பாதுகாப்பு அமைச்சகம் புதிய சைனிக் பள்ளிகளில்
2 ஆம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம்
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 10 சைனிக் பள்ளிகளில் உள்ள 534 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் இணைய தளத்தை சைனிக் பள்ளி சங்கம் இன்று முதல் திறந்துள்ளது. இந்த https://sainikschool.ncog.gov.in/ecounselling இணையதளம் ஜூன் 26, 2022 வரை திறந்திருக்கும்.
அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு – 2022 இல் தேர்வாகி பள்ளிகளில் இணைந்தவர்கள், முதல் சுற்றில் இடம் ஒதுக்கியும், அதற்கு விருப்பமில்லாதவர்கள், முதல் சுற்றில் தேர்வாகி சம்பந்தப்பட்ட பள்ளியில் இணைந்து பள்ளியில் கட்டணத்தை செலுத்தாதவர்கள் ஆகியோர் 2 ஆம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. இதில் 3 பள்ளிகள் வரை மாணவர்கள் தேர்வு செய்ய முடியும்
கருத்துகள்