, காவல்துறையினரை வரவழைத்து அவர்களை இறுக்கி பிடித்து தலை முடிகளை வெட்டினர். முடிவில், முடி திருத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு குளிர்பானம் கொடுத்தனர்.

இது போல் பல்வேறு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தலைமுடி, நீளமாக வைத்து கொண்டு சுற்றி திரிவது அதிக அளவில் இருந்து வருவதாகும், அந்தந்த பள்ளிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து சலூன் கடை உரிமையாளர்கள் எப்படி ஒரு பள்ளி மாணவர்கள் இருக்க வேண்டுமோ அப்படி முடி வெட்ட வேண்டும் என அறிவிக்கை அனுப்பவும் நடவடிக்கை தேவை. தென்காசி மாவட்டம்  மேலகரம் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு சிகை அலங்காரம் செய்து கொடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள சலூன் கடைகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பரவலாக தற்போது பேசப்பட்டு வருகிறது. காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களை அப்டேட் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. இதில் மாணவ, மாணவிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல.தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பள்ளி வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிடத்தில் போதிய தண்ணீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை அமைதியான சூழலில் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் அனைத்து நாட்களிலும் சீருடை அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களின் சீருடை, சிகை அலங்காரம் போன்றவை தொடர்பாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. ஆசிரியர்கள் கழுத்தில் செயின் அணிந்து இருந்தால் அது வெளியே தெரியாத வகையில் சட்டை பட்டன் போட்டு இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் புகை பிடிக்கக்கூடாது. வேறு நபர்கள் புகை பிடிக்கவும் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதற்காக உதவி தலைமை ஆசிரியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும்  மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆலோசனை கூட்டம் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தி பல அறிவுரைகள் வழங்கப்பட்டது. முன்பு       குருகுல முறையில் மாணவர்கள் நல்ல கல்வியை ஒழுக்கம் பண்புகள் நிறைந்த நிலையில் பெற சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இருந்தது அதனால் தான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை உ.வே.சா  உறவு போன்ற நல் மாணவர்கள் வர ந்ல் ஆசிரியர் தவம் செய்த காலம் அது பொற்காலம். .. அதுபோலவே 1990 வரை ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மரியாதை மிகுந்த காலம் ஒன்று உண்டு . ஆனால் தற்போது பெற்றோர்கள்  வளர்ப்பில் குறை உண்டு அது குறை என்பது தெரியாமல் வளரும் நிலை .. பல குடும்பப் பெண்கள் தொலைக்காட்சி சீரியல் பாழ்படுத்தி விட  பல ஆண்கள் சாராயம் தான் வாழ்க்கை என வாழ் அது பெற்ற பிள்ளைகள் இதுபோன்ற நீதிநெறி பயிலாத நிலை தான் தற்போது மாணவர்கள் ஆசிரியர்கள் உறவில் விரிசல் வரக் காரணம் அதோடு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மாதாந்திர கூட்டம் சரியாக நடக்கிறதா ?இல்லை என்பதே உண்மை . மேலும் ஆசிரியர்கள் பெறும் ஊதியம் அவர்களை தொழில் அதிபர்கள் போன்ற நிலையில் சொந்த பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து வேறு உப தொழில் நடத்தும் ஆசிரியர் களுமே இந்தக் குற்றங்களை அதிகமாக காரணமாக அமைகிறது.முற்கால ஆசிரியரின் பணியும், வகிபாகமும் வேறு வகையானது‌.

ஆசிரியர் சமய அறிவில் மிகுந்த தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.

ஆசிரியர்கள் பெரும்பாலும் துறவிகளாககவே இருந்தனர்.

கல்விக் கற்றலும் பாட ஏற்பாடும் முற்றாகவே சமயம் தழுவியதாக இருந்தன.

கல்வியின் நோக்கம் பெருமளவுக்கு மாணவர்களை அறவழிப்படுத்துவதற்காகவும் அவர்களை ஒழுக்கசீலர்களாக்குவதாகவும் அமைந்தது.

ஆசிரியர்கள் மாணவர்களையும் வகுப்பறையையும் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.  

சமயச் சார்பற்ற கல்வியும் மொழி, இலக்கணம், தருக்கம், மருத்துவம், சோதிடம் துறவிகளான ஆசிரியர்களின் பொறுப்பிலேயே இருந்தது. பண்டைய கல்வி முறையில் இன்று போல் பாடநூல்கள் இருக்கவில்லை. ஆதலின், ஆசிரியர்களே அறிவுப் பெட்டகமாக விளங்கினர். அவர்கள் ஏட்டுச் சுவடிகள் மூலமாகவும் செவிவழியாகவும் பெற்ற அறிவினைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தனர்.

ஆசிரியர் கூறுவதைத் திரும்பக் கூறுதல், மனனம் செய்தல், மனனம் செய்வதை சரிப் பார்த்தல் என்பனவே கற்றல் முறையாகவும் விளங்கின. 

கற்பித்தல் வகுப்பறைக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருக்கும்.

கற்றலை விட கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்,

சொற்கள், கூற்றுக்கள் என்பனவற்றை அடிப்படையாக கொண்டே கற்றல் இடம்பெறும்.

கற்பவரின் தனியாள் வேறுபாடு கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது.தற்கால ஆசிரியர் வகிபாகத்தில்  காணப்படும் குறைபாடுகளையும் சவால்களையும் எதிர்கொள்ள விருத்தி செய்துக் கொள்ள வேண்டிய திறன்களாக பின்வருபவை காணப்படுகின்றது.

தாம் கற்பிக்கும் பாடம் தொடர்பில் அறிவு.

பிள்ளைத் தொடர்பான வளர்ச்சி விருத்தி.

பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் முறைகள்.

பிள்ளைக்கு எவ்வாறு கற்பித்தல்.

வகுப்பறை முகாமைத்துவம்;

சிறந்த தொடர்பாடல் திறன்.

தம்மை தாமே சுய மதீப்பீடு செய்தல்.

பிற ஆசிரியர்கள் சமூகத்துடனான ஊடாட்டம.

மாணவர்களின் முன்னேற்றங்களை சோதித்தல்.

பல்தரமட்ட கற்பித்தல் முறை

ஆன்லைன் கற்பித்தல் முறை

நவீன தகவல் தொழில்நுட்பமானது இன்றைய மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்புகளை நன்கு விரிவுபடுத்தியுள்ளது. 

கணனி உதவியுடனான கல்வி என்னும் நவீன அம்சமானது, பாடசாலைக் கல்வியில் ஆசிரியர்களின் வகிபாகத்தை உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்காலத்தில் கணனி என்பது எம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் கணனியே பாடநூலை விட முக்கியம் பெறுகின்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த