முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆம்பூர் பிரியாணி திருவிழா இரத்து செய்யப்பட்ட பிண்ணனி

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்

மே மாதம் 13, 14, மற்றும் 15  ஆம் தேதிகளில் மூன்று நாட்கள் ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடந்த விருந்த பிரியாணித் திருவிழா

இரத்து செய்யப்பட்டது

. நாட்டில் எங்கு பார்த்தாலும் தெருவுக்கு நான்கு பிரியாணி கடைகள் உறுவாகிய நிலையில் மக்கள் உணவு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் மாற்றம் உருவாக்கி விட்டது. அதைப் பயன்படுத்தி பல போலி பிரியாணி கடைகள் வந்துள்ளது, இதனால் பல நோய்கள் பெருகும் நிலைக்கு காரணம் அதுவே. வேலூர் மாவட்டம்

ஆம்பூர் நகரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் மற்றும் ஹோட்டல்கள் உண்டு. கோழி இறைச்சி பிரியாணி, ஆட்டிறைச்சிப் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, முயல் மற்றும் காடை பிரியாணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட  ஹோட்டல்களில் சரிபாதி மாட்டுக்கறி பிரியாணி ஹோட்டல்களாகும். வேலூர் மாவட்ட நிர்வாகம் நடத்தும் இந்த பிரியாணி திருவிழா ஒரு வேண்டாத வேலை எனப் பலரால் பேசப்படுகிறது பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என அறிவிக்கப்பட்டாலும், அதை உண்ணும் சமூகத்திலுள்ள உணவுப் பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதும் 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்  தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய  மாவட்டங்களில் 13.05.2022 மற்றும் 14.05.2022 ஆகிய இரண்டு நாட்களில்  இடியுடன் கூடிய கனமழை பொழியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதன் அடிப்படையில் பொதுமக்கள் பங்குபெற ஏதுவாக அமையாது. எனவே ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022 தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.


இது குறித்து ஆதிதிராவிட அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாவை நேரில் சந்தித்து மாட்டுக்கறி  பிரியாணி சாப்பிடுபவர்கள் அதிகளவில் உள்ளனர். அதனால் அதையும் அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்த நிலையில். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா, ஒரு சமுதாய மக்கள் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பவில்லை. அவர்களையும் நான் பார்க்க வேண்டும் அதனால் அதற்கு அனுமதியில்லை எனச் சொன்னதாகத் தகவல்கள் வெளியாகி. இந்த செயலுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.   இது சமூக கலாச்சார பண்பாட்டு சூழலுக்கு விரோதமாகவே இந்த பிரியாணி திருவிழா பலரால் பார்க்கப்படுகிறது என்பதே உண்மை.



 நாளை தொடங்கவிருக்கும் பிரியாணித் திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணியை அனுமதிக்காவிடில் இலவசமாகத் தருவோம் என கோரிக்கை வைத்த அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




'  பிரியாணி குறித்த ஒரு பின்னோக்கிய வரலாற்றுப் பார்வை.    பிரியாணி என்பது முகலாய உணவுக் கலாச்சாரத்தின் அடையாளம். இசுலாமியத் திருமணங்களிலும் ரமலான், பக்ரீத் போன்ற இசுலாமிய விழாக் காலங்களிலும் இசுலாமியர் வீடுகளில் மட்டுமே உருவாக்கப்படும் திருமண பிரியாணி தான் அப்போதைய காலகட்டத்தில் பிரியாணி கடைகள் இல்லை இருந்தாலும் நமது மக்கள் அதை உண்பதில்லை அதுபோலவே சமைப்பதுமில்லை.  இவற்றினை 200 ஆண்டுகளுக்கு மேலாக ஐதராபாத் நிஜாம் குடும்பத்தினராலும் போற்றப்பட்ட (ஓசுமான் அலி கான், அசாப் சா V11 கி.பி. 1720–1948 வரை) பிரியாணி சமையல் வல்லுநர் தும்பச்சி வம்சத்தினரால், இன்றுவரை "தும்பச்சி மர்ஹும் ஜனாப் து. மு. அ. முகம்மது உசேன் இராவுத்தர்" என்பவராலும், அவருக்கு பின்பாக அவரது சந்ததி "தும்பச்சி ஜனாப். து .மு. அ. மு. முகம்மது இஷாக் ராவுத்தர்" என்பவரால் முகலாய கலாச்சார படியும் இஸ்லாமிய ஹலால் முறையிலும் " திருமண பிரியாணி"யாக உருவாக்கப்படுகிறது. இந்தவகை பிரியாணியே முகலாய ஆட்சி இந்தியாவில் காலுன்றிய காலத்திலிருந்து இன்றுவரை காலம்காலமாக தும்பச்சி வம்சத்தினரால் அவற்றிக்கான பக்குவமும் தரமும் மாறாமல் இன்றுவரை தயாரிக்கப்படுகிறது. இந்த "திருமண பிரியாணி" தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் தென் ஆற்காடு (கடலூர்) மாவட்டத்தில் தற்போது பண்ருட்டி நகரில் பிரபலம்.  ஆம்பூர் பகுதியில் பின்பற்றும் செய்முறை ஆம்பூர் பிரியாணி எனப் பெயர் பெற்றுள்ளது. பெரும்பாலும் அசைவ பிரியாணி வகைகளாக



