அஇஅதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி யின் ஊழலுக்கு உதவியதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனன் ரெட்டி உள்ளிட்ட 11 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
அஇஅதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி யின் ஊழலுக்கு உதவியதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனன் ரெட்டி உள்ளிட்ட 11 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
மாநகராட்சிப் பணிகளுக்கு 'டெண்டர் விட்டதில் முறைகேடுகளுக்காக, அ.இ.அ.தி.மு.க.வின் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கைதாகலாமென்ற நிலையில், இலஞ்ச ஒழிப்பு துறையில் பேசப்படுகிறது. அவரது பதவிக் காலத்தில், ஊழல் மற்றும் இலஞ்ச இலாவன்ய முறைகேடுகளுக்கு உடந்தையான இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் மீது, வழக்கு பதிவு செய்த, ' ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர். அதற்கு அனுமதி கேட்டு, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது அறிந்த நிலையில்
அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், சென்னை, கோயமுத்தூர் மாநகராட்சிகளில், 'திறன்மிகு நகரம்' உள்ளிட்ட பல திட்டங்களில் நடந்த, 811 கோடி ரூபாய் பணிகளுக்காக 'டெண்டர்' விடப்பட்டதில் முறைகேடு நடந்ததால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எழுந்த புகார் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர், அ.இ.அ.தி.மு.க. வின் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது சாலைகள் அமைக்கும் பணிகள், வேலுமணிக்கு நெருக்கமான ஒரு நிறுவனத்திற்கு, முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும்.
அதோடு 2017 - 18 ஆம் ஆண்டு நகர்ப்புற ஆராம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், செவிலியர்களை நியமித்ததிலும், முறைகேடு நடந்ததாக, புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர், வேலுமணியின் வீடு அவரது உறவினர்களின் வீடுகளில் முன்பே சோதனை நடத்தியதில் பல ஆவணங்களைப் கைப்பற்றி ஆய்வு செய்த நிலையில், டெண்டர் முறைகேட்டில், தற்போது நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, பல அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதும் தெரிய வந்தது.
முன்பு சென்னை மாநகராட்சியின் ஆணையராகயிருந்த பிரகாஷ், துணை ஆணையர்களாக இருந்த கந்தசாமி, மற்றும் தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக உள்ள மதுசூதனன் ரெட்டி, கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன், சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்த நந்தகுமார், முதன்மைப் பொறியாளராக இருந்த புகழேந்தி, தலைமைப் பொறியாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஊழல் முறைகேட்டுக்கு உதவியதாக ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய, போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ள சூழ்நிலையில்
ஏற்கனவே இந்த வழக்கில், பத்து வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றம், 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்.,கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி, தமிழ் நாடு அரசுக்கு, ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கடிதமெழுதி உள்ளனர்.தற்போது போதிய ஆதாரங்கள் இருப்பதால், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய அரசு அனுமதி அளிக்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அரசு அனுமதி அளித்த பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இலஞ்ச ஒழிப்பு துறையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு. ஊழல் முறைகேடுகளுக்கு உதவியது உறுதியானால் அவர்களைக் கைது செய்யவும் தயாராக உள்ளனர்.மேலும், அவர்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் கைது செய்யப்படுவாரென, லஞ்ச ஒழிப்பு துறை சார்ந்த தகவல் கூறுகிறது.
இந்த தகவல், வேலுமணி தரப்பில் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தரப்பில் அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்