சட்டவிரோத கடன் செயலி முகம் தெரியாத கும்பலின் மோசடி கலந்த அடாவடிகள். ரூ.2,500 கடன் கொடுத்து பின்னர் ரூ.35,000 கேட்டு மிரட்டல்
சட்டவிரோத கடன் செயலி மூலமாக பெற்ற ரூ.2,500 கடனுக்கு, ரூ.35,000 கேட்டு ஆன்லைன் கடன் மோசடி கும்பல் மிரட்டியுள்ளது. பணத்தைக் கட்டாததால் பணம் பெற்றவரின் குடும்பத்தினரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டியுள்ளது அந்தக் கும்பல்.
சட்டவிரோத கடன் செயலி மூலம் கடன் கொடுத்த கும்பல், பணத்தை திருப்பி செலுத்தாததால் பணம் பெற்றவரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரது நம்பர்களுக்கும் அனுப்பி மிரட்டியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியருக்கு அவசரமாக ரூ.2,500 பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது நொடியில் பணம் கிடைக்குமென சமூகவலைத்தளங்களில் வந்த விளம்பர லிங்கினைப் பார்த்து சட்டவிரோத கடன் செயலியான ' kreditBee' என்ற கடன் செயலியைத் தரவிறக்கம் செய்யும் பொது செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளைக் கோரியுள்ளது. அந்த அனுமதியைக் கொடுக்காவிட்டால் செயலியைத் தரவிறக்கம் செய்ய முடியாததால் அனைத்திற்கும் அவர் அனுமதி அளித்துள்ளார். அதன் பிறகு ரூ.2,500 கடன் கேட்டு அந்த செயலியில் விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்த உடனே பணம் வரும் என கூறப்பட்ட நிலையில் பணம் வராததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார். இந்தநிலையில் ஒரு வாரத்துக்கு பின்னர் மாநகராட்சி ஊழியருக்கு வாட்ஸ்அப் மூலமாக வடமாநில கும்பல் ஒன்று போன் செய்துள்ளது. 'தாங்கள் பெற்ற ரூ.2,500 கடன் பணத்தை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்ததால் ரூ.1000 வட்டியுடன் சேர்ந்து உடனடியாகச் செலுத்துமாறு தெரிவித்துள்ளது.
ஆனால், தனக்கு பணம் வரவில்லை என மாநகராட்சி ஊழியர் கூறியுள்ளார். தங்கள் பணத்தை அனுப்பிவிட்டதாக கூறிவிட்டு என்னும் 10 நிமிடங்களில் பணத்தை நாங்கள் அனுப்பும் லிங்க் மூலமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மாநகராட்சி ஊழியர் வாங்கிக்கு சென்று விசாரித்தபோது கடனுக்கு விண்ணப்பித்த 3 நாட்கள் கழித்து ரூ.2,500 அவரது வங்கிக்கணக்கில் வரவு வைத்தது தெரியவந்துள்ளது.
உடனே அவர் வட்டியுடன் சேர்த்து அவர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக ரூ.3,500 செலுத்த முயன்ற போது அந்த லிங்க் கலவாதியானதால் அவரால் பணத்தைச் செலுத்த முடியவில்லை. அதையடுத்து மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட வடமாநிலக் கும்பல் குறித்த காலத்தில் வட்டியுடன் பணத்தை செலுத்தாததால் அபாரதத்துடன் சேர்ந்து ரூ.35,000 செலுத்த வேண்டுமெனக் கூறியுள்ளது.
அதனால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஊழியர் ரூ.3,500 பணத்தை செலுத்துவதாகக் கூறியுள்ளார். அனால் அதனை ஒப்புக்கொள்ளாத அந்தக் கும்பல் ரூ.35,000 ஐச் செலுத்துமாறு வலிறுத்தவே. அவ்வளவு பணம் தன்னிடத்திலில்லை எனக் கூறி பணத்தைச் செலுத்தாமல் இருந்திருக்கிறார் அவர்.
அதையடுத்து அவரது செல்போனிலிருந்த குடும்ப புகைப்படைத்த எடுத்து, அவரது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த நம்பர்களுக்கு ஆபாசமாகச் சித்தரித்து அந்தப் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டு கேட்டதால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஊழியர், மனஉளைச்சலுக்கு ஆளாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த புகார் குறித்து விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர். சைலேந்திர பாபு இ.கா.ப. வெளியிட்டுள்ள காணொளியில், "ஆன்லைன் Fraud-ஐப் பத்தி தொடர்ந்து நாம பேசிட்டிருக்கிறோம். இப்ப சமீப காலத்தில் சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு பயங்கரமான ஆன்லைன் மோசடி நடந்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன்ல உங்களுக்கு லோன் வாங்குறத்துக்காக, லோன் ஆப் நிறைவ வந்திருக்கு. அந்த லோன் ஆப் நீங்க டவுன்லோடு பண்ணிட்டு, லோன் அப்லே பண்ண சொல்லுவாங்க. அப்ளே பண்ண சொல்லும் போது அதே மாதிரி உங்களுடைய கான்டெக்ட்ஸ் லிஸ்ட்ல நாலஞ்சு பேரச் சொல்லுங்க, அவங்களுடைய ஈமெயில் ஐடி கொடுங்க, கான்டெக்ட் டீடெய்ல்ஸ் கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு, லோன் அப்லே பண்ணுவீங்க. ரூபாய் 3,000, ரூபாய் 4,000, ரூபாய் 5,000 என்று லோனும் உங்களுக்கு கொடுத்துடுவாங்க. இப்போ நீங்க அனுப்பன போட்டோவ, அதை ஆபாசமாக சித்தரித்து உங்களுக்கு அனுப்பி, இந்த மாதிரி நீங்க 10,000 ரூபாய் கொடுத்துடுங்க. இல்ல, இந்த போட்டோவ உங்க கான்டெக்ட்ல இருக்கற அனைவருக்கும் அனுப்பிடுவோம். அப்படி, உங்களைப் பயமுறுத்தி ரூபாய் 10,000 வாங்குவாங்க. ரூபாய் 50,000 வாங்குவாங்க, ரூபாய் 1,00,000 வாங்குவாங்க. அப்படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி போயிடும். இந்த போட்டோவ மத்தவங்க பாத்தாங்கனா என்ன நினைப்பாங்க அப்படிங்கற மாதிரி உங்களுக்கு பயம் வந்திடும். அது உண்மையில்லை என்றாலும் மத்தவங்க நம்பமாட்டாங்க. இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் உங்களைச் சிக்க வைச்சி, பிளாக் மெயில் பண்ணி நிறைய பணம் வாங்கற நிகழ்ச்சி தற்போது நடந்திருக்கிறது.
காவல்துறையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துட்டு இருக்கிறார்கள். இந்த ஆப்ஸ் எல்லாம் முடக்கறத்துக்கும் முயற்சிப் பண்ணிட்டிருக்கோம். ஆனால், தொடர்ந்து பல்வேறு விதமான ஆப் எல்லாம் தொடர்ந்து வந்துட்டுத் தானிருக்கும். நீங்கள் இன்றிலிருந்து ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த செய்தியைச் சொல்றோம்" என்றும் அத்துடன் மோசடி ஆப்களின் பெயர்களைப் பட்டியலிட்ட காவல்துறை இயக்குனர் Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City loan போன்ற இந்த ஆப்கள் மோசடியான ஆப்கள். இந்த ஆப்களை எல்லாம் டவுன்லோடு பண்ணிடாதீங்க. ஒருவேளை பண்ணிடீங்கன்னா கூட, அத உடனே டெலிட் பண்ணிடுங்க. பாதுகாப்பாக இருங்க; இது தமிழக காவல்துறையினரின் வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்