முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாஜ்மகால் மற்றும் குதுப்மினார் முந்தைய மற்றும் தற்போதய பிரச்சினைகளின் உண்மை நிலை.

தாஜ்மகால் மற்றும் குதுப்மினார் இரண்டின் முந்தைய மற்றும் தற்போதய பிரச்சினைகளின் உண்மை நிலை.


குதுப் அல்-தின் ஐபக் ( பாரசீகம் : قطبالدین ایبک ), 1150 ஆம்- ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி  முதல் 1210 வரை ஆட்சி செய்த குரித் மன்னர் முகமது கோரியின் தளபதி வட இந்தியாவிலுள்ள குரித் பிரதேசங்களுக்குப் பொறுப்பாளர் கோரி முகமது மரணத்திற்குப் பின்னர் சுதந்திர சாம்ராஜியத்தின் ஆட்சியாளரானார், அதுவே மம்லுக் வம்சத்தால் ஆளப்பட்ட டெல்லி சுல்தானகமானது . துருக்கி பூர்வீகமான குத்புதீன் ஐபக் குழந்தைப் பருவத்தில் அடிமையாக விற்கப்பட்டவர் பெர்சியாவிலுள்ள (தற்போது ஈரான் ஈராக் இணைந்த பகுதியாகும்) நிஷாபூரில் ஒரு ஹாஜி இஸ்லாமியரால் விலைக்கு அடிமையாக வாங்கப்பட்டார் ,

அங்கு அவர் வில்வித்தை மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றைக் கற்றுக்கொண்ட பின்னர் கஜினியில் கோரி முகமதுக்கு  மறு விற்பனையாக்கப்பட்டார் , அடிமையாக இருந்து அங்கு அரசு குதிரை லயத்தில் (தொழுவத்தின்) அதிகாரியாகி உயர்ந்த நிலையில் குவாரஸ்மியன் -குரிட் போரில் , ​​அவர் சுல்தான் ஷாவின் சாரணர்களால் கைப்பற்றப்பட்டார் ; குரித் வெற்றிக்குப் பிறகு, அவர் விடுவிக்கப்பட்டார் மற்றும் கோரி முகமதுவால் மிகவும் விரும்பப்பட்டார்.



1192 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் தாரைன் போரில் வெற்றிக்குப் பிறகு , கோரி முகமது  குத்புதீன் ஐபக்கை தனது இந்தியப் பகுதிகளுக்குப் பொறுப்பாளராக்கினார். சஹாமானா , கஹடவாலா , சௌலுக்யா , சண்டேலா மற்றும் பிற ராஜ்ஜியங்களில் பல இடங்களைக் கைப்பற்றி, படையெடுத்து வட இந்தியாவில் குரிட் சக்தியை குத்புதீன் ஐபக் விரிவுபடுத்தினார் .

1206 ஆம் ஆண்டில் கோரி முஹம்மது இறந்தபோது, ​​வடமேற்கு இந்தியாவிலுள்ள குரிட் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதற்காக குத்புதீன் ஐபக் மற்றொரு முன்னாள் அடிமை-ஜெனரல் தாஜ் அல்-தின் யில்டிஸ் உடன் போரிட்டார். இந்த பிரச்சாரத்தின் போது, ​​அவர் கஜினி வரை முன்னேறினார் , இருப்பினும் அவர் பின்வாங்கி லாகூரில் தனது தலைநகரை அமைத்தார் . கோரி முகமது வாரிசான கியாசுதின் முஹமத்தின் மேலாதிக்கத்தை அவர் பெயரளவில் ஒப்புக்கொண்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக அவரை அப்போதைய இந்தியப் பகுதிகளில் ஆட்சியாளராக அங்கீகரித்தார்.





