லடாக்கில் பேருந்து விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் இரங்கல்
லடாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டு டுவிட்டர் பதிவில் ;
“லடாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்