தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக் குழு திட்ட அலுவலர் ராஜேஸ்வரி அலுவலகத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார்
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக் குழு திட்ட அலுவலர் ராஜேஸ்வரி அலுவலகத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக இளநிலை உதவியாளர் உமாசங்கர் கைது.
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்குழு மாவட்ட திட்ட அலுவலராக பணி செய்பவர் ராஜேஸ்வரி.
மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அவர் பணி செய்யும் அலுவலகத்தில் இன்று வழக்கம் போல பணியாற்றிக் கொண்டிருந்தவரை போடிநாயக்கனூரைச் சேர்ந்த உமாசங்கர் (வயது 56)
அலுவலகம் வந்தவர் ராஜராஜேஸ்வரியின் அறைக்குச் சென்று அவரிடம் வாக்குவாதம் செய்தபோது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டியதில் அவருக்கு தலை, கை, கண்ணம் ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அலுவலக ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள், உமாசங்கரை தடுத்து, அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரின் காரில், ராஜராஜேஸ்வரியை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜராஜேஸ்வரியைத் தாக்க வேண்டும் என்ற திட்டமிட்ட நோக்கத்துடன் உமாசங்கர் அவரை வெட்டுவதற்காகவே ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலிலிருந்து அன்று ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தேனிக்கு வந்தவர் ராஜராஜேஸ்வரியின் அலுவலகத்துக்கே சென்று உச்சந்தலை, வலது கன்னம், இடது காது, வலதுகை முட்டி, முதுகு உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெட்டியுள்ளார். இடது மணிக்கட்டில் சரமாரியாக வெட்டியதால் மணிக்கட்டுக்கு கீழே உள்ள பகுதி துண்டானது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதே அலுவலகத்தில் 2015 - 16 ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய உமாசங்கர் என்பவருக்கு, திட்ட அலுவலர் ராஜேஸ்வரி 17 B யின் படி மெமோ வழங்கியதன் காரணமாக உமாசங்கர் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டதால். அவர் திருப்பூருக்கு மாற்றப்பட்டது தொடர்பாக முன் விரோதம் காரணமாகவே கொலை வெறித்தாக்குதல் நடந்துள்ளதாக காவல்துறையினரின் முதல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல்துறையினர் உமாசங்கரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பால்சுதிர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த அறை மற்றும் அலுவலக வளாகம் முழுவதும் ரத்தம் உரைந்து கிடந்தது.
கருத்துகள்