குடியரசுத் தலைவர் செயலகம் குடியரசுத்தலைவர் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்
குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஜூன் 3-ம் தேதி அவரது சொந்த கிராமமான கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள பராங்க் செல்கிறார். அங்கு அவர் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.
ஜூன் 4-ம் தேதி கான்பூரில் உள்ள உத்திரப்பிரதேச வர்த்தக சபையின் 90-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அதே நாளில் கோராக்பூரில் உள்ள கீதாபிரசின் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்க உள்ளார்
ஜூன் 5-ம் தேதி மகர் செல்லும் குடியரசுத்தலைவர் சந்த் கபீர் தாசுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
ஜூன் 6-ம் தேதி உத்திரப்பிரதேச சட்டசபையில் நடைபெறும் சிறப்புக் கூட்டு கூட்டத் தொடரில் குடியரசுத்தலைவர் உரையாற்ற உள்ளார் .
கருத்துகள்