ஜி ஸ்கொயர் எனும் தனியார் கட்டிடங்கள் கட்டுமானப்பணி செய்த பிறகு விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் நிறுவனம் சார்பில் புருஷோத்தமன் குமார் எனும் நபர் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் 2002 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்
ஜூனியர் விகடன் பத்திரிக்கை நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் மற்றும் ஆசிரியர் நிருபர் மற்றும் தொடர்புடைய சவுக்கு இணைய தளம் சங்கர், யூடியூபர் மாரிதாஸ் ஆகியோர் பெயர்கள் குற்றஞ்சாட்டில் சேர்த்துள்ள நிலையில்.
தற்போது காவல்துறையில் புகார் கொடுத்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது ஏற்கெனவே வழக்கறிஞர் மூலமாக அறிவிக்கை அனுப்பியதற்கு விகடன் நிறுவனம் பதிலளித்திருக்கும் நிலையில் அதே உள்ளடக்கத்தை கொஞ்சம் கூடுதலாக புகாரில் சேர்த்து காவல் துறையிடம் வழங்கியுள்ளனர். புகாரின் உண்மையை முழுமையாக விசாரிக்காமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதன் பின்னணி குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. சென்னையிலிருந்து செயல்படும் ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக கெவின் என்ற நபரை காவல்துறை கைதுசெய்த, சென்னை மயிலாப்பூர் இ-1 காவல் நிலையத்தில் அந்தப் புகாரில் தங்களுடைய நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஜூனியர் விகடன் இதழும் அதன் இணையப் பதிப்பும் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிப்பித்துவருவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், கெவின் என்ற நபர் ஜி ஸ்கொயரின் உரிமையாளரான ராமானுஜத்தை ஜனவரி 18 ஆம் தேதி இரவு ஒன்பதே கால் மணியளவில் தொலைபேசியில் அழைத்து, ஜூனியர் விகடன் இதழின் உரிமையாளர் பி. ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் சார்பாக பேசுவதாகக் கூறியிருக்கிறார். அப்படிப் பேசும்போது, பத்திரிகையின் உரிமையாளருக்கு தன் மூலமாக 50 லட்ச ரூபாயை வழங்காவிட்டால், வாரமிருமுறை இதழின் அடுத்தடுத்த இதழ்களில் ஜி ஸ்கொயரின் புகழைக் குலைக்கும் விதத்தில் கட்டுரைகள் வெளியாகுமென்று கூறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மிரட்டலை உறுதிப்படுத்தும் விதமாக, ஒரு புகைப்படத்தை அனுப்பியதாகவும் அதில் அடுத்த நாள் வெளிவரவிருக்கும் இதழின் படம் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் ஜி கொயர் நிறுவனம் தொடர்பான அவதூறான கட்டுரை இடம் பெற்றிருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
"கெவின் காட்டிய ஸ்க்ரீன் ஷாட்டில் இருந்ததைப் போலவே அடுத்த நாள் வெளியான வரமிருமுறை இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. ஆகவே, ஜூனியர் விகடனின் உரிமையாளரின் சார்பிலேயே கெவின் எங்களை மிரட்டியிருக்கிறார்" என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
கெவின் மறுபடியும் ராமானுஜத்தை அழைத்து, மாதம் ஐம்பது லட்ச ரூபாய் வழங்காவிட்டால் அடுத்தடுத்து வரும் ஜூனியர் விகடன் இதழ்களில் மேலும் மோசமான கட்டுரைகள் இடம்பெறுவதோடு, சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்ற யு டியூபர்கள் மூலமும் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுமென மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுபோல கட்டுரைகள் வெளியானதால் தான் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர் என்ற நிறுவனம் நாசமடைந்து அதன் உரிமையாளர் தற்கொலை செய்ய நேர்ந்ததென கவின் பெருமையடித்துக் கொண்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெவின் மிரட்டினாலும் கூட தாங்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால், ஜூனியர் விகடன் இதழில் தொடர்ச்சியாக தங்கள் நிறுவனத்தைப் பற்றி மோசமான கட்டுரைகள் வெளியானதாகவும் இதற்குப் பிறகு ஜூனியர் விகடனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த மே மாதம் 9ஆம் தேதியன்று ராமஜெயம் அலுவலகத்தில் இல்லாத போது, தங்கள் அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை கெவின் அனுப்பியதாகக் கூறியிருக்கிறார். எதற்காக என்று கேட்டபோது "கெவின் கேட்ட ஐம்பது லட்சம் ரூபாயை மாமூலாக மாதா மாதம் கொடுக்கவில்லை என்றால் உங்களது நிறுவன இயக்குநரைப் பற்றி மேலும் சர்ச்சைக்குரிய பதிவுகளையும் செய்திகளையும் ஜூனியர் விகடன் இதழிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவோம் என்று மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதம் 15 ஆம் தேதி யூடியூபரான மாரிதாஸ் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தங்களுடைய நிறுவனத்தைப் பற்றி மிக மோசமான தகவல்களைக் கூறியிருந்ததாகவும் அந்த வீடியோ கெவினின் மிரட்டலின் தொடர்ச்சியாகவே வெளியிடப்பட்டதென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புகாரை அடுத்து, மைலாப்பூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த காவல்துறை, கெவின், அடையாளம் தெரியாத ஒரு நபர், ஜூனியர் விகடனோடு தொடர்புடையவர்கள், ஜூனியர் விகடனின் செய்தியாளர், ஆசிரியர், மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்குப் பிறகு உடனடியாக கெவின் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால், இந்த வழக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரக் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன."ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகை இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை எஃப்ஐஆரி லிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என காவல்துறை அறிக்கை, நல்ல அதிகாரிகள் பல சமயங்களில்
பொதுவாக குற்றம் தொடர்பாய் பூர்வாங்க ஆதாரங்கள் வலுவாக இருக்கும்போது அநியாயத்திற்கு அவசரம் காட்ட மாட்டார்கள்.
கொஞ்சம் இடைவெளி விட்டு நிதானமாய் நடவடிக்கையில் இறங்குவார்கள். இந்த இடைவெளியில் தான் இன்னும் பல விஷயங்கள் வந்து வசமான ஆதாரங்கள் மாட்டும். இந்த நடவடிக்கை, குற்றவாளிகள் தப்ப முடியாத அளவுக்கு கண்டிப்பாக கழுத்தை நெரித்தே தீரும்..
பிளாக் மெயில் தொடர்பாக பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொல்கிறது காவல்துறை. முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள்