பிஇஎம் அடிப்படையிலான இந்தியாவின் பெரிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்திற்கு கெயில் அனுமதி
தேசிய ஹைட்ரஜன் இயக்கத்திற்கு ஏற்ப, இந்தியாவில் மிகப் பெரிய புரோட்டான் பரிமாற்ற சவ்வூடு மின்னாற்பகுப்பு ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு கெயில் இந்தியா நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கெயில் நிறுவனத்தின் விஜய்பூர் வளாகத்தில் நிறுவப்படும். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையில் செயல்படும்.
நாள் ஒன்றுக்கு 4.3 மெட்ரிக் டன் ஹைட்ரஜனை தயாரிக்கும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் ஹைட்ரஜன், 99.999 சதவீதம் தூய்மையானதாக இருக்கும். இத்திட்டத்தை 2023 நவம்பர் மாதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுளளது.
கருத்துகள்