குடியாத்தம் கூட்டுறவு வங்கிக் கிளையில்.மேலாளர் போலியான ஆவணங்களைத் தயாரித்து ரூபாய்.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் கைது
வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் உள்ளதில். இங்கு 2018 ஆம் ஆண்டு மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மேலாளராகப் பணியாற்றியவர் உமாமகேஸ்வரி (வயது 38). இவர் பணியாற்றிய காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலியான ஆவணங்களைத் தயாரித்து ரூபாய்.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது
இது குறித்து கூட்டுறவு துறை பதிவாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு புகார்கள் சென்றதையடுத்து குடியாத்தம் கிளை வங்கியில் தணிக்கை செய்யப்பட்டதன் முடிவில் உமாமகேஸ்வரி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அதன் மீது காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் உமாமகேஸ்வரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
உமாமகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
கூட்டுறவு வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்ட மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கருத்துகள்