விவசாயத்துறை அமைச்சகம் பிரிக்ஸ் நாடுகளின் விவசாய அமைச்சர்களின் 12-வது கூட்டத்தில் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி. ஷோபா கரந்த்லாஜே பங்கேற்பு
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் விவசாயத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 12-வது கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் சீனா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் விவசாயத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி.ஷோபா கரந்த்லாஜே கலந்து கொண்டார். அப்போது, விவசாயத்துறை மேம்பாடு, விவசாயிகளின் நலனுக்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள பிஎம் கிசான், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், பீமா யோஜனா உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை சுட்டிக்காட்டினார்.
வேளாண்மைத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை அதிகரிக்க வேளாண் அமைச்சகம் அண்மையில் மேற்கொண்ட முயற்சிகளை அமைச்சர் குறிப்பிட்டார்.
நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதன் மூலம் பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் இயற்கை வளங்களை பயன்படுத்தி விவசாய உற்பத்தியையும். உற்பத்தித் திறனையும் அதிகரிப்பது ஆகியவற்றில் இந்தியா உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார்.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ஐ பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட அனைவரும் ஆதரிக்கவும், கொண்டாடவும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
கருத்துகள்