குத்புதீன் ஐபக்கிற்குப் பிறகு ஆரம் ஷாவும் , பின்னர் அவரது மருமகன் இல்துமிஷ் , இந்தியாவின் தளர்வாக இருந்த குரிட் பிரதேசங்களை சக்திவாய்ந்த டெல்லி சுல்தானகமாக மாற்றினார். குத்புதீன் ஐபக் டெல்லியில் குதுப் மினார் மற்றும் அஜ்மீரில் உள்ள அதாய் தின் கா ஜோன்ப்ரா ஆகியவற்றை உறுவாக்கியதற்காக அறியப்பட்டவர் .டெல்லியில் 72.5 மீட்டர் உயரம் கொண்ட குதுப் மினார் முகலாய மன்னர் குத்புதீன் ஐபக் 1199-ஆம் ஆண்டு பணி துவங்கி அவரது மகன் சம்சுதீன் இல்டுட்மிஷ் கட்டி முடித்தது, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரியச் சின்னமாக 1993-ஆம் ஆண்டில் அறிவித்த. நிலையில்,.         சமீபத்தில் டெல்லியில் குதுப் மினார்  அமைந்துள்ள வளாகத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் பார்வையிட்ட.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியது


"குதுப் மினார் கோபுரம் உண்மையில் விஷ்ணு ஸ்தம்பம் (கொடிமரம்). இந்து மற்றும் ஜைன மதத்தின் 27 கோயில்களை இடித்து விட்டுத்தான் இந்தக் குதுப் மினார் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் கட்டப்பட்டது தான்

குதுப் மினார் வளாகத்தில் ஏராளமான ஹிந்து கடவுள்களில் உடைந்த சிலைகள் காணப் படுகின்றன. இந்தப் பகுதி கோயிலாக இருந்ததற்கு இதுவே ஆதாரம். அழிக்கப்பட்ட 27 கோயில்களையும் மத்திய அரசு மீண்டும் கட்டித் தர வேண்டும். அங்கு ஹிந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதியளிக்க வேண்டும்".

எனக் கூறினார்   டெல்லி மெஹரோலி பகுதி தற்போது வரலாற்று சுற்றுலா ஸ்தலமாக உள்ளது  டெல்லி சுல்தான் வம்ச முதல் மன்னர் குத்புதீன் ஐபக்கால் 1198- ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கப்படுவதற்கு முன் ராஜா பிருத்விராஜ் சௌகானால் கட்டப்பட்ட கோவில்கள் இருந்ததாக அவர்கள்  கூறும் நிலையில் .இந்திய தொல்லியல் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளதன் நுழைவு வாயிலில் ‘குவ்வத்தூல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சக்தி)’ எனும் பெயரிலான மசூதியுமுள்ளது.

இங்கு இஸ்லாமியர்கள் தொழுகை செய்கின்ற நிலையில், 27 இந்து கோயில்களை இடித்து மசூதி கட்டப்பட்டதாக ஹிந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகிறார்கள் தற்போது மெஹரோலி நகராட்சி வார்டு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆர்த்தி சிங் மத்திய அரசிடம்  கோரிக்கை வைத்துள்ளதில், ‘‘குதுப்மினாருக்குள் ஹிந்து கடவுள் சிலைகளை அவமதிக்கும் வகையில் தரைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாற்றி உகந்த இடத்தில் வைத்து, பூஜை மற்றும் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். கடந்த 2000 ஆம் ஆண்டு வரையில் இதனுள் சுற்றுலா பயணிகள் பூஜைகள் செய்து வந்த பிறகு ஏதோ சிலகாரணங்களால் தடை விதிக்கப்பட் டுள்ளது. அந்தத் தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தினார்.




இதே விவகாரத்தை, தேசிய தொல்லியல் ஆணையத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தருண் விஜய் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதியில் எழுப்பினார். இந்திய தொல்லியல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரலுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘‘குதுப்மினாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் தம் காலணிகளை விடுமிடத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் நாக தேவதை, விநாயகர் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றை தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்க வேண்டுமென்று கோரியிருந்தார்.

டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டில், ஹிந்து மடத்தின் தீர்த்தங்கர் ரிஷப் தேவ் துறவி, டெல்லி உரிமையியல் நீதிமன்றத்தில் குதுப்மினார் தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் மத்திய அரசின் 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை சுட்டிக் காட்டி நீதிபதி நேஹா சர்மா அவரது வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்தச் சட்டம், சுதந்திரத்துக்கு முன்பிருந்து நடைபெற்ற அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயில் தொடர்பான வழக்குகளால், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் சுதந்திரத்துக்கு பிறகு இருந்த நிலை தொடருமெனவும் அதில் மாற்றங்கள் செய்யவோ, பிற மதத்தினர் உரிமை கோரவோ முடியாதென வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் துறவி ரிஷப் தேவ், டெல்லி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியில் விசாரணைக்கு வரவேண்டிய நிலையில்



இதுபோல், ஹிந்து அமைப்புகள் குதுப்மினாரில் உரிமையை கோருவது இது முதல் முறையுமல்ல.  2000 ஆம் ஆண்டில் நவம்பர் 11 ஆம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளத்தினர் குதுப்மினாரை புனிதப்படுத்த யாகம் நடத்துவதாக அறிவித்த போது அனுமதியின்றி யாகம் நடத்த முயன்றதாக 80 பேர் கைது செய்யப்பட்டு யாகத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டின்  ஜாம் மினார் எனும் கட்டிடத்தை விட உயரமாகவும் பெயர் பெற்றிடும் நோக்கத்துடன் டில்லியின் முதல்  அரசரான குதுப்த்தீன் ஐபக், 1193 ஆம் ஆண்டு குதுப் மினார் என்ற இந்த கோபுரத்தின் கட்டிட வேலைகளை ஆரம்பித்தார். ஆனால் அவரால் அதன் அடித்தளத்தை மட்டுமே கட்ட முடிந்தது. அவரை தொடர்ந்த, இல்த்மிஸ்  மூன்று தளங்களைக் கட்டி முடித்தார். 1286 ஆம் ஆண்டில், அலாவுதீனால்  ஐந்தாவது மற்றும் கடைசி தளம் கட்டி முடிந்தது. ஐபக் முதல் துக்ளக் வரையான காலகட்டத்தில் கட்டிடக்கலையில் ஏற்பட்ட நடைமுறை மாற்றங்களை அந்த ஸ்தூபியில் தெளிவாகக் காணலாம். ஆப்கானிஸ்தான் நாட்டில் இதற்கு முன் கஜனி மற்றும் கோரி வம்சத்தினர் கட்டிய கோபுரங்களைப் போல, இந்த குதுப் மினாரும் பல ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய பட்டையான விளிம்புடன் கூடிய உருளை வடிவான அம்புகள் கொண்டு வடிவமைக்கப் பெற்றது. மேலும் தனிப்பட்ட முகாமா வகை தடயங்களைக் கொண்டு உப்பரிகைகள் உருவாக்கப்பெற்றன. இந்த ஸ்தூபி சிவந்த மணற்கல்லால் கட்டியது மேலும் அதன் மேல் குர்ஆனிலிருந்து கவிதைகள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் செதுக்கப் பெற்றது. டில்லி நகரத்தை தலைநகரமாகக் கொண்டு கடைசியாக ஆண்ட ஹிந்துக்கள் வம்சத்தை சார்ந்த தோமர்கள் மற்றும் சௌஹான்கள் வாழ்ந்து அழிந்த செங்கோட்டை என்ற இடத்தின் இடிபாடுகளில் தான் இந்த குதுப்,ஃமினார் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அதற்கு முன் 27 மிகப் புராதனமான ஹிந்து மற்றும் ஜைன மதத்தினரின் கோவில்கள் நிலை கொண்டிருந்தன, அவற்றை அழித்து அதில் எஞ்சிய பொருட்களைக் கொண்டு இந்த குதுப் மினார் நிறுவப்பெற்றது. குதுப் மினாரில் உள்ள ஒரு செதுக்கு கலைத்திறன் வேலைப்பாட்டில் "ஸ்ரீ விஸ்வகர்மா பிரசாதே ரக்ஷித" என்ற வாசகம் உள்ளது; அதன் மூலமாக விசுவகர்மாவின் இறையாசி பெற வேண்டும் என்பதற்காக ஓர் அடிமை இந்து கைவினைஞர் கட்டிடப்பணியில் இருந்த வேளையில் இதை செதுக்கி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்த கோபுரம் எதற்காக கட்டினார்கள் என்பதைப் பற்றி பரவலாக விவாதங்கள் நடைபெற்றுள்ளன. டெல்லி சுல்தான்கள் காலத்தில் விஸ்தரிக்கப்பட்ட மசூதி குவ்வட்-உல்-இஸ்லாம் போல, மக்களை தொழுகைக்காக அழைக்கவே, பள்ளி வாயில் ஸ்தூபி தனது பங்கை வழக்கமாக செய்ய வேண்டி கட்டி இருக்கலாம். வெற்றிவாகை சூடியதைக் கொண்டாட இவ்வாறு கோபுரத்தை எழுப்பி இருக்கலாம், இது இஸ்லாமிய மதத்தினரின் படை பலத்தை குறிப்பதாக அமையலாம் அல்லது பாதுகாப்பிற்காக ஏற்படுத்திய காவல் கோபுரமாகவும் இருக்கலாம். இதற்கு யார் பெயர் வைத்தார்கள் மற்றும் அப்படி ஏன் வைத்தார்கள் என்பது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பல வரலாற்று வல்லுனர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்து வெற்றி கண்ட துருக்கிய சுல்தான் குத்புதீன் ஐபக்  நினைவைப் போற்றும் வகையில் இந்தப் பெயர் சூட்டியாதாகக் கூறினாலும், சிலர் ட்ரான்ஸ்ஓக்சியானா என்ற இடத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு துறவி குத்புதீன் பக்தியார் காக்கி என்பவரை போற்றும் வகையில் சூட்டப் பெற்றதாக கூறுகிறார்கள், இல்துமிஷ் என்ற அரசரும் அவரை மிகவும் போற்றி வணங்கியதாக கூறுகிறார்கள்.


