உலக தேனீக்கள் தினத்தைக் குறிக்கும் வகையில் 2022, மே 20 அன்று குஜராத்தில் தேசிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது
குஜராத்தின் நர்மதாவில் உள்ள ஏக்தா நகரில் 2022, மே 20 அன்று உலக தேனீக்கள் தினத்தை மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கலந்து கொள்வார். மாண்புமிகு பிரதமரின் வழிகாட்டுதல் படி நாட்டின் சிறு விவசாயிகள் பயனடைவதற்காக தேனீ வளர்ப்பை மேம்படுத்த இந்த நாள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது.
தேனின் சுவை லயிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன் இலக்கியங்களில், பலமொழிகளில், சொலவடைகளில் பதிவு செய்திருக்கிற நிலையில் மனித இனம். வளர்ச்சி பெற்று வந்த அப்போதைய காலகட்டத்தில் தேனீக்களுக்கு அழிவில்லை. ஆனால், இன்று அழிந்துவரும் பூச்சியினங்களில் ஒன்றாக மாறியிருப்பதால் தேனீக்களின் வாழ்க்கை குறித்துக் கவலைப்படுகிறோம். தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கையினால் தான் தாவரங்கள் பல்கிப் பெருகுகின்றன.
அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் போனால் மனித இனம் கடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் விவசாயிகள் மனித சமூகத்தின் காவலர்களாக தேனீக்களைப் பார்க்கிறார்கள். ஆனால் என்ன செய்ய? கொடிய பூச்சிக்கொல்லி ரசாயனங்களை, விவசாயம், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் பயன்படுத்தி வருவதால், தேனீக்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
அவற்றைக் காக்கவும் மீட்டெடுக்கவும் வேண்டிய காலத்தின் கட்டாயம் தற்போது அவசியம். கடைப்பிடிக்கப்படுகிறது.
கருத்துகள்