ஆம்பூர் பிரியாணியின் உண்மையான சுவையை வேலூர் மாவட்டத்தில் இசுலாமியர்கள் நடத்தும் திருமணங்களில் காணலாம். விறகு அடுப்புகளில்  பெரிய பாத்திரங்களில் ஆட்டுக் கறியுடன் பாசுமதி அரிசி சேர்த்துச் சமைக்கப்படும். ஐதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும் சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சள் கலரில் இருக்கும்.




ஹைதராபாத் பிரியாணியானது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் தற்போது நமது உணவுக் கலாச்சாரம் மறந்து போன மக்களால் அவர்கள் குடும்பத்தினரால் விரும்பப்படுகிறது நிஜாமின் ஹைதராபாத் பிரியாணி கச்சி யெக்னி பிரியாணி எனப்படுகிறது; தனித்தனியாக அல்லாது ஊறவைத்த இறைச்சியும் அரிசியும் ஒன்றாகவே சமைக்கப்படுகின்றன.


தமிழ்நாட்டின், திண்டுக்கல் நகரில் தலைபாகட்டி நாயுடு என்ற தனிநபரின் சிறிய  கடை சுதந்திர காலத்தில் வியாபாரம் செய்த பிரியாணி செய்முறையாகும். இந்த வகைப் பிரியாணி தென்தமிழ் நாட்டில் புகழ்பெற்று தற்போது பல்வேறு அதன் கிளைகளில்  வழங்கப்படுகிறது. அதற்கு போட்டியாக பல போலி தலைப்பாகட்டி கடைகள் உருவாகிய நிலையில் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்து வருகிறது ஒரு கும்பல்.


இங்கு நீண்ட பாசுமதி அரிசிக்கு மாற்றாக சீரக சம்பா அரிசி மற்றும் குறும்பாட்டு மாமிசம் பயன்படுத்தப்படுவது சிறப்பாகும்.

 சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும், அரிசியின் தரமும் இதன் சிறப்பாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை. இந்த வகையான பிரியாணி கேரளா , கர்நாடகா , ஆந்திரப் பிரதேசம் , தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் வரவேற்பு பெற்றது.

கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பட்கல் ஊரில் தயாரிக்கப்படும்  பிரியாணி  கடலோர கர்நாடகத்தில் புகழ் பெற்றது. மும்பை பிரியாணியை போல இந்தவகையில் இதன் நிறமும் மணமும் சிறப்பான இயல்பாகும். பட்கல் பிரியாணியும் ஆட்டிறைச்சி, மீன், கோழிக்கறி, மாட்டிறைச்சி மற்றும் இறால் இறைச்சிகளுடன் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மாறாக இங்கு பிரியாணி தயாரிக்கப்படும்போது வெங்காயம் பெரியளவில் பயன்படுத்தப்படும் காரணம் பிரியாணி உணவு கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வெங்காயம் சாப்பிடுவது கட்டாயம் ஆகிறது.வாலுவன் என்பது சமையல்காரர் உண்பவர்களின் வரிசையை அறிந்து, தேவையை அறிந்து, தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு "ஊன்சோற்றைத் துழாவி எடுத்துத் தந்தான்" என்கிறது மதுரைக்காஞ்சியில் வரும் பாடல்.


‘மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்’ என்ற நற்றிணை பாடல் வெண்சோற்றுடன் நெய் கலந்து, இறைச்சியையும் சேர்த்து சமைத்து உண்டனர் என்ற செய்தியை நமக்குச் சொல்கிறது

பிரியாணி என்பது ஈரான் நாட்டில்  (பெர்சியா) விலிருந்து  உருது மொழியில் வந்த சொல். பார்சியில் ‘பிரியான்’ என்றால்  வறுக்கப்பட்ட உணவு பிரியாணியின் துவக்கம் பெர்சியாவா?, அரேபியேவா? என்ற வரலாற்று விவாதம் இன்றும் நடக்கிறது.

பிரியாணியின் வரலாற்றை கி.பி 2-ஆம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்களில் பிரியாணி போல் ஒரு உணவின் சுவடுகள் தென்படுகின்றன. பிரியாணி சமைக்கப்படும் அதே முறையில் பழந்தமிழர்கள் ‘ஊன்சோறு’. எனப்படும்


அரிசி, நெய், மஞ்சள், மிளகு, புன்னை இலை ஆகியவற்றோடு இறைச்சியைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்ட  ஊன்சோறு மிகப் பிரபலமானஉணவு வகையாக மன்னர்கள் முதல் சாமானியன் வரை ஊன்சோற்றை விரும்பி உண்ணும்  இந்த உணவிற்கு ஊன்துவையடிசில் என்ற பெயரும் உண்டு.

