போக்குவரத்துக்கு பயன்படும் எரிபொருளை சந்தைப்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியது
பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் உலகளாவிய சேவைக்கான வரம்பை, தொலைதூரப் பகுதிகளில் உள்ள சில்லரை விற்பனை மையங்கள் உள்ளிட்ட அனைத்து சில்லரை விற்பனை மையங்களையும் உள்ளடக்கியதாக அரசு நீட்டித்துள்ளது
போக்குவரத்துக்கு பயன்படும் எரிபொருளை சந்தைப்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. எரிபொருள் சில்லரை வர்த்தகத்தில், தனியார் துறையினர் அதிகளவில் பங்கேற்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். அதேவேளையில், தொலைதூரப் பகுதிகளில் சில்லரை விற்பனை மையங்கள் அமைக்கப்படுவதையும் இது உறுதி செய்யும்.
தொலைதூரப் பகுதிகளில் அமைக்கப்படும் சில்லரை விற்பனை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக இருப்பதோடு, தரமான மற்றும் நுகர்வோருக்கு தடையற்ற எரிபொருள் விநியோகம் கிடைக்கச் செய்ய, அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உலகளாவிய சேவை வாயிலாக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கருத்துகள்