பரவலான வளம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும்
‘8 ஆண்டு சீர்திருத்தங்களை' பிரதமர் பகிர்வு
ரவலான செழிப்பைப் பரப்பவும், தொழில்முனைவை ஊக்குவிக்கவும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும் கடந்த 8 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் விவரங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். மைகவ் (MyGov) சுட்டுரை தொடர், அவரது இணையதளம் மற்றும் நமோ செயலியிலிருந்து கட்டுரைகளை அவர் பகிர்ந்தார்
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“ ‘சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்' என்ற கோட்பாட்டால் வழிநடத்தப்பட்டு, ‘எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை' மேம்படுத்தும் ஏராளமான சீர்திருத்தங்களை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதேவேளையில், வளர்ச்சியின் வேகத்திற்கு தடையாக இருந்த பல்வேறு வழக்கற்ற சட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன. #8YearsOfReforms”
“பரவலான வளம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக விரிவான சீர்திருத்தங்கள்.#8YearsOfReforms”
கருத்துகள்