இந்த குதுப் வளாகத்தின் அருகாமையில் நிற்கும் தில்லி இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும், உலோக ஆக்கத் தொழில் வல்லுனர்கள் மிகவும் ஆச்சரியமடைந்த விஷயமாகும். பரம்பரை பரம்பரையாக மக்கள் நம்புவது என்னவென்றால், ஒருவர் முதுகை இந்த தூணுடன் இணைத்து, தமது கரங்களால் இந்த தூணை அரவணைக்க முடிந்தால், அவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகமாகும். மனிதனின் வியர்வை இந்த தூணை அரித்தழிக்கும் என்பதால் இப்படி செய்யாமல் இருக்க, இந்திய அரசு இந்தத் தூணை சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளது.

இருமுறைக்கும் மேலாக நிகழ்ந்த நிலநடுக்கங்களால் மினார் கொஞ்சம் சீரழிந்தது, ஆனாலும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதை புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவந்தனர். பிரோஜ்ஷா அரசனாக இருந்த பொழுது, இதன் இரு மேல் மாடிகள் பூமி நில அதிர்வு காரணமாக பழுதடைந்தன, , ஆனால் அரசர் பிரோஜ் ஷா அதை அப்போதே சரிசெய்து கட்டிவிட்டார். 1505 ஆம் ஆண்டில், நிலநடுக்கம் மீண்டும் தாக்கியது மற்றும் சிக்கந்தர் லோடி அதை மீண்டும் பழுது பார்த்தபிறகு 1794 ஆம் ஆண்டில் ஒரு முறை பூகம்பத்துக்கு இந்தக் கோபுரம் ஆளான பொது, மேஜர் ஸ்மித் என்ற பொறியியலாளர் அதன் பழுதடைந்த பாகங்களைச் சரி செய்தார். அவர் கோபுரத்தின் சிகரத்தில் பிரோஜ் ஷா அமைத்த காட்சிக்கூடத்தை மாற்றி அமைத்தார். இந்தக் காட்சிக் கூடத்தை 1848 ஆம் ஆண்டில் லோர்ட் ஹார்டிஞ் என்பவர் பிரித்தெடுத்து, தபால் கட்டிடம் மற்றும் கோபுரத்திற்கு இடையில் அமைந்த தோட்டத்தில் மாற்றியமைத்தார். பிரோஜ் ஷா அமைத்த தளங்களை எளிதாக கண்டு கொள்ளலாம், ஏன் என்றால் அவர் தரைகளை வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் உருவாக்கினார், அவை மினுமினுப்பாகவும் வழவழப்பாகவும் இருப்பது பார்த்தாலே தெரிந்து விடும் இப்படி குதுப்மினார் வரலாறு விவாதம் நடப்பது போன்ற.    தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறந்து ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் லட்சுமணபுரி (லக்னோ) கிளை தள்ளுபடி செய்தது. தற்போது பா.ஜ.க எம்.பி-யும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி, ``தாஜ்மஹால் இருக்கும் நிலம் எங்கள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால், அதை ஷாஜஹான் கைப்பற்றிக்கொண்டார்" எனக் கூறியது, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தியா குமாரியின் பேச்சுக்கு, முகலாய வம்சாவளி எனக் கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுதீன் டூசி ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பதிலளித்திருக்கிறார். அந்த வீடியோவில், ``உங்களின் பொதிகானாவில் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள் என்று கூறியுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் மத்தியில்



