முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கைலாசாவில் நித்தி அடைந்த சமாதி நிலை முக்தியா அல்லது சித்தியா தப்பிக்க யுத்தியா ?

 'எவரிடம் விளையாண்டாலும் சிவனிடம் விளையாட்டு வேண்டாம்', என்பதே சிவநெறி . 'சிவன் சொத்து குல நாசம்' இது பழமொழி.  எல்லோரையும் ஏமாற்றி கைலாஷ் நாடென ஏமாற்றி வந்த நித்யானந்தாவை தற்போது உண்மையான கைலாசநாதர் அழைக்கும் தகவல் தான் எங்கும் பேசப்படுகிறது   


நித்தியானந்தா வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளாக பின்வருவன அவரது அமைப்பு சார்ந்த தரவுகளால் முன்வைக்கப்படுகின்றன:  பன்னிரண்டு வயதில் திருவண்ணாமலை அடிவாரத்தில் 1990 ஆம் ஆண்டு மே மாதம் 31 பௌர்ணமி 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடைந்ததாகவும் பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரதேசி வாழ்க்கையினைத் தொடர்ந்ததாகவும் இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து  ஆன்மீக பயணம். திபெத் வரை சென்றதாக இமயமலையில் ஞான அனுபூதி முக்தி எனும் பேரானந்த நிலையினை, 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அடைந்ததாகவும் தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற நிறுவனம் ஆரம்பித்தார். அது 800 கிளைகளுடன் 21 நாடுகளில் உள்ளதாகத் தகவல்.

மதுரையிலிருக்கும்  மதுரை ஆதீனம் 293- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என நித்தியானந்தரை முன்னால் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தனது வாரிசாகவும் 293 வது மதுரை ஆதீனமாகவும் அறிவித்தார் பின்னர் விலக்கிக் கொண்டார்.  இந்நியமனத்திற்கு பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவியதையடுத்து, 19, அக்டோபர், 2012 ல் முதல் நித்தியானந்தரை வாரிசுப் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். நடிகை ரஞ்சிதாவும் சுவாமி நித்தியானந்தாவும் நெருக்கமான காணொளியை 2010, மார்ச் 2 ல் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியதன் தொடர்ச்சியாய் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள கோகலம் மாவட்டம் கர்கியில்  நித்தியானந்தாவை கர்நாடக காவல்துறையினர் ஏப்ரல் 21, 2010 ல் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், பிடதியில் அமைந்துள்ள நித்யானந்தா தியான பீடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முன் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பீடாதிபதி நித்யானந்தா மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டன, சூன் 7, 2012 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது செய்தியாளரைத் தாக்கியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பல இயக்கங்கள் போராட்டம் நடத்தின. ஆசிரமம் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் அப்போதைய முதல்வர், சதானந்த கவுடா ஆசிரமத்தை மூட உத்திரவிட்டார். நித்தியானந்தாவை கைது செய்யவும், அவரது ஆசிரமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு உத்தரவிட்டதன் காரணமாக அவர் தலைமறைவானதாக செய்திகள் வந்த நிலையில்,  ராமநகரம் அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜரானார். ராமநகரம் மாவட்ட நீதிமன்றம், நித்யானந்தருக்கு மறுநாளே ஜாமீன் வழங்கியது.அவர் ஜாமீனில் விடுதலையான சிறிது நேரத்தில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு தொடர்ந்த உள்மாநில பாதுகாப்பு காவல்துறை மீண்டும் கைது செய்தனர். நித்யானந்தா ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, மைசூர் சிறையில் நித்யானந்தர் அடைக்கப்பட்டார்.  ஜாமீனில் வெளியே வந்தார் பின்னர் அவர் ஒரு  தீவிற்கு “கைலாசா” என்று பெயரில் தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதில், நித்தியானந்தா அமர்ந்திருப்பது போல் தனிக்கொடி, தேசியப் பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம் என ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் பதிவிட்டார்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை தேடிவந்தனர். இவர் ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியதாகவும், அதற்கு தனி நாடு அந்தஸ்திற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.           இந்தத் தீவில் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக இரண்டு கலரில் பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு அதற்கான தகுதியும் வெளியிடப்பட்டது தொடர்பாக இங்கிலாந்திலிருக்கும் ஈக்வடார் தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ செய்தி ஒன்றை வெளியிட்டார்.   இவரது கோரிக்கையை ஆய்வு செய்த பின்னர், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தற்காலிக விசா இவருக்கு வழங்கப்பட்டதையடுத்து ”அகதி” அந்தஸ்து வழங்கக் கோரி நித்யானந்தா செய்த விண்ணப்பத்தை ஈக்வடார் தேசிய ஆணையம் நிராகரித்து விட்டது.




இதனால் அதிருப்தி அடைந்த நித்யானந்தா ஈக்வடார் நாட்டின் நீதித்துறையிடம் முறையீடு செய்தார். இதன் தொடர்ச்சியாக  ஈக்வடார் நாட்டிலிருந்து வெளியேறினார். அப்போது ஹைதி தீவிற்கு தான் போகிறேன் என்று கூறிச் சென்றார். கைலாசா” என்ற தீவு ஈக்வடார் நாட்டில் இல்லை. ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை. அவருக்கு நிலம் வாங்கவோ, தஞ்சம் புகவோ ஈக்வடார் அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்று தெரிவித்த நிலையில் இந்தியக் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா அமெரிக்கா அருகே உள்ள தீவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.