மதுரைக்காஞ்சியின் வரிகள் ஊன்சோற்றைப் பற்றி 

‘துடித்தோட்கை துடுப்பாக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

மங்கோலியப் பேரரசர் முதல் முதலாக தைமூர்  அப்போதய பல சமஸ்தானத்தின் கூட்டாக இருக்கும் தற்போதய இந்தியாவில் 1398 ஆம் ஆண்டு படையெடுத்த போது போர் வீரர்களுக்காக பிரத்தியேகமாக சமைக்கப்பட்டது தான் பிரியாணி. உலகம் முழுவதும் கடல் மார்க்கமாக குதிரை வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர்கள் கேரளா மாநிலம் கொச்சின்  வந்த போது பிரியாணி சமைத்து உண்ணும் வழக்கமிருந்து  அவர்கள் மூலம் பரவியிருக்கலாம். ஒருமுறை போர்முனைக்கு வருகை தந்த முகலாய ஷாஜஹானின் தனது போர் வீரர்கள் உணவாக இருந்து பின்னாளில் ஹைதராபாத் நிஜாம்களுக்கும், மைசூர் சூல்தான்களுக்கும், லக்னோ, ஆற்காடு நவாபுகளுக்கும் பிரியமான உணவாக மாறிய. பிரியாணி சமைக்கும் சமையல்காரர்கள் உலக புகழ் பெற்றனர். இஸ்லாமியர்களால் தயாரிக்கப்படும் உணவாக அது மாறிப்போனது. தென்னிந்தியாவில், மைசூர் திப்பு சுல்தானின் கோட்டையில் பல சைவ இந்து சமையல்காரர்களின் மூலம், வெறும் காய்கறிகளின் வைத்து, தாகிரி பிரியாணி சமைத்து பரப்பிய காலகட்டத்தில் ஹைதராபாத் நிஜாம்கள் மூலம் ஹைதிராபாதி பிரியாணி என்றும் ஆற்காட்டை ஆண்ட நவாப்கள் ஆற்காடு பிரியாணி என்றும் முழுவதும் பரவவிட்டனர். தமிழ்நாடு வசிக்கும் மக்கள் நாம் அறிந்த வரை 1980 ஆம் ஆண்டு வரை பிரியாணி என்பது மக்கள் அறியப்படவில்லை அதுவரை அது இஸ்லாமிய மக்கள் உணவு.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பெரும்பாலும் அசைவப் பிரியர்களால்  ஹைதராபாத் பிரியாணி விரும்பப்படுகிறது. இந்திய சமையல் பாணியின் அங்கமாகக் கருதப்படும் ஹைதராபாத் பிரியாணி முன்பு நிஜாம் அரண்மனை சமையலறையில் மீன், காடை, இறால், மற்றும் காட்டு மிருகங்கள் முயல் உட்பட 49 வகைகளில் தயாரிக்கப்பட்டதாக வரலாறு. இந்த பிரியாணி உலகப் பிரபலம் என்பதால் இதை வியாபார நோக்கில் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஹைதராபாத் பிரியாணி உணவகங்கள் 2001 ஆம்  ஆண்டுக்குப் பின்னர் வந்த நிலையில் தற்போது மக்கள் பிரியாணியில் மயங்கி மயக்கத்தில் கிடக்கிறார்கள். காரணம் அண்ணியக் கலாச்சார மோகம் தான் அதுவே நமது நாட்டின் சீதோஷ்ண நிலையில் ஆயுளைக் குறைக்கும் நோய்களை வருத்தும் நிலை உள்ளதே உண்மை.சர்ச்சையான நிலையில் ஆம்பூரில் தொடங்கவிருந்த பிரியாணித் திருவிழா தற்போது ஒத்திவைக்கப்படுவதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மழையைக் காரணம் காட்டி நிகழ்ச்சி ரத்து என்று ஒரு இதழ்செய்தி வெளியிட்ட நிலையில் இந்தப் பாகுபாடு குறித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அதனால் தான் பிரியாணி திருவிழா நிறுத்தப்பட்டுவிட்டதென விவரமறிந்தவர்கள் கூறும் தகவல். கடிதம் கூறும் உண்மை .இந்து முன்னணியும் எதிர்ப்பு மனு அளித்துள்ளனர். இச் சூழ்நிலையில் தற்காலிக ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் மறு தேதி குறிப்பிடாமல் இருப்பதால் இரத்து செய்யப்பட்டது என்பதே சரியான சொல் ஆகும். மறு தேதி தெரிவித்திருந்தால் மட்டுமே ஒத்திவைப்பு என்ற வார்த்தை பொருந்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்கள் பாதுக

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை