சென்னை விமான நிலையத்தில் ரூ.59.26 லட்சம் மதிப்புள்ள 1.275 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஃபாத்திமா ரிஃபாயா, ஃபாத்திமா நவியா, ஃபாத்திமா அஃப்ரா ஆகிய மூன்று பெண் பயணிகளை வழிமறித்து சுங்கத்துறை புலானாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது மூன்று பயணிகளும் தங்களது உள்ளாடை மற்றும் ஹேர் பேண்டுகளில் பசை வடிவில் மறைத்து கடத்திவந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.59.26 லட்சம் ஆகும்.
இந்த கடத்தல் தொடர்பாக ஃபாத்திமா ரிஃபாயா என்ற பயணி கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் திரு வி பழனியாண்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்