உத்தரப் பிரதேசத்தில்  அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லட்சுமணபுரி (லக்னோ) கிளையில், பாரதிய ஜனதா கட்சியின் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: துறவியரும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோரும், தாஜ் மஹால் கட்டப்படும் முன் காலத்தில் புகழ் பெற்ற சிவன் கோவிலாக இருந்தது என கூறி வருகின்றனர்.'தேஜோ மகாளயா' என்ற பெயரிலிருந்த சிவன் கோவில் தான், தாஜ் மஹாலாக மாற்றப்பட்டதாகக் கூறுகின்றனர். இதற்கு வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தாஜ்மஹாலிலுள்ள 22 அறைகள் மூடிவைக்கப்பட்டுள்ளன.அங்கு ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறைகளின் கதவுகள் பூட்டப்பட்டுள்ளன என, இந்திய தொல்லியல் துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. மூடப்பட்டுள்ள அறைகளுக்குள் என்ன உள்ளது என்பதை அறிய வேண்டும். உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து, மூடப்பட்டுள்ள அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய, தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்ட நிலையில்.

 விசாரித்த நீதிமன்றம், 22 அறைகளை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தாஜ்மகால் உருவான வரலாறு ஏற்கனவே  நமது இதழில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை பல உண்மைகளின் உரைகல்லாக இருக்கிறது. இது.ஷாஜகானின் ஏழு மனைவிகளில் நாண்காவது மனைவி  மும்தாஜ். அவரை நிக்ஹா செய்ய

ஷாஜகான்  மும்தாஜ் முன்னால் கணவனைக் கொன்றது தான் வரலாறு. ஷாஜகான் மணந்து 

மும்தாஜ் 13 குழந்தைகள் பெற்ற நிலையில்  14 ஆம் பிரசவத்தில்  உயிரிழந்தார்..

மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங்கையை மணந்தார் மன்னர் ஷாஜகான் 

மும்தாஜ் மஹல் உடல் முதன்முதலில் புர்ஹான்பூரில் உள்ள தப்தி நதிக்கரைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல் அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்டு 15 வயது இளவரசர் ஷா ஷுஜாவின் மேற்பார்வையில் ஆக்ராவுக்குக் கொண்டுவரப்பட்டு,  1632 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதியன்று யமுனை நதிக் கரையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அதுவும் இறுதியல்ல


