நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல் தமிழகத்தின் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டிற்கான மொத்த மாநிலங்களவை உறுப்பினர் 18. இதில் திமுக 10 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும் வைத்துள்ளதில் திமுக உறுப்பினர்கள் 3 பேர், அதிமுக உறுப்பினர்கள் 3 பேருக்கான இடங்களுக்குமான பதவிக்காலம் ஜூன் மாதம் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்த பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிற நிலையில்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவின் 4 இடங்களில், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மற்ற 3 இடங்களுக்கு தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரின் பதவிக்காலம் ஓராண்டுக்குள் நிறைவு பெற்றதால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு அமைச்சர் பதவி பிரதிநிதிகள் வழங்கப்படவில்லை என்ற நோக்கில் வடக்கு மாவட்டச் செயலாளரான கல்யாண சுந்தரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்