திரிபுராவின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள டாக்டர் மாணிக் சாஹாவுக்கு பிரதமர் வாழ்த்து
திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள டாக்டர் மாணிக் சாஹாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"திரிபுராவின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு @DrManikSaha2 அவர்களுக்கு வாழ்த்துக்கள். பயனுள்ள பதவிக் காலம் அமைய அவருக்கு வாழ்த்துக்கள். 2018- இல் தொடங்கிய திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் வேகம் சேர்ப்பார் என்று நான் நம்புகிறேன்."
கருத்துகள்