முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் மகனுக்கு சொந்தமான எட்டு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னை டெல்லி மும்பை உள்ளிட்ட எட்டு இடங்களில் சிபிஐ அதிகாரிகளின் சோதனை நடைபெறுகிறது.
ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பான இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளனமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதனை கணக்கில் வைத்துகொள்ள வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவாஜி படத்தில் வரும் வசனம் போல பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டு சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு வழக்கில் 2019 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், கார்த்திக் சிதம்பரம் தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திவருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இல்லம், மும்பை, டெல்லி என எட்டு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
கருத்துகள்