திடீர் முதல்வர் ஆய்வு காரணமாக தடுமாறும் ஊழல் அலுவலர்கள் துறை நிர்வாகத்திற்கு தலைமைச் செயலாளர் கடிதம்
தமிழகத்தின் முதல்வர் இன்று காலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பின்னர் காவிரி டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு ஆய்வு நடத்த புறப்பட்டார்.
காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் முன்னறிவிப்பு ஏதுமின்றி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியதால் அதிகாரிகளிடையே அப்போது பரபரப்பு ஏற்படக் காரணம் ஊழல். வெளி வந்த பயமே. சமீபமாக கிண்டியிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மே மாதம் 25 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்ட போது, வருவாய்த் துறை சேவைகள் பெற வெளியில் காத்திருந்த பொதுமக்களிடம் அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்ட. போது, பொதுமக்கள் பலவிதமான குறைகளை தெரிவித்ததையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாற்றப்பட்டார்.
அதன் பின்னர் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ ஆ ப அதிரடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
ஆய்வு குறித்த அறிக்கையை அரசுக்கு மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை வருவாய்த்துறை நிர்வகிக்கிறது. அவற்றில் முக்கியமானவை பட்டா மாற்றம், நிலப் பிரிப்பு, பல்வேறு வகை சான்றிதழ்களை வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவையாகும். ஆனால் இந்தச் சேவைகளை வழங்குவதில் பல இடங்களில் காலதாமதமும், குறைபாடுகளும் காணப்படுகின்றன.
சென்னையில் ஒரு தாலுகா அலுவலகத்தில் முதல்வர் சோதனை நடத்தி பல்வேறு குறைபாடுகளைக் கண்டறிந்தார். எனவே இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தாலுகா அலுவலகங்களுக்குச் சென்று குறிப்பிட்ட சில சேவைகளை விரிவாக ஆய்வு செய்து குறைகளை சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் இந்த சேவைகளை வழங்குவதில் பல இடங்களில் காலதாமதமும், குறைபாடுகளும் காணப்படுகின்றன. அதற்கு ஊழல் தான் முக்கியமான காரணம் என்பதை தலைமைச் செயலாளர் நன்கு அறிந்த நிலையில்
அந்த வகையில் வருவாய் சான்று, சாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். சான்றிதழ் வழங்காமல் தள்ளுபடி செய்யப்பட்ட நிகழ்வுகளை பரிசீலனைக்கு எடுத்து, தள்ளுபடிக்கான காரணங்கள் சரிதானா? என்று ஆய்வு செய்ய வேண்டும். முதியோர் ஓய்வூதிய திட்டம் குறித்த நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.
நிலப் பிரிவுக்கு வராத பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். நிலப் பிரிவு விவகாரங்களில் சர்வேயர்களின் செயல்பாடுகளை ஆராயப்பட வேண்டும். தவறுகள் இருக்கும் பட்டாக்களை திருத்துவதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதா? பட்டா மாறுதலில் உள்ள அப்பீல் விண்ணப்பம் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த ஆய்வுக் குறித்த அறிக்கையை அரசுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. இது அணைத்து மாவட்டங்களில் பரவலாக உள்ளது மேலும் அரசு ஊழியர்கள் பொது ஊழியர் என்ற மனநிலை இல்லாமல் தாங்கள் ஒரு சர்வாதிகார மனநிலை கொண்டு செயல் படும் சில ஊழல் வாதிகள் கோப்புகள் தேக்கம் செய்த பிறகு சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்து லஞ்சப் பணம் பெறுவதற்கு வழிவகுக்கும் நிலையில் இதை மாவட்ட நிர்வாகங்கள் கண்டும் காணாமல் இருக்கக் காரணம் பல இடங்களில் மாமூல் மற்றும் இலஞ்சம் பகிர்ந்து சமரசம் செய்து கொள்வதே காரணமாக அமைகிறது.நாம் அறிந்த வரை பல உதாரணங்கள் கூறமுடியும். அவ்வளவு குற்றச்சாட்டு வருகிறது. அணைத்தும் இங்கு விளக்க முடியாது. மாவட்ட நிர்வாகம் சரியாக இருந்தால் குறைகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
கருத்துகள்