முதல்முறையாக ஈக்வடார் நாட்டுக்கு சுற்றுலா விசாவில் வந்ததாகவும் துறைமுக நகரான குயாக்சூல் அருகே தஙகியிருந்தார் என்றும் தெரிவித்தது. மேலும் அகதியாக ஏற்றுக்கொள்ளுமாறு தங்களிடம் நித்யானந்தா விண்ணப்பித்ததாகவும் அவரது மனுவை பரிசீலிக்கும் வரை தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு கூறியது.மேலும் இதன்படி நித்யானந்தா ஆகஸ்ட் 2019 வரை ஈக்வடார் நாட்டில் இருந்ததாகவும் ஆனால் திடீரென அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் ஈக்வடார் அரசு தெரிவித்துள்ளதும் இங்கு கவனிக்க வேண்டும்.   விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போத அவர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் அடுத்து செல்லும் இடம் கரீபியன் கடல் அருகே உள்ள ஹைதி என்ற தீவு என குறிப்பிட்டு இருந்ததாகவம் ஈக்வடார் அரசு கூறியுள்ளது. இதனிடையே நித்யானந்தா யூடியூப்பில் வீடியோ மூலம் தினமும் பேசும் கணிணியின் ஐபி முகவரியை முன்பே காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அந்த முகவரி பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியானா மாகாணத்திற்கும் இடையில் உள்ள ஏதோ ஒரு தீவாக இருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து நித்யானந்தாவை கைது செய்ய அப்போது குஜராத் காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பின்னர் நடவடிக்கை இல்லை  எக்குவடோர் (Ecuador) தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு . வடக்கில் கொலம்பியாவும், கிழக்கிலும் தெற்கிலும் பெருவும் இதன் அண்டை நாட்டு எல்கை. மேற்கில் பசிபிக் பெருங்கடல்.

எக்வடோர் குடியரசு தற்போது ஈக்குவடோர் என அழைக்கப்படும் நாடு முன்னர் அம்ரி இந்தியன் குழுக்களின் தாயகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக இன்கா பேரரசுடன் 15 ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டது.16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி எசுப்பானியர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது, 1820 ஆம் ஆண்டு பெரிய கொலம்பியாவின் பாகமாக விடுதலை பெற்றதிலிருந்து 1830 ஆம் ஆண்டில் இறையாண்மையுள்ள தனி நாடாக விடுதலையடைந்தது.  

.அமெரிக்கா தயவு வைத்தால், ஐ.நா.அவையின் ஒத்துழைப்புடன் புது நாடு உருவாக்கப்படும் என்பதற்கு இந்தோனேஷியாவிலிருந்து 2002ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட கிழக்கு தைமூரும், சூடானிலிருந்து 2011 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட தெற்கு சூடானும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்த இரண்டு நாடுகளும் தங்களின் விடுதலைக்காக நடத்திய உள்நாட்டுப் போராட்டங்கள் நெடிய வரலாறு கொண்டவை. அதனை உலக அரசியல் கண்ணோட்டத்தில் தனக்கான சாதக-பாதகங்களின் அடிப்படையில் அமெரிக்கா அணுகியதன் விளைவாகவும், ஐ.நா.அவையின் உறுப்பு நாடுகள் பல ஆதரவளித்ததன் காரணமாகவும் தனி நாடுகளாயின.   சாமியார் நித்தியானந்தா ஒளிந்திருப்பது தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான். பூமிப்பந்தில் உள்ள பெருங்கடல்களிலேயே பெரியது பசிபிக் பெருங்கடல். அதில் உள்ள ஏராளமான சிறிய தீவு நாடுகளில் ஒன்று பப்புவா நியூ கினியா. இது ஆஸ்திரேலியாவுக்குப் பக்கத்தில் உள்ளது. கடல் வழி கண்டுபிடித்த ஐரோப்பியர்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் குடியேறியது போல பப்புவா நியூ கினியாவிலும் டச்சுக்காரர்கள், பிரெஞ்சுகாரர்கள், பிரிட்டிஷார் என மாறி மாறிக் குடியேறினர். ஜெர்மனியர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள் எனப் பலரும் தங்கள் ஆளுகையில் வைத்திருந்தனர். பின்னர், அது ஆஸ்திரேலியாவிடமிருந்து 1975 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. இந்த நிலையில் தற்போது இப் பகுதியில் எங்கோ ஒளிந்திருக்கும் நித்யானந்தா  தற்போது உள்ள நிலை தான் சமாதி நிலையில் உள்ளதாக வெளிவந்த செய்திகள் தான் அதில் அவர் தனக்கு 


27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிரபஞ்ச சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். 18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது” என்று ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால் இவரது குற்றங்கள் வெளிநாடுகளிலும் தெரியவரவே அங்கிருந்து வரும் வருமானம் குறைந்ததோடு, கடந்த ஆண்டுகளில் கொரோனா பரவல்  தாக்கத்தினால் பல இடங்களின் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் கைலாசா.என்ற ஒரு போலியான தீவும்  பஞ்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. முறையான இந்திய உணவு பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் அவரது கைலாசாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமீபத்தில் அங்கிருந்து தப்பித்துவந்த அவரின் ஒரு சீடர் தெரிவித்திருந்தார். இதனை உண்மையென அறிவிக்கும் நிலையில், தற்போது நித்தியானந்தாவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அவரது மொழியில் கூறவேண்டுமானால் ஒரு மனிதனை அடி அடி என்று அடித்தால் எங்கே போவது . திருக்கோவிலூரில் பிறந்து திருவண்ணாமலை அடிவாரத்தில் கைமுதலின்றி இருந்த ஒரு சன்யாசி அல்லது பரதேசி தங்கக் கீரீடம் சூடி எல்லாவற்றையும் ஆசைப்பட்ட நித்தி இப்போது சமாதி நிலையில் சித்தி பெற்றாரா அல்லது முக்தி அடைந்தாரா அல்லது தப்பிக்க நடத்தும் யுத்தியா என்பது விரைவில் தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த