அங்கு ஷாஜகான் இன்னொரு கல்லறையைக் கட்டினார், அதற்கு அவர் 'ரவுசா-இ-முனவ்வரா' என்ப் பெயரிட்டார், இதுவே பின்னர் தாஜ்மஹால் என்றானது. இக் கல்லறையைக் கட்டும் பொறுப்பு மிர் அப்துல் கரீம் மற்றும் மகர்மத் கான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜஹாங்கீர் ஆட்சியில் தெற்கு ஈரானில் உள்ள ஷிராஸ் நகரத்திலிருந்து முகமத் கான் இந்தியாவிற்கு வந்தார். ஷாஜகான் அவரை தனது கட்டுமானத் துறையில் அமைச்சராக்கினார். 1641 ஆம் ஆண்டு டெல்லியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஷாஜஹானாபாத்தின் புதிய நகரத்தில் செங்கோட்டையைக் கட்டும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாஜ்மஹால் 1560 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஹுமாயூனின் கல்லறையை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது. இதற்காக 42 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதன் நான்கு மினாரட்டுகள் 139 அடி உயரம் வரை அமைக்கப்பட்டு மேலே ஒரு குவிமாடம் அமைக்கப்பட்டது.ஷாஜகானின் வாழ்க்கை வரலாற்றை 'ஷாஜஹான் - த ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த முகல் எம்பயர்" என்ற புத்தகமாக எழுதிய ஃபர்குஸ் நிக்கோல், "தாஜ்மஹாலைக் கட்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கன்னோசியிலிருந்து வந்த ஹிந்துக்கள். மலர்களைப் பராமரிப்பவர்கள் போகாராவிலிருந்து அழைக்கப்பட்டனர். காஷ்மீரின் ராம் லாலிடம் தோட்டத்தை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது," என்று குறிப்பிடுகிறார். மும்தாஜின் முந்தைய வாழ்க்கை பற்றி கூறும் போது அவரது 19 வது வயதில் 1612, மே 10 இல் மும்தாஜ் ஷாஜகானின் ஏழாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாகவே இருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூரில் தனது 14வது மகப்பேறின் போது மரணமானார் இவரது நினைவாக ஷாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மகால் நினைவு மண்டபத்தில் மும்தாசின் உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.  மும்தாஜ் மகால் (செப்டம்பர் 1, 1593 –ல் பிறந்து  சூன் 17, 1631ல் மறைந்தார்) அவரது இயற்பெயர் அர்சுமந்த் பானு,  ஆக்ராவில் பிறந்தவர். இவரது தந்தை பார்சி தாய் இரஜபுத்திரர் வழி   ஷாஜகான் மும்தாஜ் தம்பதிகளுக்கு  14 பிள்ளைகள் இதில் 7 குழந்தைகள் இறந்துவிட்டன 1631 ஆம் வருடத்தில் ஜூன் ஏழாம் தேதி சுல்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அந்த நாட்டின் எல்லையில் தன் படைகளோடு முகாமிட்டிருந்தார் ஷாஜகான் அப்பொழுது அவரோடு சென்றிருந்த மும்தாஜ் தன்னுடைய 14 வது குழந்தையை பெற்றெடுத்தார் குழந்தை பிறந்த நிலையில்  திடீரென ஜன்னி வலிப்பு நோயில் துடித்ததை பார்த்த காவலாளிகள் மன்னரிடம் தெரிவித்தனர்.தாஜ்மஹால்  கட்டிடக் கலை இந்திய பெர்சிய மற்றும் இஸ்லாமிய தோற்றம் கலந்த நடையில் கட்டப்பட்ட கட்டிடமாகும்.

 தாஜ்மஹாலை கட்டி முடித்த பிறகு, இதே போன்று வேறு ஒரு கட்டிடம் எழுப்பக் கூடாது என்ற காரணத்தினால் இந்த கட்டிடத்தை கட்டிய அனைத்துக் கலைஞர்களின் விரலையும் மன்னர் ஷாஜகான்  வெட்டியதாகக் வழி வழி வந்த மக்கள் பலரால் செவிவழிக் செய்தியாகக் கூறப்படுகிறது. இந்த கட்டிடத்திற்கு என்றே பிரத்யேகமான பளிங்கு மார்பிள் கற்கள் ராஜஸ்தான், திபெத் மற்றும் சீனா போன்ற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

அப்போதைய காலகட்டத்திலேயே இதை கட்டி முடிப்பதற்கு 32 மில்லியன் ஆகிற்று. இப்போது அதன் மதிப்பு 1062834098 அமெரிக்க டாலர்கள்லாகும்   தாஜ்மஹால் 1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு